Published:Updated:

பொருளாதார நெருக்கடி: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்?

விகடன் டீம்

ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகளில் ஏற்கெனவே பெரிய அளவிலான வீழ்ச்சி நடந்துவிட்டது. இதற்குமேல் பெரிதும் வீழ்ச்சியடைய வாய்ப்பு குறைவே.

Investment
Investment

நாடு முழுக்கவே பொருளாதார மந்தநிலை என்பதே பேச்சாக இருக்கிறது. உற்பத்திக் குறைப்பு, வேலை இழப்பு, விற்பனைச் சரிவு என அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி, இனியும் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என எல்லோரையும் கவலைக்குள்ளாக்கியது. இந்த நிலையைக் கடந்துவர வேண்டுமெனில், அரசின் உதவி கட்டாயமாக வேண்டும் என தொழில் துறை நிறுவனங்கள் பெரிதும் எதிர்பார்த்தன. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற மாதிரி, மந்தநிலைக் காய்ச்சலுக்கான பல 'மருந்து'களை பாசிட்டிவ்வாக தந்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். https://bit.ly/2MCtc0R

வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பங்கு முதலீட்டாளர்களின் மூலதன ஆதாயத்துக்கு விதிக்கப்பட்ட சர்சார்ஜ் நீக்கம், வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட பெரும் பணக்காரர்களுக்கான வரியிலிருந்து (Super rich tax) விலக்கம் ஆகிய அறிவிப்புகளால் பங்குச் சந்தை இனி ஏற்றம் காணலாம்.

ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளைத் தயவுசெய்து வாங்க வேண்டாம். சிறு முதலீட்டாளர்களுக்கு அது ரிஸ்க்கானது

சர்வதேசப் பொருளாதார நிலை இன்னும் மோசமடையும்பட்சத்தில், அதன் பாதிப்புகள் மீண்டும் நம் பொருளாதாரம்மீது எதிரொலிக்கவே செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.பொருளாதார மந்தநிலையில் சிக்காமல் இருக்க அரசை மட்டுமே நம்பியிருக்காமல், தொழில் நிறுவனங்களை நடத்துகிறவர்களும், மக்களும் நம்பிக்கையோடு சிந்தித்துச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால், எல்லாவித மந்தநிலையிலிருந்தும் நம்மால் தப்பித்து வரமுடியும்

நம் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் இந்த நிலையில் பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உள்பட எல்லா முதலீடுகளின் மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

"தற்போதுள்ள நிலையிலிருந்து பங்குச் சந்தை மேலேறி வர இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம். இந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தை கீழே இறங்கும் வாய்ப்புகளே அதிகம். குறிப்பாக, லார்ஜ் கேப் மற்றும் முன்னணிப் பெருநிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகம் இறங்க வாய்ப்புள்ளது. எனவே, லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளை சற்றுப் பொறுத்து வாங்கலாம்.

ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகளில் ஏற்கெனவே பெரிய அளவிலான வீழ்ச்சி நடந்துவிட்டது. இதற்குமேல் பெரிதும் வீழ்ச்சியடைய வாய்ப்பு குறைவே. நல்ல மிட்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளை இப்போதே வாங்கத் தொடங்கலாம். காரணம், பல பங்குகள் விலை குறைவாகவும் நியாயமான மதிப்பிலும் கிடைக்கின்றன.

Investment
Investment

நல்ல நிர்வாகத் திறனும் நேர்மையான அணுகுமுறையும் கொண்ட நிறுவனமா என்பதைக் கவனித்து, எஸ்.ஐ.பி முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளைத் தயவுசெய்து வாங்க வேண்டாம். சிறு முதலீட்டாளர்களுக்கு அது ரிஸ்க்கானது" என்றார் அவர்.

- பங்குச்சந்தை முதலீட்டுடன் வைப்பு நிதி, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த முதலீட்டாளர்களுக்கான யோசனைகளுக்கு நாடவேண்டிய நாணயம் விகடன் கட்டுரை > பொருளாதார மந்தநிலை... முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது என்ன?

https://www.vikatan.com/news/general-news/the-economic-recession-what-should-investors-do

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/