Published:Updated:

மதிப்பை குறைத்த ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்; ஐ.பி.ஓ முயற்சியில் சறுக்கியதா?

ஐ.பி.ஓ
News
ஐ.பி.ஓ

இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ எதிர்ப்பார்த்த வரவேற்பைப் பெறாததால், ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்ய இருந்த புரமோட்டர்களின் பங்கு அளவு 4.89 கோடியாக தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக, புரமோட்டர்களின் 5.83 கோடி பங்குகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சென்னையைத் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 14 சதவிகிதத்துக்குமேல் பங்குகளை வைத்திருக்கிறார். இவர் இந்த நிறுவனத்தில் அதிக அளவில் பங்குகளை வைத்திருப்பதாலேயே, இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த மாதம் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி முடிவடைந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் மொத்தம் 4.49 கோடி பங்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், இறுதி ஐ.பி.ஓ நாளான டிசம்பர் 2-ம் தேதி வரை மொத்தம் 3.54 கோடி பங்குகள் வேண்டி மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன. அதாவது, 79% அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்களை இந்த ஐ.பி.ஓ ஈர்த்திருக்கிறது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில்லறை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவில் 109% பங்குகள் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவில் 103 சதவிகிதமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 18% அளவுக்கும் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தன. அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவில் 8% பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருந்தன.

இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாததால், ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்ய இருந்த புரமோட்டர்களின் பங்கு அளவு 4.89 கோடியாக தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக, புரமோட்டர்களின் 5.83 கோடி பங்குகள் ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இதன் ஐ.பி.ஓ சைஸ் ரூ.7,249 கோடி ரூபாயிலிருந்து ரூ.6,400 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்

இந்த நிறுவனத்தின் புரமோட்டரான சேஃப்கார்ப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா எல்.எல்.பி 3.06 கோடி பங்குகளை இந்த ஐ.பி.ஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது. தற்போது அதை 2.98 கோடியாக குறைத்துள்ளது.

இந்த நிலையில், மும்பை கிரே மார்க்கெட்டில் இந்தப் பங்கின் விலை 60 ரூபாய் குறைந்து வர்த்தகம் ஆவதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனப் பங்கு நாளை (டிசம்பர் 10-ம் தேதி) பங்குச் சந்தையில் வர்த்தகத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.