Published:Updated:

இந்தியன் பேங்க்... ரிசல்ட் எப்படி? முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

Q 3 R E S U L T S

நடப்பு 2020-2021-ம் நிதி யாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங் களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் இங்கே...

கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank)

டிசம்பர் காலாண்டில் இந்த வங்கியின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருமானம் 16.18% அதிகரித்து, 5,160.15 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 4,441.63 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 10.77% அதிகரித்து, 2,601.67 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,348.72 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் செயல்பாட்டு லாபம் 22.81% அதிகரித்து, 4,129.03 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,362.06 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 12.29 ரூபாயிலிருந்து 13.14 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 22.02% அதிகரித்து, 19,239 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 15,767 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 309.41% அதிகரித்து, 2,829 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 691 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 107.07% அதிகரித்து, 5,802 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,802 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2.88 ரூபாயிலிருந்து அதிகரித்து, 11.77 ரூபாயாக உயர்ந்துள்ளது.

குஜராத் அம்புஜா எக்ஸ்போர்ட்ஸ் (Gujarat Ambuja Exports)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 21.29% அதிகரித்து, 1,211.20 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 998.63 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 101.85% அதிகரித்து, 109.32 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 54.16 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 62.86% அதிகரித்து, 167.63 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 102.93 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பங்கின் இ.பி.எஸ் 2.26 ரூபாயிலிருந்து அதிகரித்து, 4.78 ரூபாயாக உயர்ந்துள்ளது.

காலாண்டு
காலாண்டு

யெஸ் பேங்க் (Yes Bank)

டிசம்பர் காலாண்டில் இந்த வங்கியின் தனித்த நிகர வட்டி வருமானம் 140.46% அதிகரித்து, 2,560.42 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,064.78 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 100.81% அதிகரித்து, 150.71 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 18,560.31 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் செயல்பாட்டு லாபம் 35700.31% அதிகரித்து, 2,285.54 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.42 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தியன் பேங்க் (Indian Bank)

இந்த வங்கியின் தனித்த நிகர வட்டி வருமானம் டிசம்பர் காலாண்டில் 120.61% அதிகரித்து, 4,313.28 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1955.18 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 108.08% அதிகரித்து, 514.29 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 247.16 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் செயல்பாட்டு லாபம் 61.51% அதிகரித்து, 3,098.99 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,918.80 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தப் பங்கின் இ.பி.எஸ் 4.77 ரூபாயிலிருந்து 4.55 ரூபாயாகக் குறைந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 16.63% அதிகரித்து, 8,909.88 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 7,639.66 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 23.36% அதிகரித்து, 1,556.28 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,261.60 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 21.08% அதிகரித்து, 2,098.80 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,733.43 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தப் பங்கின் இ.பி.எஸ் 43.60 ரூபாயிலிருந்து அதிகரித்து, 53.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆசியன் பெயின்ட்ஸ் (Asian Paints)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 25.24% அதிகரித்து, 6,788.47 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5,420.28 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 62% அதிகரித்து, 1,238.34 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 764.43 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 49.76% அதிகரித்து, 1,885.81 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,259.22 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தப் பங்கின் இ.பி.எஸ் 7.97 ரூபாயிலிருந்து அதிகரித்து, 12.91 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் (Jindal Steel & Power)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை டிசம்பர் காலாண்டில் 13.27% அதிகரித்து, 10,533.51 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 9,299.78 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 1105.29% அதிகரித்து, 2,254.66 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 224.28 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 153.78% அதிகரித்து, 4,617.60 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,819.56 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2.20 ரூபாயி லிருந்து அதிகரித்து, 22.10 ரூபாயாக உயர்ந்துள்ளது.

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் & பேமென்ட் சர்வீசஸ் (SBI Cards & Payment Services)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வருமானம் 3.06% குறைந்து, 2,403.20 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,479.12 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 51.77% குறைந்து, 209.66 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 434.67 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 39.79% குறைந்து, 575 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 954.98 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தப் பங்கின் இ.பி.எஸ் 4.66 ரூபாயி லிருந்து குறைந்து, 2.23 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஜே.கே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (JK Tyre and Industries)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 18.14% அதிகரித்து, 1,844.64 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,561.43 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 458.08% அதிகரித்து, 125.29 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 22.45 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 83.59% அதிகரித்து, 312.22 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 170.06 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 0.91 ரூபாயிலிருந்து அதிகரித்து, 5.09 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பிட்ஸ்

டந்த 2020-ம் ஆண்டில் 10.14 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங் களைத் தேடி வந்திருக்கிறது. 1,200 டீல்கள் மூலம் இந்தத் தொகை வந்திருக்கிறது!