Published:Updated:

எந்தெந்த சூழல்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பதற்றம் தரும்?

உபரித் தொகை வைத்திருக்கும் அனைவரும் முதலீட்டாளராக இருக்க முடியும். ஆனால், அத்தனை பேரும் வர்த்தகர்களாக இருக்கும் வாய்ப்பு குறைவு.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பங்குச் சந்தை மற்றும் அதுசார்ந்த திட்டங்களில் கிடைக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஆனால் இந்த ஒரு தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு பங்குச் சந்தையை அணுகினால் நஷ்டம் மட்டுமே மிஞ்சும். இன்னும் சிலர் 'பங்குச் சந்தையில் எளிதாகப் பணம் பண்ணலாம் என நண்பர்கள் கூறினார்கள், பேசிக்கொண்டார்கள்' என்று அடுத்தவர்கள் சொன்னதை நம்பி முதலீடு செய்வார்கள். இப்படிச் செய்தால் நஷ்டம் நிச்சயம் என்பதைச் சொல்லவே தேவையில்லை. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Opv4tH

நான் பங்குச் சந்தைத் தரகு நிறுவனம் நடத்திவருவதால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது எப்படிப் பணத்தை இழக்கிறார்கள் என்பதை தினமும் பார்த்துவருகிறேன்.

எந்தெந்த சூழல்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பதற்றம் தரும்?

முதலில் உபரித்தொகை இருப்பவர்கள் மட்டும் பங்குச் சந்தைக்கு வருவது நல்லது. கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, குறுகியகால அவகாசத்தில் தேவைப்படும் முக்கிய இலக்குகளுக்கான (கல்வி, மருத்துவம், திருமணம்) தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உள்ளிட்டவற்றைச் செய்யக் கூடாது. இது போன்ற தேவைகளை வைத்துக்கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்தால் பதற்றம் அதிகரிக்கும். இந்தப் பதற்றத்தால் நஷ்டமடையும்நிலை ஏற்படும். எனவே, உடனடியாகத் தேவைப்படாத தொகையை மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் அல்லது வர்த்தகம் செய்யலாம்.

யார் முதலீட்டாளர், யார் வர்த்தகர் என்பதை எப்படிக் கண்டறிவது. அடுத்துவரும் கேள்விக்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்து நீங்கள் யார் என்பதை முடிவு செய்யலாம். உங்களிடமிருக்கும் உபரித் தொகை நீண்டகாலத் தேவைக்குப் பயன்படும் என நினைப்பவராக இருந்தால் நீங்கள் முதலீட்டாளர். உபரித் தொகையை வைத்துக்கொண்டு ஏதாவது கூடுதல் வருமானம் ஈட்ட முடியுமா என யோசிப்பவராக இருந்தால் நீங்கள் வர்த்தகர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உபரித் தொகை வைத்திருக்கும் அனைவரும் முதலீட்டாளராக இருக்க முடியும். ஆனால், அத்தனை பேரும் வர்த்தகர்களாக இருக்கும் வாய்ப்பு குறைவு. வர்த்தகராக இருப்பதற்கான மனநிலை வேறு. தாங்கள் யார் என்பதிலுள்ள குழப்பம் காரணமாகவே பெரும்பாலானவர்கள் பங்குச் சந்தையில் தங்களுடைய பெரும் முதலீட்டை இழக்கிறார்கள்.

பொதுவாக முதலீட்டை மூன்று விஷயங்கள் முடிவு செய்கின்றன. வருமானம், ரிஸ்க் மற்றும் பணப்புழக்கம். முதலீட்டில் அதிக வருமானமும் வேண்டும், பணப்புழக்கமும் இருக்க வேண்டும், ரிஸ்க்கும் குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தால் எந்த முதலீட்டு வாய்ப்பைக் குறித்தும் நீங்கள் யோசிக்கவே முடியாது.

எந்தெந்த சூழல்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பதற்றம் தரும்?

வாரன் பஃபெட் கூறியிருப்பதைப்போல 'என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்வதில்தான் அதிக ரிஸ்க் இருக்கிறது.' நன்றாகத் தெரிந்துகொண்டு, ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு செய்வதால் ரிஸ்க்கைக் குறைக்கலாம்; லாபத்தையும் அதிகரிக்கலாம்.

- பங்குச்சந்தை தொடர்பான புரிதலை எளிய வடிவில் தரும் Zebu Share and Wealth Managements Pvt Ltd நிறுவனர் வி.விஜயகுமார் கூறும் வழிகாட்டுதல்களை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > முதலீடு Vs வர்த்தகம் - பங்குச் சந்தையில் உங்களுக்கு ஏற்றது எது? https://www.vikatan.com/news/share-market/investment-vs-trade-which-will-suit-you-in-share-market

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |