Published:Updated:

`இளைஞர்கள் எப்படி முதலீடு செய்கின்றனர்?' சர்வே முடிவும் முதலீட்டில் செய்யக்கூடாத தவறுகளும்

முதலீடு

பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுக்கும் மருத்துவ காப்பீட்டுக்கும் இருக்கும் வித்தியாசம்கூட தெரியவில்லை என்று அந்த சர்வே தெரிவித்துள்ளது.

`இளைஞர்கள் எப்படி முதலீடு செய்கின்றனர்?' சர்வே முடிவும் முதலீட்டில் செய்யக்கூடாத தவறுகளும்

பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுக்கும் மருத்துவ காப்பீட்டுக்கும் இருக்கும் வித்தியாசம்கூட தெரியவில்லை என்று அந்த சர்வே தெரிவித்துள்ளது.

Published:Updated:
முதலீடு

நமது நாட்டில் 91 சதவிகித இளைஞர்கள் (Millennials) நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளை பிறரிடம் கலந்து ஆலோசிக்காமல் தாமே எடுப்பதாக டாட்டா ஏஐஏ நிறுவனம் எடுத்துள்ள சர்வேயில் தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு மக்களிடம் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.

22 முதல் 25 வயது நிரம்பிய சிறுவயது இளைஞர்களில் கணிசமானவர்கள் தமது பெற்றோரிடம் ஆலோசனைக் கேட்டு முதலீடு செய்கின்றனர். ஆனால், 25 - 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 90% நபர்களும் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 96% நபர்களும் யாரிடமும் நிதி ஆலோசனை கேட்காமல் அதிக அளவில் முதலீட்டு முடிவுகளை அவர்களே எடுப்பதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது.

அவ்வாறு முதலீட்டை மேற்கொள்ளும் பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் செய்யும் முதலீடு பற்றிய விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்று அந்த சர்வே தெரிவித்துள்ளது. ஆயிரம் நபர்கள் கலந்துகொண்ட அந்த சர்வேயில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுக்கும் மருத்துவ காப்பீட்டுக்கும் இருக்கும் வித்தியாசம்கூட தெரியவில்லை என்று அந்த சர்வே தெரிவித்துள்ளது.

இளைஞர்கள்
இளைஞர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகின் எட்டாவது அதிசயம் என்று நிதித்துறையில் போற்றப்படுவது கூட்டு வட்டி மூலம் கிடைக்கும் அதிக வருமானம் ஆகும். நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போதுகூட நாம் செய்யும் முதலீடு நமக்காக பணம் ஈட்டிக்கொண்டிருக்கும். சரியாகச் செய்யப்படும் முதலீடு மிக அதிக அளவில் வருமானத்தை ஒருவருக்கு பெற்றுத் தரும். ஒருவர் யாரையும் ஆலோசிக்காமல் தாமே முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது, அவர் முதலீடு செய்யப்போகும் திட்டங்களை ஆராய்ந்து முதலீடு செய்தால் அதிக வருமானத்தை அடையலாம்.

ஆனால், நம்மில் பலர் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாமல் முதலீடு செய்துவிடுகின்றனர். பல முதலீடுகள் பணவீக்க விகிதத்தைவிட குறைவான வருமானத்தைத் தந்து அசல் முதலீட்டுத் தொகையையே குறைத்துவிடுகிறது. உடல் நலனில் கோளாறு ஏற்பட்டால் எப்படி மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறோமோ அதுபோல முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போதும் தகுதிவாய்ந்த நிதி ஆலோசகர்களின் உதவியைப் பெறுவது வருமானத்தை அதிகரிக்க உதவும். நிதி வல்லுநர்களுக்கு கொடுக்கும் பணத்தை செலவாகக் கருதாமல் நம் பணத்தை வளர்க்கும் முதலீடாகப் பார்க்க வேண்டும்.

முதலீடு
முதலீடு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக முதலீடு செய்வதில் தனிநபர்கள் செய்யும் தவறுகள் என்ன?

1. வங்கி டெபாசிட், காப்பீட்டுத் திட்டங்களில் பெரும்பாலான முதலீடுகளை மேற்கொள்வது. இவற்றில் கிடைக்கும் வட்டி பெரும்பாலும் பணவீக்கத்தைவிட குறைவாகவே இருக்கும்.

2. சில வகை திட்டங்களில் முதலீட்டுக் காலம் அதிக காலத்தைக் கொண்டிருக்கும். நடுவில் பணத்தை எடுக்க வேண்டியிருந்தால் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது.

3. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை கடன்வாங்கி அதிக வட்டி செலுத்துவது. வீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுவாக பணவீக்கத்தைவிட குறைவாகவே இருக்கும்.

முதலீடு
முதலீடு

4. ரிஸ்க் அதிகம் என்று மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பது. அவ்வாறு முதலீடு செய்தாலும் முதலீடு செய்யும் நிறுவனத்தைப் பற்றி நன்கு அறியாமல் தவறான நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வது.

5. திருமணம், குழந்தைகளின் கல்வி, ஓய்வுக் காலத்துக்கான முதலீடு போன்றவற்றைக் காலதாமதமாகத் தொடங்குவது.

இது போன்ற பொதுவான தவறுகள் செய்யாமல் சரியான முதலீட்டை மேற்கொள்ளும்போது அதிக லாபத்தை ஒருவர் அடையலாம். நிதி தொடர்பான விஷயங்களில் அறிவை வளர்த்துக்கொள்வது சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு பெரிதும் உதவும். அந்த வகையில் நாணயம் விகடன் போன்ற முதலீட்டுக்கு உதவும் பத்திரிகைகள் படிப்பது சரியான முதலீட்டை மேற்கொள்வதற்கு உதவும்.

அதனால் முதலீடு செய்வது மட்டும் ஒருவரது கடமை அல்ல. அந்த முதலீட்டை நன்கு வளர்த்து அதிக வருமானம் ஈட்டும் வகையில் கட்டமைப்பதில்தான் நம் சாமர்த்தியம் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism