Published:Updated:

முதலீட்டின் மூன்று முக்கிய தூண்கள்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

முதலீட்டின் மூன்று முக்கிய தூண்கள்..!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு என்று வரும்போது, பாதுகாப்பு, பணமாக்குதல் மற்றும் வருமானம் (Safety, Liquidity and Return) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவற்றை முதலீட்டின் மூன்று தூண்கள் எனறே சொல்லலாம்.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
Wmsplanners.com
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், Wmsplanners.com

1. பாதுகாப்பு: முதலீடு செய்யும்போது, மூலதனம் மற்றும் வருமானத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். பாரம்பர்ய முதலீடுகளான வங்கி சேமிப்பு, ஆர்.டி, எஃப்.டி போன்றவற்றில் மூலதனம் மற்றும் வட்டி வருமானத்தில் பாதுகாப்பு பிரச்னை வராது. அதேநேரத்தில், நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தையில் முதலீட்டின் மதிப்பு குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், பணத்தை மோசடி செய்வற்கான வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத வகையில் அதிக வருமானம் தருகிறோம் என்று சொல்கிற பொன்ஸி திட்டங்களில் உஷாராக இருப்பது அவசியம். காரணம், இவை ஆர்.பி.ஐ, செபி போன்ற ஒழுங்கு முறை அமைப்பு களின் கீழே வராமல் இருப்பதாகும்.

முதலீட்டின் மூன்று முக்கிய தூண்கள்..!

2. பணமாக்குதல்: நாம் செய்யும் முதலீடுகள் நம் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருப்பது மிக அவசியம்.

3. வருமானம்: ஃபிக்ஸட் இன்கம் திட்டங்கள் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு வட்டி அல்லது வருமானம் கிடைக்கும். நம் முதலீட்டின் மதிப்பு அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பணவீக்க விகிதத்தைவிடஅதிக வருமானம் கிடைக்கும்.

எஃப்.டி, கடன் பத்திரங்களை ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களின் கீழ் சேர்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட், பங்கு போன்றவை மூலதன அதிகரிப்புத் திட்டங்களின் கீழ் வரும். எனவே, ஒருவரின் முதலீடு இவை இரண்டிலும் கலந்து இருக்க வேண்டும். குறுகிய காலத் தேவைகளுக்கு ஃபிக்ஸட் இன்கம் திட்டங் களிலும், நீண்ட காலத் தேவைகளுக்கு மூலதன அதிகரிப்புத் திட்டங்களிலும் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.