Published:Updated:

2022-ல் என்னென்ன பங்குகளில் முதலீடு செய்யலாம்? நிறுவனங்களின் பரிந்துரை இதோ..!

Investment (Representational Image)
News
Investment (Representational Image)

இந்தப் பங்குகளை வாங்கும்முன் இந்தப் பங்கு நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, இந்தப் பங்கு நிறுவனத்தில் பணம் போடும் ரிஸ்க்கை எடுக்கலாமா, கூடாதா என்பது பற்றி ஆராய்ந்து பார்த்து, முடிவெடுப்பது நல்லது.

2022-ம் ஆண்டில் நாம் அனைவரும் வெற்றிகரமாக கால் பதித்துவிட்டோம். இந்த ஆண்டில் எந்தப் பங்குகளை வாங்கலாம் என்கிற கேள்வி பலரிடமும் இருக்கும். இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி பங்குத் தரகு நிறுவனங்கள் பல பங்குகளை ஆய்வு செய்து அவற்றில் சிலவற்றைப் பரிந்துரை செய்துள்ளன. இந்தப் பங்குகளை வாங்கும்முன் இந்தப் பங்கு நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, இந்தப் பங்கு நிறுவனத்தில் பணம் போடும் ரிஸ்க்கை எடுக்கலாமா, கூடாதா என்பது பற்றி ஆராய்ந்து பார்த்து, முடிவெடுப்பது நல்லது. இனி பங்கு நிறுவனங்களின் பரிந்துரையைப் பார்ப்போம்.

ஏஞ்சல் ஒன் (Angel One)

இந்த பங்குத் தரகு நிறுவனம்,

- சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் (Safari Industries),

- ராமகிருஷ்ணா போர்ஜ் (Ramakrishna Forge),

- பெடரல் பேங்க் (Federal Bank),

- அசோக் லேலண்ட் (Ashok Leyland),

- ஹெச்.டி.எஃப்.சி பேங்க்,

- ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பங்குகள் (AU Small Finance),

- சோபா (Sobha),

- ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Technologies),

- அம்பர் என்டர்பிரைசஸ் (Amber Enterprises) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

Investment (Representational Image)
Investment (Representational Image)

இதில் சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை இந்த ஆண்டு 46.8% வரை உயர வாய்ப்பிருப்பதாக ஏஞ்சல் ஒன் நிறுவனம் சொல்லியிருக்கிறது. அதேபோல, ராமகிருஷ்ணா போர்ஜ் நிறுவனப் பங்கு விலை 45.4 சதவிகிதமும், பெடரல் பேங்க் நிறுவனப் பங்கு விலை 45.3 சதவிகிதமும், அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனப் பங்கு விலை 32.3 சதவிகிதமும், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் நிறுவனப் பங்கு விலை 28.3 சதவிகிதமும் ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கு விலை 22.8 சதவிகிதமும் உயர்ந்து லாபம் தர வாய்ப்புள்ளதாக ஏஞ்சல் ஒன் நிறுவனம் கணித்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆக்ஸிஸ் செக்யூரிட்டிஸ் (AXIS Securities)

இந்தப் பங்கு தரகு நிறுவனம்,

- ஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினீயரிங் (HG Infra Engg),

- பிர்லா கார்ப்பரேஷன் (Birla Corporation),

- ஹெல்த் க்ளோபல் (Health Global),

- பாரதி ஏர்டெல் (Bharti Airtel),

- VIP இண்டஸ்ட்ரீஸ்,

- ABFRL,

- மிண்டா கார்ப்பரேஷன் (Minda Corporation) ஆகிய நிறுவனப் பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

இதில் ஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினீயரிங் நிறுவனப் பங்கு 57.3 சதவிதமும், பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு 26.8 சதவிகிதமும், ஹெல்த் க்ளோபல் (Health Global) நிறுவனப் பங்கு 25.1 சதவிகிதமும், பாரதி ஏர்டெல் 24.5 சதவிகிதமும், வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு 20.9 சதவிகிதமும், ஏ.பி.எஃப்.ஆர்.எல் 20 சதவிகிதமும், மிண்டா கார்ப்பரேஷன் 19.9 சதவிகிதமும் லாபம் தர வாய்ப்புள்ளதாக ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்திருக்கிறது.

Investment (Representational Image)
Investment (Representational Image)

ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் (HDFC Securities)

இந்தப் பங்குத் தரகு நிறுவனம்,

- கெயில் இந்தியா (GAIL India),

- எஸ்.பி.ஐ.,

- மேக்ஸ் பைனாசியல் (Max Financial),

- M&M,

- ஆதித்யா பிர்லா கேபிடல் (Aditya Birla Capital),

- ஜீ என்டர்டெயின்மென்ட் (Zee Entertainment),

Ipca லேப்ஸ் (Ipca Labs) ஆகிய நிறுவனப் பங்குகளைப் பரிந்துரை செய்திருக்கிறது.

கெயில் இந்தியா பங்கு 48.4 சதவிகிதமும், எஸ்.பி.ஐ நிறுவனப் பங்கு 37.4 சதவிகிதமும், மேக்ஸ் ஃபைனாசியல் (Max Financial) 28.5 சதவிகிதமும், எம்&எம் நிறுவனப் பங்கு 27.5 சதவிகிதமும், ஆதித்யா பிர்லா கேபிட்டல் 23.9 சதவிகிதமும், ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனப் பங்கு 20.3 சதவிகிதமும், இப்கா லேப்ஸ் 14.2 சதவிகிதமும் லாபம் தர வாய்ப்பிருப்பதாக ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டிஸ் (ICICI Securities)

இந்தப் பங்குத் தரகு நிறுவனம்,

- த்வாரிகேஷ் சுகர் (Dwarikesh Sugar),

- அஸ்டர் DM ஹெல்த் (Aster DM Health)

- ஓரியன்ட் சிமென்ட் (Orient Cement),

- பாரதி ஏர்டெல் (Bharti Airtel),

- பீனிக்ஸ் மில்ஸ் (Phoenix Mills),

- மிண்டா கார்ப்பரேஷன் (Minda Corporation),

- NRB கார்ப்பரேஷன் (NRB Corporation),

eClerx சர்வீசஸ் (eClerx Services) ஆகிய நிறுவனங்களைப் பரிந்துரை செய்துள்ளது.

இதில் த்வாரிகேஷ் சுகர் நிறுவனப் பங்கு 40.1 சதவிகிதமும், அஸ்டர் டி.ஜி ஹெல்த் நிறுவனப் பங்கு 36.6 சதவிகிதமும், ஓரியன்ட் சிமென்ட் (Orient Cement), பாரதி ஏர்டெல் (Bharti Airtel), பீனிக்ஸ் மில்ஸ் 23.9 சதவிகிதமும், மிண்டா கார்ப்பரேஷன் 19.9 சதவிகிதமும், என்.ஆர்.பி கார்ப்பரேஷன் 15.4 சதவிகிதமும் லாபம் தர வாய்ப்பிருப்பதாக கணித்திருக்கிறது.

Investment (Representational Image)
Investment (Representational Image)

எம்.ஒ.எஸ்.எல் செக்யூரிட்டீஸ் (MOSL Securities)

இந்தத் தரகு நிறுவனம்,

- ஏஞ்சல் ஒன் (Angel One),

- பாரதி ஏர்டெல் (Bharti Airtel),

- லார்சன் அண்ட் டியூப்ரோ (Larsen & Toubro),

- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries),

- Tata மோட்டார்ஸ், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் (Godrej Consumer),

- டிவிஸ் லேப்ஸ்,

ராம்கோ சிமென்ட்ஸ்,

டி.சி.எஸ் ஆகிய நிறுவனப் பங்குகளைப் பரிந்துரை செய்துள்ளது.

இதில் ஏஞ்சல் ஒன் நிறுவனப் பங்கு 40.5 சதவிகிதமும், பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்கு 24.5 சதவிகிதமும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் நிறுவனப் பங்கு விலை 23.5 சதவிகிதமும், லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனப் பங்கு விலை 16.4 சதவிகிதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 14.9 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு விலை 14.9 சதவிகிதமும், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பங்கு விலை 12.9 சதவிகிதமும், டிவிஸ் லேப்ஸ் நிறுவனப் பங்கு விலை 11.1 சதவிகிதமும் லாபம் தர வாய்ப்புள்ளதாக எம்.ஒ.எஸ்.எல் நிறுவனம் கணித்திருக்கிறது.

இந்த ஆண்டு வாங்கவேண்டிய பங்குகளை சொல்லிவிட்டோம். இதை இவற்றை ஆராய்ந்து பார்த்து வாங்கவேண்டியது முதலீட்டாளர்களாகிய நீங்கள்தான்!