Published:Updated:

வெள்ளி விலை இறக்கம் நீடிக்குமா? முதலீட்டுக்கு ஏற்ற தருணமா இது..?

வெள்ளி விலை
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளி விலை

S I L V E R P R I C E

வெள்ளி விலை இறக்கம் நீடிக்குமா? முதலீட்டுக்கு ஏற்ற தருணமா இது..?

S I L V E R P R I C E

Published:Updated:
வெள்ளி விலை
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச நிலையில் வர்த்தகமான வெள்ளி விலை, கடந்த புதன்கிழமை அன்று ரூ.71.40 (ஒரு கிராம்) என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளியில் முதலீடு செய்வதற்கு ஏற்ற தருணமா என்ற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

ஷியாம் சுந்தர், 
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

விலை இறக்கத்துக்கான காரணங்கள்...

உலக அளவில், பங்குச் சந்தைகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன உலகப் பொருளாதார மானது கோவிட் 19 தாக்கத்திலிருந்து ஓரளவுக்கு விடுபட்டு, மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இழந்த பொருளாதாரத்தை  மீட்டெடுப்பதற்கு அனைத்து நாடுகளும் ‘ஸ்டிமுலஸ்’ என்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் பலனாகக் கடந்த இரண்டு மாதங்களில் அடிப்படை உலோகங்கள் என்று சொல்லக்கூடிய காப்பர் அலுமினியம் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நிறுவனங்களின் செயல்பாடுகள், கொரோனா காலத்துக்கு முந்திய அளவை எட்டப்படாவிட்டாலும், அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. பொது முடக்கக் காலத்தில் அதாவது, பொருளாதாரம் ஸ்தம்பித்து காணப்பட்ட நிலையில், முதலீடுகள் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி படையெடுத்தன. தற்போது சூழ்நிலை மாறி, லாப நோக்கத்தில் முதலீடுகள் திரும்பப் பெறப்படுவதால், இந்த விலை இறக்கம் காணப்படுகிறது. கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு காப்பர் போன்ற உலோகங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றன.

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு...

சீன அமெரிக்க நாடுகளுக்கிடையே காணப்பட்ட வர்த்தகப் போரின் விளைவாக 2018 மற்றும் 2019-ல் அமெரிக்க டாலரின் மதிப்பு இறக்கத்திலேயே காணப்பட்டது. வட்டி விகிதம் குறைந்து காணப்பட்ட நிலையில், அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 90-க்குக் கீழாகக் காணப்பட்டது. அமெரிக்காவின் புதிய அதிபர் எடுத்து வரும் நடவடிக் கைகள் பொருளாதாரத்தில் சில மாற்றங் களைக் கொண்டுவந்துள்ளன. சென்ற 2020-ம் ஆண்டில் 14.7 சதவிகிதமாகக் காணப்பட்ட வேலைவாய்ப்பின்மை, பிப்ரவரி மாதத்தில் 6.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எனினும், சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாகப் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகப்  பார்க்கப்படு கின்றன. முழுமையான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், பணவீக்கம் அதிகரிப்பது பொருளாதாரத்தை பாதிக்கச் செய்யும் என்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு வட்டி உயர்வு என்பது சாத்திய மில்லை என்று கருதப்படுகின்றன. 

வெள்ளி விலை
வெள்ளி விலை

வெள்ளி சார்ந்த இ.டி.எஃப் முதலீடுகள் விலகல்...

நம் நாட்டில் கோல்டு இ.டி.எஃப் திட்டங்கள் செயல் படுவதுபோல, அமெரிக்காவில் வெள்ளி இ.டி.எஃப் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் செயல்படு கின்றன. அப்படிச் செயல்படும் நிறுவனங்களில் அமெரிக்காவைச் சார்ந்த ஐ ஷேர் சில்வர் டிரஸ்ட் நிறுவனமும் ஒன்று. (இது அங்கீகரிக்கப்பட்ட இ.டி.எஃப் நிறுவனம் இல்லை எனினும், சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்ப வெள்ளியின் விலையில் ஏற்படுகிற ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்தும் நிறுவனமாக விளங்குகிறது) சென்ற மாதத்தில், இந்த முதலீடு களில் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிறுவனத் தின் யூனிட் விலை 2020-ம் ஆண்டில் 47% வரை அதிகரித்தது. ஆனால், 2021-ல் 2% வரை மட்டுமே அதிகரித்துள்ளன. இதில் செய்யப்பட்ட முதலீடுகள் திடீரென விலக்கப்பட்டு வருவதால், அதிக ஏற்ற இறக்கங் களைச் சந்தித்து வருகின்றன.

கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு ஈர்ப்பு அதிகரிப்பு...

சென்ற வாரத்தில் அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 2021-ம் ஆண்டின் அதிகபட்ச குறியீடாக 92 எனக் காணப்பட்டது. கடந்த மாதத்தில் 90-க்கும் குறைவாகக் காணப்பட்டது குறிப்பிடத் தக்கது. டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதற்கு நேர்மாறான திசையில் பயணிக்கும். அதாவது, குறையத் தொடங்கும். அமெரிக்கக் கடன் பத்திரங்கள் மீதான வருமானம் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்க செய்தியாகப் பார்க்கப் படுகிறது. அமெரிக்கப் பொருளா தாரப் புள்ளிவிவரங்கள் சாதகமாக வரும்போது இதன் மீதான முதலீடுகள் அதிகரிக் கின்றன. 10 வருடக் கடன் பத்திரங்களின் மீதான வருமானம் ஒரு வாரத்துக்கு முன்பு 1.46% இருந்தது, சென்ற வாரத்தில் 1.6 சதவிகிதமாக அதிகரித்து வர்த்தக மானது.

தங்கம்-வெள்ளி ரேஷியோ...

தங்கம்-வெள்ளி விகிதம் என்பது தங்கத்தின் சர்வதேச விலையை, வெள்ளியின் விலை யால் வகுத்தால் கிடைப்பதாகும். தற்போதைய நிலையில், இந்த எண்ணானது 68-ஐ ஒட்டிக் காணப்படுகிறது. இந்த எண் அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ளியின் விலை குறைவாக இருப்பதாக அர்த்தம். அதே சமயம், இந்த எண்ணானது குறைந்துகோண்டே வந்தால், வெள்ளியின் விலை அதிகரித்து வருவதாக அர்த்தம். உதாரணமாக, 2011-ம் ஆண்டு இந்த எண் 40-க்கும் குறைவாக இருந்தது. அப்போது சர்வதேச விலை ஒரு அவுன்ஸ் 50 டாலரைத்  தொட்டது. 2016-ம் ஆண்டில் இந்த எண் 77-ஆகவும் (தங்கம் 1,069 டாலர்கள், வெள்ளி ஒரு அவுன்ஸ் 13.69 டாலர்கள்) 2018-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 80–ஆகவும், 2020-ம் ஆண்டில் 100-ஐ ஒட்டியும் காணப்பட்டது. தங்கம்-வெள்ளி விகிதமானது ஒப்பீட்டு முறையில் இதன் விலை அதிகமாகவோ, குறை வாகவோ வர்த்தகமாகி வருகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மற்ற காரணிகளையும் கருத்தில் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

வெள்ளி விலை இனி எப்படியிருக்கும்?

வெள்ளியின் பயன்பாடு செல்லுலார் தொழில்நுட்பம், சோலார் பேனல், தொடு திரைப் பயன்பாடு, எல்.இ.டி போன்ற தொழில் தேவைகளில் அதிகம். குறிப்பாக, உலக அளவில் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 2019-ம் ஆண்டின் சர்வேபடி, மொத்த வெள்ளி உற்பத்தியில் 26% நேரடியாக உற்பத்தி செய்யப்படு வதாகவும், மீதம் 74% மற்ற உலோகங் களிலிருந்து அதாவது காப்பர், லெட், ஜிங்க் உள்ளிட்ட உலோகங்களிலிருந்து இணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுவதால், மற்ற உலோகங்களில் ஏற்படுகிற தாக்கமானது வெள்ளியின் விலையிலும் பிரதிபலிக்கச் செய்கின்றன.

குறுகிய காலத்தில் வெள்ளி அதிக இறக்கங்களைச் சந்தித்தாலும், நீண்ட காலத்தில் மேல்நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம். ரூபாய் மதிப்பில் 10 கிராம் வெள்ளி சுமார் ரூ.65,000 வரை இறக்கமடைய வாய்ப்புண்டு. இனி வெள்ளியானது ‘என் வழி தனி வழி’ என்று செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

பிட்ஸ்

டாடா குழும நிறுவனங் களின் சந்தை மதிப்பு ரூ.17.30 லட்சம் கோடியை எட்டி, இந்தியக் குழும நிறுவனங் களில் முதல் இடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ், ஹெச்.டி. எஃப்.சி நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism