Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீடு மூலதன ஆதாய வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

எஸ்.ஐ.பி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஐ.பி முதலீடு

எஸ்.ஐ.பி முதலீடு

எஸ்.ஐ.பி முதலீடு மூலதன ஆதாய வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

எஸ்.ஐ.பி முதலீடு

Published:Updated:
எஸ்.ஐ.பி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஐ.பி முதலீடு

ஈக்விட்டி ஃபண்ட், கடன் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட் எதுவாக இருந்தாலும் நம்மவர்களின் முதலீடு பெரும்பாலும் சிஸ்ட மேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்கிற முறையில்தான் இருக்கிறது. அதுவும் மாதம் ஒரு முறை முதலீடு செய்பவர்கள்தாம் அதிகம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது மூலதன ஆதாய வரியைக் கணக்கிடுவதில் பலரும் குழப்பிவிடுகிறார்கள்.

ஹசன் அலி
ஆலோசகர், Siptiger.com
ஹசன் அலி ஆலோசகர், Siptiger.com

குறுகிய கால மூலதன ஆதாய வரியோ, நீண்ட கால மூலதன ஆதாய வரியோ எதுவானாலும் வரி கணக்கீடு என்று வரும் போது, எஸ்.ஐ.பி முறையில் செய்யும் ஒவ்வொரு தவணையும் தனித்தனி முதலீடாகவே எடுத்துக் கொள்ளப்படும். இதை உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.

அதற்கு முன், புரிந்து கொள்வதற்கு வசதியாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

மியூச்சுவல் ஃபண்ட் வரி விதிப்பு…

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியில் 65 சதவிகிதத்துக்கு மேல் இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டால், அது பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுப் பிரிவின்கீழ் வரும். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளின் யூனிட்டுகளை முதலீடு செய்த தேதியிலிருந்து 12 மாதங் களுக்குள் விற்பனை செய்தால், ஒருவர் எந்த அடிப்படை வரி வரம்பில் வந்தாலும் 15% குறுகிய கால மூலதன ஆதாய வரியைக் கட்ட வேண்டும்.

இதுவே யூனிட்டுகளை 12 மாதங்களுக்குப் பிறகு, விற்பனை செய்தால், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை யிலான நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரி இல்லை. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டல் இல்லாமல், எந்த வரி வரம்பில் இருந்தாலும் 10% வரி கட்ட வேண்டும்.

ஒருவேளை, கடன் சார்ந்த ஃபண்டுகளில் யூனிட்டுகள் 36 மாதங்களுக்குள் விற்பனை செய்யப்பட்டால், குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு அடிப்படை வரி வரம்புபடி (5%, 20% மற்றும் 30%) வரி கட்ட வேண்டும்.

யூனிட்டுகள் 36 மாதங்களுக்குப் பிறகு விற்பனை செய்யப் பட்டால், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க சரிகட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 20% வரி கட்ட வேண்டும்.

எஸ்.ஐ.பி முதலீடு மூலதன ஆதாய வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

மூலதன ஆதாயக் கணக்கீடு...

ஒருவர் மாதம் ரூ.1,000 வீதம் தொடர்ந்து 2020 பிப்ரவரி முதல் 2021 ஜூலை வரை 18 மாதங் களுக்கு எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். அவருக்கு சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப ஒதுக்கப்பட்ட யூனிட்டுகள் ஒதுக்கப்படுகிறது. (பார்க்க, அட்டவணை)

அவர் முதலீடு செய்திருப்பது ஈக்விட்டி ஃபண்ட் எனில், 2021 ஜூலையில் மொத்த யூனிட்டுகளையும் (1696.79) ரூ.22,058-க்கு விற்பனை செய்கிறார். இவரின் ஒவ்வொரு எஸ்.ஐ.பி-யும் தனித்தனி முதலீடாக எடுத்துக் கொள்ளப்பட்டு மூலதன ஆதாய வரி கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், அவர் 2020 பிப்ரவரி முதல் 2020 ஜூலை வரையில் முதலீடு செய்திருக்கும் 664.30 யூனிட்டுகள் (ரூ.8,635.9) மட்டும் முதலீடு செய்யப்பட்டு ஓராண்டுகள் கடந்திருக்கும் என்பதால், நீண்ட கால மூலதன ஆதாயக் கணக்கில் வரும். நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரை வரி இல்லை என்கிற கணக்கில் மூலதன ஆதாயமான (8,635.9 – 6,000) ரூ.2,635.90–க்கு வரி எதுவும் கட்டத் தேவையில்லை. மீதியுள்ள 1,032.49 யூனிட்டுகள் முதலீடு செய்யப்பட்டு ஓராண்டுக்குள் இருப்பதால், குறுகிய கால மூலதன ஆதாய கணக்கில் வரும். இங்கே குறுகிய கால மூலதன ஆதாயம் (13,422.37 – 12,000) ரூ.1422.37–க்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% அதாவது, ரூ.213 வரி கட்ட வேண்டும்.

ஒருவரின் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் 1000 யூனிட்டுகள் இருக்கின்றன. இதில் 500 யூனிட்டுகளை விற்கிறார் எனில், அவர் முதலில் வாங்கிய 500 யூனிட்டுகளை விற்றதாக எடுத்துக் கொள்ளப்படும்.

எஸ்.ஐ.பி முதலீடு மூலதன ஆதாய வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

கடன் சார்ந்த ஃபண்டுகள்...

இதேபோல்தான் கடன் சார்ந்த ஃபண்டுகளிலும். இங்கு நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க சரிகட்டல் அனுமதிக் கப்படும். அதுபோக உள்ள லாபத்துக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும். உதாரணமாக, கடன் ஃபண்ட் ஒன்றில் மூன்று ஆண்டுக்குப் பிறகு யூனிட்டுகளை விற்கும்போது, நீண்டகால ஆதாயம் ஆண்டுக்கு சராசரியாக 12% கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 5% எனில், தோராயமாக இது கழிக்கப்பட்டு (12 - 5) 7% லாபத்துக்கு 20% வரி கட்டினால் போதும். உதாரணமாக, ஒருவர் கடன் சார்ந்த ஃபண்ட் ஒன்றில் மூன்று ஆண்டுகள் கழித்து யூனிட்டுகளை விற்கிறார். அவருக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் 100 ரூபாய் கிடைக்கிறது எனில், பணவீக்க விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 5% எனில், ஆதாயத்தில் 15% கழிக்கப்பட்டு, ரூ.85 கிடைக்கும். இந்தத் தொகைக்கு 20% வரி விதிக்கப்பட்டால், ரூ.17 மட்டுமே வரி கட்ட வேண்டும். அதாவது, ரூ.100 மூலதன ஆதாயத்தில் 17 ரூபாய் வரி போக முதலீட்டாளருக்கு ரூ.83 லாபம் கிடைக்கும்.

இந்தக் கணக்கீடு குறித்து முதலீட்டாளர் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அல்லது பங்கு தரகு நிறுவனம் இந்த மூலதன ஆதாயக் கணக்கைக் கணக்கிட்டு அறிக்கையாகக் கொடுத்துவிடும். அதன் அடிப்படையில் நீங்கள் தேவைப் பட்டால் வரி கட்டிக்கொள்ள வேண்டும்.

முதலீட்டின் மூலம் அதிக ஆதாயம் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு வருமான வரி கட்டாமல் தவிர்ப்பது மிக முக்கியம். அதுவும் சட்டப்படி தவிர்ப்பது. உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்திருக்கும் நிலையில் முதலீடு செய்து 350 நாள்கள் ஆகிவிட்டன. இன்னும் 16 நாள்கள் கழித்து விற்றால் வருமானத்தில் 15% வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும். வருமான வரி கட்டாதபோது லாபம் கூடுதலாக கிடைக்கும் இல்லையா?