Published:Updated:

தங்கத்தில் 'சரியாக' முதலீடு செய்ய மூன்று முக்கிய வழிகள்!

விகடன் டீம்

தங்கத்தின் விலை இந்தியாவில் கடந்த ஓராண்டில் சுமார் 24%, மூன்று மாதங்களில் 15% அதிகரித்துள்ளது.

Gold
Gold

பொதுவாக, பங்குச் சந்தை வீழ்ச்சி இருக்கும் காலம், பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காலம், நிலையற்ற தன்மை நிலவும் காலம், நாடுகளுக்கு இடையே போர் வரும் சூழல் மற்றும் போர் நடக்கும் காலம் ஆகிய சூழ்நிலைகளில் தங்கத்தின் விலை ஏற்றம் காணும். ஆனால், இந்தியாவில் இந்தப் பிரச்னைகளையும் தாண்டி பல நேரங்களில் அதற்கான தேவை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயரக்கூடும். https://bit.ly/31PlW54

தற்போது டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு ரூ.71-க்கு மேலாக அதிகரித்திருப்பதால், தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. மேலும், அண்மையில் பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை உயர்ந்து வருகிறது.

Gold
Gold

தற்போது தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் கோல்டு பாண்டு, கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்திட வேண்டாம்; தங்கத்தின் விலை இப்படித் தொடர்ந்து ஏற்றம் காணும் எனச் சொல்ல முடியாது. காத்திருந்து இறக்கத்தில் வாங்கலாம். அல்லது மாதந்தோறும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது யூனிட்களை வாங்கி வரலாம்.

கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை என்பது பலருக்கும் இடைஞ்சலான விஷயம். இதைப் போக்கும் விதமாகத்தான் கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட் கொண்டு வரப்பட்டது. அந்தவகையில் டீமேட் கணக்குக்கான ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் சுமார் 300 - 500 ரூபாய் மிச்சமாகும் என்பதால், சிறு முதலீட்டாளர்களுக்கு இது லாபகரமாக இருக்கும். அதேநேரத்தில் பங்கு முதலீட்டுக்காக டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த ஃபண்டையும் டீமேட் மூலமாக வாங்குவது லாபகரமாக இருக்கும்.

கோல்டு இ.டி.எஃப் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும்போது செய்கூலி, சேதாரம் போன்ற விஷயங்களைத் தவிர்க்க முடியும். ஒரு பவுன் (8 கிராம்) தங்கநகை வாங்கும்போது, ஒரு கிராம் தங்கம் செய்கூலி மற்றும் சேதாரத்துக்கே போய்விடுகிறது. மீண்டும் அதை விற்கும்போதும் சேதாரம் என்கிற பெயரில் பெரும் பணம் போகிறது. இப்படி நம் பணம் வீணாவதைத் தடுக்க கோல்டு இ.டி.எஃப் திட்டம் சிறந்ததாகும். ஓராண்டில் பெரிய தொகையைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், அதிக லாபம் பார்க்க நேரடியாக கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.

மூன்று முக்கிய வழிகள்...

தங்கத்தின் விலை இப்போது உச்சத்தில் இருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் 8 கிராம் விலை ஆகஸ்ட் 13-ம் தேதி 29,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை இந்தியாவில் கடந்த ஓராண்டில் சுமார் 24%, மூன்று மாதங்களில் 15% அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நம்மில் பலர் தங்கத்தை முதலீட்டு நோக்கில் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கத்தை முதலீட்டு நோக்கில் வாங்கப் பல வழிகள் இருக்கின்றன.

gold
gold

மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bonds), மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கோல்டு இ.டி.எஃப்-கள் மற்றும் கோல்டு ஃபண்டுகள் (Gold ETFs and funds) ஆகியவை முக்கியமான முதலீட்டு வழிகள். இந்த மூன்று வழிகளில் உங்களுக்கு ஏற்ற வழி எது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள, அவற்றின் அடிப்படைத் தகவல்கள், சிறப்பு அம்சங்கள் மற்றும் வருமானம் விவரத்தை முழுமையாகவும் எளிதாகவும் புரியவைக்கிறது இந்த வார நாணயம் விகடன்.

- நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன் எழுதியுள்ள அந்தச் சிறப்பு கைடன்ஸ் கட்டுரையை முழுமையாக வாசிக்க > உச்சத்தில் விலை... தங்கத்தில் முதலீடு செய்ய சரியான வழிகள்! https://www.vikatan.com/news/investment/best-ways-to-invest-in-gold

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/