நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெள்ளி விழா கண்ட 8 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்... வருமானம் எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் எட்டு வரி சேமிப்பு திட்டங்கள் 25 ஆண்டு கள் கடந்து வெள்ளி விழா கண்டிருக்கின்றன. இந்த 25 ஆண்டுகளில் அனைத்து இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளும் பணவீக்க விகிதத்தைவிட கூடுதல் வருமானத்தைதான் தந்திருக்கின்றன. இந்த ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 9.5% தொடங்கி, 23% வரை வருமானம் கொடுத் திருக்கின்றன.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

25 ஆண்டுகள் நிறைவு...

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை, மொத்தம் 37 வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களைக் கொண்டுள்ளன. இதில் எட்டு ஃபண்டுகள் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக் கின்றன. இதில் டாப் ஆறு ஃபண்டுகள் 15% முதல் 23% வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன.

இந்த டாப் ஃபண்டுகள் தந்த வருமானத்தின் அடிப்படையில், முதல் இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 23.30% வருமானத்தைத் தந்துள்ளது.

அடுத்த இடத்திலிருக்கும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ஆண்டுக்கு சராசரியாக 22% வருமானத்தைத் தந்திருக்கிறது. அடுத்த இடங்களில் டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.45%), சுந்தரம் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.20%), எஸ்.பி.ஐ லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (16.10%) உள்ளன. மற்ற ஃபண்டுகள் தந்திருக்கும் வருமானத்தைத் தெரிந்துகொள்ள அட்ட வணையைப் பார்க்கவும்.

25 ஆண்டுகளைக் கடந்த எட்டு ஃபண்டு களும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன. ஃபண்டுகள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட்

இந்த ஃபண்ட் மிகவும் பழைமையான வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்ட் ஆரம்பித்து 29 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரி 15% வருமானம் கொடுத்திருக்கிறது. ஆனால், இதன் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.4,198 கோடியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பல ஃபண்ட் மேனேஜர்கள் மாறி இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் எட்டு ஃபண்ட் மேனேஜர்கள் மாறியிருக்கிறார்கள். இவ்வளவு மாற்றங்கள் நடந்தும் இந்த ஃபண்ட் 15% வருமானம் தந்திருக்கிறது.

எஸ்.பி.ஐ லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் 

இதுவும் மிகவும் பழைமையான வரி சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட அதே ஆண்டில்தான் இந்த ஃபண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஃபண்ட் மூலம் ரூ.11,201 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 16.10% வருமானம் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் இந்த ஃபண்டின் பழைய பெயர் மேக்னம் டாக்ஸ் கெயின் ஃபண்ட் ஆகும்.

வெள்ளி விழா கண்ட 8 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்... வருமானம் எப்படி?

ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்

கடந்த 26 ஆண்டுகளாக இந்த ஃபண்ட் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 22% வருமானம் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் மூலம் ரூ.14,201 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வரி சேமிப்பு ஃபண்டுகளில் இதுதான் மிகப் பெரிய ஃபண்ட் ஆகும்.

ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்ட்

இந்த ஃபண்ட் ஆரம்பிக்கப் பட்டு 26 ஆண்டுகள் ஆகின்றன. வரி சேமிப்புத் திட்டங்களில் மிக அதிக வருமானத்தை இந்த ஃபண்ட்தான் தந்திருக் கிறது. ஆண்டுக்கு சராசரியா, 23.30% வருமானம் கொடுத் துள்ளது.

இந்த ஃபண்ட் மூலம் ரூ.9,788 கோடி நிர்வகிக்கப் பட்டு வருகிறது. மற்ற வரி சேமிப்பு ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் அதிக மாற்றத்துக்கு உள்ளாக வில்லை. அதுவே இந்த ஃபண்டின் அதிக வருமானத் துக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

சுந்தரம் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் 

இந்த ஃபண்ட் திட்டமும் கடந்த 26 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதிக மாற்றத்துக்கு உள்ளான வரி சேமிப்பு ஃபண்ட் திட்டம் இதுவாகும். இந்த ஃபண்ட் திட்டத்தின் பெயர் தொடங்கி ஃபண்ட் நிறுவனம், ஃபண்ட் மேனேஜர் என ஏகப்பட்ட மாற்றத்தை சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த ஃபண்டின் பெயர் பிரின்சிபல் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் என்பதாக இருந்தது.

இவ்வளவு மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு 18.20%  வருமானம் கொடுத்துள்ளது இந்த ஃபண்ட். நிர்வகிக்கும் தொகை ரூ.969 கோடியாக உள்ளது.

டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் 

இந்த ஃபண்ட் 1996–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 18.45% வருமானம் தந்து வருகிறது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.3,119 கோடியாக உள்ளது.

டாரஸ் டாக்ஸ் ஷீல்டு ஃபண்ட்

இந்த ஃபண்ட் 1996–ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 11.35% வருமானம் தந்து வருகிறது.

 இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.62 கோடியாக உள்ளது. நிர்வகிக்கப்படும் தொகை குறைவாக இருந்தாலும் இந்த ஃபண்ட் குறிப்பிட்ட காலத்தில் டாப் ஃபண்டாக இருந்தது.

எல்.ஐ.சி எம்.எஃப் டாக்ஸ் பிளான்:  

இந்த ஃபண்ட் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.425 கோடியாக உள்ளது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 9.50% வருமானம் கொடுத்துள்ளது.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் பெஸ்ட்டான சாய்ஸா?

பொதுவாக, வரி சேமிப்புக்கான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு களில் முதலீடு செய்யும்போது அதில் உள்ள நிறுவனப் பங்குகளைப் பார்த்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். மேலும், வரி சேமிப்புக்காக மேற்கொள்ளும் முதலீட்டை ஒரே ஃபண்டில் மேற்கொள்ளாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பிரித்து மேற்கொள்வது லாபரமாக இருக்கும்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் கடந்த காலத்தில் நல்ல வருமானத்தைத் தந்திருந்தாலும், அதே போன்ற வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, முதலீட்டுக்கு வரி சேமிப்பு ஃபண்டைத் தேர்வு செய்யும்போது, அதன் முதலீட்டுக் கலவையில் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஃபண்ட் திட்டங்களில் குறைந்தபட்ச மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்ய முடியும். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யும்போதே அவரவரின் வரி வரம்புக்கேற்ப 5%, 20%, 30% (பழைய வரி முறையில்) வரி மிச்சமாகி, கூடவே பணவீக்க விகித்தைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு என்பதால், அவற்றைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம்!

வெள்ளி விழா கண்ட 8 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்... வருமானம் எப்படி?

வருமான வரிச் சலுகை மற்றும் வரி அனுகூலம்!

இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளிக்கப்படும். இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டுக்கு எடுக்க முடியாது.

இண்டெக்ஸ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டை பேசிவ் பிரிவில் அறிமுகப்படுத்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த வரி சேமிப்பு ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர், எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேற்பட்ட மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.