Published:Updated:

திவாலான தாமஸ் குக்... என்ன காரணம்?

திவாலான தாமஸ் குக்... என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
திவாலான தாமஸ் குக்... என்ன காரணம்?

சிக்கல்

இங்கிலாந்தைச் சேர்ந்த 178 ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த பழமைவாய்ந்த சுற்றுலாச் சேவை நிறுவனமான தாமஸ் குக் குழுமம், கடன் பிரச்னை காரணமாகத் திவாலானதாக செப்டம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் கடந்த 1948-ல் தேசியமயமாக்கப்பட்டு, பிரிட்டிஷ் ரயில்வேஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

திவாலான தாமஸ் குக்... என்ன காரணம்?

கடந்த சில ஆண்டுகளாக, ஆன்லைன் புக்கிங் வசதி பெருகியபின், சுற்றுலா செல்பவர்கள் டிராவல்ஸ் நிறுவனங்களை அணுகுவது குறையத் தொடங்கியது. மேலும், தாமஸ் குக் நிறுவனத்துக்குப் போட்டியாக, ஈஸிஜெட், ஜெட்2 ஏர்வேஸ் போன்றவை குறைந்த கட்டணத்தில் விமானசேவையை வழங்கின. இவற்றையெல்லாம் தாண்டி, பிரெக்ஸிட் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகளால் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இத்தகைய பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாகச் சரிவைச் சந்தித்துவந்த இந்த நிறுவனத்துக்கு வங்கிக்கடன் அதிகரித்தது. தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கு 250 மில்லியன் டாலர் தேவைப்பட்டது. அதைத் தனியாரிடம் திரட்டுவதற்காக நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும், கடனுதவி தருவோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நிதி திரட்டும் முயற்சி பலனளிக்கவில்லை. இறுதியில் தாமஸ் குக் குழுமம் திவாலானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வர்த்தகம், விமானசேவை உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளும் முடக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்களுடைய லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் மன்னிப்புக் கோருவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். தாமஸ் குக் நிறுவனத்தின் இணையதளத்தில் இதுகுறித்து விரிவான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திவாலான தாமஸ் குக்... என்ன காரணம்?

இந்திய நிறுவனத்துக்குப் பாதிப்பா?

தாமஸ் குக் நிறுவனம் திவாலானதுமே அதன் எதிரொலியாக தாமஸ் குக் (இந்தியா) நிறுவனமும் பாதிப்பைச் சந்தித்தது. பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. உண்மையில் தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்துக்கும், தற்போது திவாலான தாமஸ் குக் நிறுவனத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. கடந்த 2012, ஆகஸ்ட் மாதத்தில், கனடாவைச் சேர்ந்த ஃபேர்பாக்ஸ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்தின் 77% பங்குகளைக் கையகப்படுத்தப் படுத்தியது. அப்போதிருந்தே இரண்டு நிறுவனங் களும் வெவ்வேறு நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகின்றன. பங்குகளைக் கையகப்படுத்திய போது, தாமஸ் குக் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக்கொள்வதற்கு இரண்டு நிறுவனங் களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதுதான் தற்போது ஏற்பட்ட பாதிப்புக்குக் காரணமாக அமைந்தது.

பங்கு விலை குறைந்தது ஏன்?

இதுகுறித்து பங்குச் சந்தை ஆலோசகர் எம்எஸ்ஓ. அண்ணாமலை கூறும்போது, “தாமஸ் குக் (இந்தியா) நிறுவனமும், இங்கிலாந்திலுள்ள தாமஸ் குக் நிறுவனமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இரண்டின் பெயரும் ஒன்றாக இருப்பதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதன்காரணமாக தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் பலர் உடனடியாகத் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்றதால், அந்த நிறுவனத்தின் பங்கு விலை, திங்களன்று ஒரே நாளில் 155 ரூபாயிலிருந்து 144 ரூபாயாக இறங்கியது. முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்துகொண்ட நிர்வாகம், தங்களது நிறுவனம் குறித்த தெளிவான விளக்கத்தைத் தங்களது இணையதளம், ட்விட்டர், எஸ்.எம்.எஸ் எனப் பல்வேறுவழிகளில் முதலீட்டாளர்கள்வசம் கொண்டுசேர்த்தது.

தற்போது இந்த நிறுவனத்தின் நிதி நிலை ரூ.1,389 கோடிகள் என வலுவாக இருப்பதாக இந்த நிறுவனத்தின் நிர்வாகம் சொல்லியிருக்கிறது. மேலும், ‘இங்கிலாந்து தாமஸ் குக் நிறுவனத்தின் தற்போதைய சூழலுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்தின் தலைமை அதிகாரி ட்வீட் செய்தார். அதையடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்தது. எனவே, முதலீட்டாளர்கள், தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது நல்லது” என்றார்.

எம்எஸ்ஓ.அண்ணாமலை
எம்எஸ்ஓ.அண்ணாமலை

முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்த போதும் மீண்டும் மறுநாளே, தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்தின் பங்கு விலை 137 ரூபாய்க்கு இறங்கி, பின்னர் மீண்டது. முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வரை இந்தப் பங்கின் விலையில் இன்னும் சில நாள்களுக்கு ஏற்ற இறக்கம் தொடரலாம்!