Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீடு... எந்த வகை ஃபண்டில் எவ்வளவு முதலீடு?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

எஸ்.ஐ.பி முதலீடு... எந்த வகை ஃபண்டில் எவ்வளவு முதலீடு?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய மான காரணம், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பிதான். கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.1,27,832 கோடி எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, 2021-ம் ஆண்டு மே மாதத்தில் ரூ.8,819 கோடி, ஜூனில் ரூ.9,155 கோடி, ஜூலையில் ரூ.9,609 கோடி, ஆகஸ்டில் ரூ.9,923 கோடி, செப்டம்பரில் ரூ.10,351 கோடி, அக்டோபரில் ரூ.10,519 கோடி, நவம்பரில் ரூ.11,005 கோடி, டிசம்பரில் ரூ.11,305 கோடி. 2022-ம் ஆண்டு ஜனவரியில் ரூ.11,517 கோடி, பிப்ரவரியில் ரூ.11,438 கோடி, மார்ச்சில் ரூ.12,328 கோடி, ஏப்ரலில் ரூ.11,863 கோடி என மொத்தம் ரூ.1,27,832 கோடியாகும்.

ஹசன் அலி 
நிறுவனர், 
Siptiger.com
ஹசன் அலி நிறுவனர், Siptiger.com

2022 ஏப்ரலில் எஸ்.ஐ.பி முறையில் மொத்தம் ரூ.11,863 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் மட்டும் ரூ.10,059 கோடி முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. அதேநேரத்தில், எஸ்.ஐ.பி முறையில் அல்லாமல், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் ரூ.22,557.59 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரலில் எஸ்.ஐ.பி முறையில் கடன் ஃபண்டுகளில் ரூ.362.41 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எஸ்.ஐ.பி முறை இல்லாமல் ரூ.7,43,244.06 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரலில் ஹைபிரிட் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் ரூ.761.12 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எஸ்.ஐ.பி முறை இல்லாமல் ரூ.18,461.13 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. (பார்க்க அட்டவணை)

எஸ்.ஐ.பி முதலீடு... எந்த வகை ஃபண்டில் எவ்வளவு முதலீடு?

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் செய்யப்பட்டு இருக்கும் மொத்த முதலீட்டில் மகாராஷ்டிரா, குஜராஜ் மற்றும் டெல்லி மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு ரூ.89,768 கோடியுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

எஸ்.ஐ.பி முதலீடு... எந்த வகை ஃபண்டில் எவ்வளவு முதலீடு?

தமிழ்நாட்டிலிருந்து பங்குச் சந்தை சாராத திட்டங்களில் ரூ.70,532 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 2022 ஏப்ரல் மாத நிலவரப் படி, மொத்தம் ரூ.1,60,300 கோடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை 2022 ஏப்ரலில் ரூ.38,03,683 கோடியை நிர்வகித்து வருகிறது. இதனுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பங்களிப்பு வெறும் 4.2% மட்டுமே. நம் மக்களில் இன்னும் அதிகமானவர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism