Published:Updated:

எல்.ஐ.சி-யிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியா? என்ன நடக்கிறது?

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

எல்.ஐ.சியில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து நிதி சேவைத் துறை மற்றும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை இடையே கடந்த சில வாரங்களாக ஆலோசனை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சியின் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கான வேலைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இன்னொருபுறம் எல்.ஐ.சி-யில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், அனைத்து மக்களுக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார். இதற்கு முன்பாக, கடந்த 2015-ல் காப்பீடு நிறுவனத்தில் அந்நிய முதலீடு 26 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
எல்.ஐ.சி வாடிக்கையாளர்களே, காலாவதியான உங்கள் பாலிசிகளைப் புதுப்பிக்க சலுகைகளுடன் வாய்ப்பு!

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளைக் கொண்டுவருவதற்காக, காப்பீட்டு சட்டம் 1938-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு அந்நிய முதலீடு உயர்த்தப்படும் என்றும், இதன்மூலம் காப்பீட்டு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கவும், காப்பீட்டு நிறுவனங்களைக் கட்டுக்கோப்புடன் பாதுகாக்கவும் முடியும் என்றும் அவர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான் எல்.ஐ.சியிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக, நிதி சேவைத்துறை, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத்துறை இடையே கடந்த சில வாரங்களாக ஆலோசனை நடந்து வருவதாகவும், அமைச்சகங்களுக்கு இடையே விவாதிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபிறகு இது நடைமுறைக்கு வரும் என்கிற தகவல்களும் கசிந்திருக்கின்றன.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
விரைவில் வெளியாகும் LIC IPO; போட்டி போடும் 16 வியாபார வங்கிகள்; என்ன காரணம்?

அதே நேரத்தில், எல்.ஐ.சி நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதன்மூலம், ஒரு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம், எல்.ஐ.சியின் பெரும் அளவிலான பங்கை வாங்கக் கூடும் என்றும், இதற்காகத்தான் இந்த அரசு வழிவகை செய்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இருப்பினும், அரசுத் தரப்பிலிருந்தோ அல்லது எல்.ஐ.சி தரப்பிலிருந்தோ இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு