Published:Updated:

26 ஆண்டுகளில் 207 மடங்கு லாபம்... ஆச்சர்யப்படுத்தும் குரோத் பண்ட்..!

மியூச்சுவல் ஃபண்ட்

பிரீமியம் ஸ்டோரி

ஆகாஷ்

மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்தில் முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் கிடைக்கும் என்பதற்கு நிப்பான் நிறுவனத்தின் குரோத் ஃபண்ட் சிறந்த ஓர் உதாரணம். 1995-ம் ஆண்டு அக்டோபரில் இந்த ஃபண்டில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இப்போது அதன் மதிப்பு ரூ.2.07 கோடி. அதாவது, 207 மடங்கு லாபம்! ஆண்டுதோறும் இந்த ஃபண்ட் 22.91% லாபம் தந்திருக்கிறது. இவ்வளவு பெரிய லாபம் வேறு எதிலாவது கிடைக்குமா என்று கேட்டால், கிடைத்திருக்காது என்பதே பதில்.

ஆனால், இந்த லாபம் மிகச் சிலருக்கே கிடைத்துள்ளது. இந்த ஃபண்ட் தொடங்கப் பட்ட நாள் முதல் இன்றுவரை 2,600 பேர் மட்டுமே தொடர்ந்து இருக்கிறார்கள். இவர்களின் சராசரி முதலீடு ரூ.2,415 என்கிற அளவில் மட்டுமே இருக்கிறது.

26 ஆண்டுகளில் 207 மடங்கு லாபம்... ஆச்சர்யப்படுத்தும் குரோத் பண்ட்..!

இந்த ஃபண்டில் முதலீடு செய்த முதலீட்டாளர் களில் சுமார் 40,000 பேர் 15 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் தொடர்ந்து இருக்கிறார்கள். இவர்களின் சராசரி முதலீடு ரூ.3 லட்சமாக இருக்கிறது. சுமார் இரண்டு லட்சம் முதலீட் டாளர்கள் 10 ஆண்டுகளுக்குமேல் தங்கள் முதலீட்டை இந்த ஃபண்டில் வைத்திருக் கிறார்கள். இவர்கள் சராசரியாக ரூ.2.75 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். ஆக மொத்தம் 6,15,000 பேர் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஃபண்டில் தங்கள் முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக முதலீட்டைத் திரும்ப எடுத்ததால், அதிக லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரியான சூப்பர் லாபம் கிடைக்கிறது. இது மாதிரி, பல ஃபண்டுகள் 50 மடங்கு, 100 மடங்கு லாபம் தந்துள்ளன என்றாலும், கடந்த காலத்தில் கிடைத்த இதே மாதிரியான லாபம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. என்றாலும், நீண்ட காலத்தில் ஆண்டுதோறும் 12% கிடைத்தாலே போதும் என நாம் நினைக்க வேண்டும்! காரணம், தற்போதைய நிலையில், ஆண்டு தோறும் 12% லாபம் வேறு எதிலும் கிடைக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு