நடப்பு
பங்குச் சந்தை
இன்ஷூரன்ஸ்
Published:Updated:

எஸ்.ஐ.பி தேதி... முதலீட்டு வருமானத்தை அதிகரிக்குமா? ஒரு கணக்கீட்டு விளக்கம்...

எஸ்.ஐ.பி தேதி
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி தேதி

S I P D A T E

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், Vbuildwealth.com

அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. அதுவும் சிஸ்ட மேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் இந்த முதலீடு அதிகமாக உள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்படும் முதலீட்டுக் கணக்குகளில் (ஃபோலியோக்கள்) சுமார் 85% ஈக்விட்டி ஃபண்டுகளாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

என்.விஜயகுமார்
நிதி ஆலோசகர், 
Vbuildwealth.com
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், Vbuildwealth.com

எஸ்.ஐ.பி தேதி

ஈக்விட்டி ஃபண்டுகளின் வருமானச் செயல்பாடுகள், பங்குச் சந்தை மற்றும் நிறுவனப் பங்குகளின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருக்கிறது. முதலீட்டாளர்களில் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி, ‘‘எஸ்.ஐ.பி என்று வரும்போது எந்தத் தேதியில் முதலீட்டுத் தேதியாக வைத்துக் கொண்டால் அதிக லாபம் கிடைக்கும்?’’ எனக் கேட்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களும் ஈக்விட்டி ஃபண்டுகளில் ரிஸ்க்கைக் குறைத்து வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், மாத எஸ்.ஐ.பி-யுடன் வார எஸ்.ஐ.பி, தினசரி எஸ்.ஐ.பி முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

எஸ்.ஐ.பி தேதி
எஸ்.ஐ.பி தேதி

வருமானத்தில் மாற்றமா?

எந்தத் தேதியை எஸ்.ஐ.பி தேதியாக வைத்துக் கொண்டால், அதிக லாபம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்தேன். இதற்காக நடுத்தர அளவு ரிஸ்க் கொண்ட மிட்கேப் ஃபண்டுகளில் கடந்த பத்தாண்டுக்காலத்தில் (ஏப்ரல் 1, 2011 முதல் 2021 ஏப்ரல் 1) மாதத்தில் 1, 5, 10, 15, 20, மற்றும் 25-ம் தேதிகளில் எஸ்.ஐ.பி முதலீடு செய்தால் என்ன லாபம் கிடைக்கும் என ஆராய்ந்ததில் ஒரு விஷயம் புரிந்தது.

எஸ்.ஐ.பி தேதியானது எந்தத் தேதியாக இருந்தாலும், வருமானத்தில் பெரிதாக மாற்றமில்லை என்பதே அந்த விஷயம். எனவே, சிறு முதலீட் டாளர்கள் எஸ்.ஐ.பி தேதியைப் பற்றி கவலைப்படாமல், அவர்களின் சம்பளத் தேதியையொட்டி வசதியான ஏதாவது ஒரு தேதியில் தொடர்ந்து மாத எஸ்.ஐ.பியை மேற்கொண்டு வரலாம்.

எஸ்.ஐ.பி தேதி... முதலீட்டு வருமானத்தை அதிகரிக்குமா? ஒரு கணக்கீட்டு விளக்கம்...

வருமானத்தை அதிகரிக்க..!

அதே நேரத்தில், வருமானத்தை அதிகரிக்க சந்தை அதிக இறக்கத்தில் இருக்கும்போது அதாவது, என்.ஏ.வி மதிப்பு கணிசமாகக் குறைந்திருக்கும் போது அடிசனல் பர்ச்சேஸ் என்கிற கூடுதல் முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்!