Published:Updated:

SGB: தங்கப் பத்திர விற்பனைக்கான அடுத்த சீரிஸ் தொடக்கம்; வாங்குவது எப்படி?

தங்கம்
தங்கம்

தங்கப் பத்திர முதலீட்டில் செய்கூலி, சேதாரத்துக்கான செலவுகள் கிடையாது. மேலும் இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் கிடைக்கும்.

கொரோனா காலகட்டத்தில் அதிக லாபத்தை பதிவு செய்திருக்கிறது தங்கம். இதனால் தங்கம் சார்ந்த முதலீடுகளில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் வரிசையில், அரசு வெளியீடான தங்க பத்திர முதலீடும் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் 8 சீரிஸ் தங்க பத்திர விற்பனையை அரசு அறிவித்திருந்தது. அதில் இதுவரை 5 சீரிஸ் விற்பனைகள் முடிந்துவிட்டன. இந்த 5 சீரிஸூக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தற்போது 6-வது சீரிஸ் விற்பனை தொடங்கியிருக்கிறது. இன்று ஆரம்பிக்கும் இந்த விற்பனை செப்டம்பர் 3-ம் தேதி வரை நடக்கிறது.

கோல்டு
கோல்டு
Gold ETF: வெளியேறும் முதலீட்டாளர்கள்; ஒரு வருடத்துக்குப் பின் குறைந்த தங்க ETF முதலீடு; ஏன்?

அரசின் இந்த தங்க பத்திரத்தினை இந்திய பங்கு சந்தைகளான என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு டீமேட் கணக்கு அவசியம். மேலும், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். இங்கு தங்க பத்திரம் வாங்குவதற்கு அடையாள சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை தேவைப்படும். வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி கோடு ஆகியவையும் அவசியம்.

இந்த தங்க பத்திரத்தின் விலையானது கிராமுக்கு ரூ.4,732 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக இந்த பத்திரத்தை வாங்குபவர்களுக்கு ரூ.50 தள்ளுபடியுடன் ரூ.4,682-க்கு கிடைக்கு வகையில் அரசு சலுகை வழங்குகிறது. ஒரு தனிநபர் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களாக இருந்தால் அதிகபட்சமாக 20,000 கிராம்கள் வரை வாங்கிக் கொள்ள முடியும்.

Gold
Gold
இன்னும் நகைச்சீட்டு மூலம்தான் தங்கம் சேமிக்கிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்! #HerMoney - 2

இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் வசதிகள் உள்ளன. முதலீட்டு நோக்கத்தில் தங்க நகைகளாக வாங்கும்போது செய்கூலி, சேதாரத்துக்கு ஒரு குறிப்பிட்டத் தொகை செலவாகும். ஆனால், இந்த தங்கப் பத்திர முதலீட்டில் செய்கூலி, சேதாரத்துக்கான செலவுகள் கிடையாது. மேலும் இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் கிடைக்கும்.

இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் சாதாரண தங்கத்தினைப் போலவே, நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை அடமானமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்களை இந்திய அரசு வெளியிடுவதால் மிக நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு