Published:Updated:

வரிக் குறைப்பின் மறுபக்கம்: கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த 4 விஷயங்களைச் செய்வார்களா?

இந்தியப் பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்யும் விதமாக வரிக் குறைப்பு நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுத்திருந்தாலும்கூட, குறிப்பிட்ட அளவீடுகளைப் பொறுத்துதான் இது பலனளிக்கக்கூடும்

indian economy
indian economy

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிசமாகக் குறைத்திருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வரிக் குறைப்பு அறிவிப்புக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பங்குச் சந்தையும் இணைந்து அமோக வரவேற்பைக் கொடுத்தது. இந்த அறிவிப்பால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கக் கூடிய சாதக மற்றும் பாதகமான அம்சங்கள் குறித்து ஆராய்வோம். விரிவாகபடிக்க க்ளிக் செய்க.. . http://bit.ly/2orP4RA

இந்த வரிக் குறைப்பின் காரணமாக, ஜி.எஸ்.டி வரியில் ரூ.40,000 கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்கு அரசின் வருமானம் பாதிக்கக்கூடும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4 சதவிகிதமாக இருக்கும்.

நுகர்வோரிடம் பணப்புழக்கம் அதிகரித்து, நுகர்வும் அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அதேவேளையில், இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுமா என்பது முக்கியமான கேள்வி. உலகளாவிய அளவில் பார்த்தால், பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இந்தியப் பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்யும் விதமாக வரிக் குறைப்பு நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுத்திருந்தாலும்கூட, குறிப்பிட்ட அளவீடுகளைப் பொறுத்துதான் இது பலனளிக்கக்கூடும். அப்படிப் பலனளிக்கத் தேவையான அளவீடுகள் என்ன என்று பார்ப்போம்:

1. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களை விலைக்குறைப்பு மற்றும் தள்ளுபடிகளின் மூலம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்களா?

2. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களை நிறுவனத்தின் கடன்களைக் குறைக்கப் பயன்படுத்துவார்களா?

3. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களை மூலதனத்தை அதிகரிக்கப் பயன்படுத்தி, அதனால் வேலைவாய்ப்பை உருவாக்கி, தேவையைப் பெருக்குகிறார்களா?

4. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டுகளாக அளிக்கிறார்களா?

நிறுவனங்களுக்குக் கிடைக்கும் இந்த வரிக் குறைப்பு சலுகையை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்தும் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. தேவைத் தொடர்பான மந்தநிலையும் வளர்ச்சி குறைந்திருப்பதும் ஒரே நாளில் மாறிவிடாது. நுகர்வோரிடம் பணப்புழக்கம் அதிகரித்து, நுகர்வும் அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

indian economy
indian economy

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைந்திருப்பதும் கார்ப்பரேட்களுக்கான வரிக் குறைப்பும் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். சமீபத்திய பணப்புழக்க நெருக்கடியைக் கருத்தில்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், வேறெதிலும் கவனம் செலுத்தாமல், முதலில் கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

- நிறுவனங்கள் செலுத்தும் வரிகளின் பட்டியலை உள்ளடக்கிய அலசல் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்? https://www.vikatan.com/business/share-market/how-the-reduction-of-corporate-tax-will-yield-benefits-for-share-market

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |