Published:Updated:

ஜி.டி.பி உயர... மக்கள் நலன் காக்க... அரசு செய்யவேண்டிய 5 அதிரடிகள்!

ஜி.டி.பி
ஜி.டி.பி

நிலைத்தன்மைகொண்ட கொள்கை அவசியம்: 'மாற்றமே மாற்றமில்லாதது' என்ற கருத்து நீண்டகாலத் திட்டமிடலுக்கு ஒவ்வாதது. குறிப்பாக, புதிய தொழிற்சாலைகளை அமைப்பது மிகுந்த காலம் பிடிக்கக்கூடியது என்பதால், அடிக்கடி மாறும் அரசாங்க பாலிசிகள் முதலீட்டாளர்களைத் தயக்கத்தில் ஆழ்த்துகின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற ஜூலை - செப்டம்பர் (2019) காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவிகிதமாகக் குறைந்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. முந்தைய காலாண்டில் (ஏப்ரல் - ஜூன் 2019) ஜி.டி.பி வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்ததும், ஆறு காலாண்டுகளாக வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்துகொண்டே வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சீனாவின் ஜி.டி.பி 6.1% அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளிவந்திருக்கும் நிலையில், 'சீனாவைவிட அதிக விகிதத்தில் பொருளாதார வளர்ச்சியடைகிறோம்' என்ற குறைந்தபட்ச திருப்தியும் தற்போது பறிபோய்விட்டது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2rjVXqd

பணவீக்கத்தை உள்ளடக்கிய 'நாமினல் ஜி.டி.பி' கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு (6.1%) சரிந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் குறிக்கும் ஜி.டி.பி புள்ளிவிவரம் மட்டுமல்லாமல், அடிப்படைத் துறை வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, வாகன விற்பனை, நுகர்வோர் நம்பிக்கை எனப் பல்வேறு புள்ளிவிவரங்களும் பொருளாதாரரீதியாக நம் நாடு தளர்ச்சியைச் சந்தித்துவருவதையே சுட்டிக்காட்டுகின்றன.

பிரதமரின் லட்சிய இலக்கான 2024-ம் ஆண்டுக்குள் '5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்ற நிலையை இந்தியா அடைய வேண்டுமென்றால், 4% - 6% வளர்ச்சி விகிதங்கள் போதுமானவை அல்ல. நடப்பாண்டு திருப்திகரமாக இல்லாத நிலையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான தொடர் வளர்ச்சியைக் காண வேண்டியிருக்கிறது.

ஜி.டி.பி உயர... மக்கள் நலன் காக்க... அரசு செய்யவேண்டிய 5 அதிரடிகள்!

அக்டோபர் 2019-ல் வெளியான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி அறிக்கையின்படி, நுகர்வோரின் நம்பிக்கைக் குறியீடு (89.4), கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. அதேபோல, தொழில்துறை எதிர்பார்ப்பு குறியீடும் (102.2) கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. மத்திய அரசால் 'வரைவறிக்கை' என்று வர்ணிக்கப்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் செலவின சர்வே அறிக்கையில், 'நாற்பதாண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் மக்களின் செலவினங்கள் முதன்முறையாக குறைந்திருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக யூகங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மீண்டுமொருமுறை வேகமான நெடுஞ்சாலைப் பயணத்துக்குள் இந்தியா நுழைவதற்கான 5 முக்கிய யோசனைகள்:

> தனிநபர் வருமானமும் புதிய வேலை வாய்ப்புகளும் : தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் குறைவின் முக்கியக் காரணம் நுகர்வோர் சந்தை வீழ்ச்சிதான் என்பதால், தனிநபர் வருமான வரி விகிதங்களையும் வெகுவாகக் குறைக்க வேண்டும். சரிந்துவரும் ரூபாயின் தற்போதைய உண்மையான மதிப்பைக் கருத்தில்கொண்டு, வரி வரம்புகளை வெகுவாக உயர்த்த வேண்டும். சேமிப்பு கலாசாரம் குறைந்துவரும் இன்றைய சூழ்நிலையில், வரி முதலீட்டு வரம்புகளையும் வெகுவாக உயர்த்த வேண்டும்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

> நிலைத்தன்மைகொண்ட கொள்கை அவசியம்: 'மாற்றமே மாற்றமில்லாதது' என்ற கருத்து நீண்டகாலத் திட்டமிடலுக்கு ஒவ்வாதது. குறிப்பாக, புதிய தொழிற்சாலைகளை அமைப்பது மிகுந்த காலம் பிடிக்கக்கூடியது என்பதால், அடிக்கடி மாறும் அரசாங்க பாலிசிகள் முதலீட்டாளர்களைத் தயக்கத்தில் ஆழ்த்துகின்றன. நேரடி/மறைமுக வரி விதிப்பு, வேளாண்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது, தொலைத் தொடர்பு, ஏற்றுமதி/இறக்குமதி, அரசு மானியங்கள், வரிச் சலுகைகள் போன்ற அதிமுக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் கூடிய நீண்டகாலக் கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும். அவை வெளிப்படை யானவையாகவும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவையாகவும் அடிக்கடி மாற்றத்துக்கு உட்படாதவையாகவும் அமைய வேண்டும்.

ஜி.டி.பி உயர... மக்கள் நலன் காக்க... அரசு செய்யவேண்டிய 5 அதிரடிகள்!

> நிகர ஏற்றுமதி வளர்ச்சி: ஏற்றுமதியை ஊக்குவிப்பது எவ்வளவு அவசியமோ, அதைவிட முக்கியமானது இறக்குமதியைக் குறைப்பது. ஏனென்றால் இறக்குமதி, கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்நியச் செலாவணி இழப்பை ஏற்படுத்துவதுடன் உள்நாட்டுத் தொழில்களையும் நசிவடைய செய்துவிடும். வரிச் சலுகைகளுடன்கூடிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி அங்கு எலெக்ட்ரானிக்ஸ், தளவாடச் சாதனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வகையில் தனியார்/அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கலாம்.

4. பொருளாதாரச் சீர்திருத்தங்கள்: இன்று பல துறைகள் மத்திய அரசின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டிலேயே இயங்க வேண்டியதாக இருக்கிறது. பாதுகாப்பு போன்ற தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சில துறைகளைத் தவிர்த்து, மற்ற துறைகள் அனைத்தும் மாநிலம் அல்லது உள்ளாட்சித் துறையின் வசம் இருக்க வேண்டும். வழிகாட்டுக் கொள்கைகள் மட்டுமே மத்திய அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். அதிகாரத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்து, தொழில் முதலீடுகளைப் பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பது மத்திய அரசின் கடமை. மத்திய ரிசர்வ் வங்கி, புள்ளியியல் அலுவலகம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் முழு சுயாட்சியுடன் இயங்குவது சர்வதேசச் சந்தையில் நமது மதிப்பைக் கூட்டுவது மட்டுமல்லாமல் உலக முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவை நோக்கித் திருப்பவும் உதவும்.

5. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது: 'தூய்மை இந்தியா' போன்ற மத்திய அரசின் திட்டங்கள் நல்ல நோக்கங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், மாநில அரசோ, உள்ளாட்சி அமைப்புகளோ செயல்படுத்த வேண்டிய மக்கள்நலத் திட்டங்களை மத்திய அரசு நேரடியாகக் கையிலெடுக்கும்போது நிர்வாகரீதியான செலவினங்கள் அதிகரிக்கின்றன. 'பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த அரசின் செல்வினங்களை மேலும் அதிகரிக்க வேண்டும்' என்ற குரல்கள் பலமாக ஒலிக்கின்றன. ஆனால், நிதிப் பற்றாக்குறையின் அதிகரிப்பு நீண்டகால நோக்கில் நல்லதல்ல.

- பொருளாதார நிபுணர் ஆர்.மோகனப் பிரபு தரும் இந்த 5 யோசனைகளை விரிவாக நாணயம் விகடன் இதழின் கவர்ஸ்டோரியில் வாசிக்க > ஜி.டி.பி ... பொருளாதார உயர்வுக்கு... தேவை அரசின் 5 நடவடிக்கைகள்! https://www.vikatan.com/news/general-news/5-actions-to-solve-gdp-and-economical-issues

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு