மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், புதிதாகத் திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது அதன் முகமதிப்பான 10 ரூபாயிலேயே யூனிட்டுகளை ஒதுக்கீடு செய்யும். இது மலிவாக மற்றும் லாபகரமாக இருக்கும் எனப் பல முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.
அதிக யூனிட்டுகள் என்பதால் லாபமா?
உதாரணத்துக்கு, ஒருவர் 10,000 ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்கிறார் என்றால், புதிய ஃபண்ட் வெளியீட்டின்போது ஒரு யூனிட் மதிப்பு ரூ.10 என்கிறபட்சத்தில் 1,000 யூனிட்டுகள் அவருக்கு ஒதுக்கப்படும். இதுவே, ஏற்கெனவே உள்ள ஒரு ஃபண்ட்டில், அதன் என்.ஏ.வி ரூ. 20-க்கு உயர்ந்திருந்தால், ரூ.10,000-க்கு 500 யூனிட்டுகள் கிடைக்கும்.
ஓராண்டில் பங்குச் சந்தையில் 10% வளர்ச்சி கண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இரு ஃபண்டுகளும் பங்குச் சந்தையையொட்டியே லாபம் தந்திருந்தால் புதிய ஃபண்டின் யூனிட் மதிப்பு ரூ. 11 ஆகவும் பழைய ஃபண்டின் யூனிட் மதிப்பு ரூ. 22 ஆகவும் அதிகரித்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதன்படிப் பார்த்தால் அவருக்கு 1,000 * 1,500 * 2 அதாவது ரூ.1,000 தான் லாபம் கிடைக்கும். எனவே, ஒரு ஃபண்ட் எத்தனை சதவிகிதம் வருமானம் தரும் எனப் பார்க்க வேண்டுமே தவிர, அதன் என்.ஏ.வி மதிப்பை அல்ல.
எப்போது என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்ய வேண்டும்?
புதிய கருத்து (Theme) அடிப்படையில் புதிய ஃபண்ட் வெளிவரும் போது, அதில் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலையில் பெரும்பாலான கருத்துகளில் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில் புதிய ஃபண்ட் எப்படி வருமானம் கொடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கடந்த கால வரலாறும் இல்லை. புதிய ஃபண்டை நிர்வகிக்கப்போகும் ஃபண்ட் மேனேஜர் ஏற்கெனவே நிர்வகித்து வரும் ஃபண்டுகள் எப்படி வருமானம் கொடுத்து வருகின்றன என்பதை அலசி ஆராய்ந்து அவர் நிர்வகிக்கப்போகிற ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்படி அதிக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வதற்குப் பதில் ஏற்கெனவே சிறப்பாக, நன்றாகச் செயல்பட்டு நல்ல திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்வது கூடுதல் லாபமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது பெரும்பாலும் மொத்த முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது. காரணம், மொத்த முதலீட்டுக்குப் பிறகு, சந்தை அதிகமாக இறங்கிவிட்டால் அதிக இழப்பாக இருக்கும். இது என்.எஃப்.ஓ-க்கும் பொருந்தும், பழைய ஃபண்டுக்கும் பொருந்தும். இரு ஃபண்டுகளிலும் எஸ்.ஐ.பி முறையில்தான் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அதுவும் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டி இருக்கும். அந்த வகையில், புதிய ஃபண்டைவிட பழைய ஃபண்ட் லாபகரமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. கடன் ஃபண்டுகளுக்கும் இது பொருந்தும்.

குறைந்தது 5, 10, 15 ஆண்டுகளாக பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் நல்ல வருமானம் கொடுத்து வரும் ஃபண்டுகளாகப் பார்த்து முதலீடு செய்வது நல்லது. அதற்காக, கடந்த காலங்களில் சிறப்பான வருமானம் கொடுத்திருக்கிறது என்பதற்காக எதிர்காலத்திலும் அதேபோல் நல்ல லாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் கிடையாது. ஆண்டுக்கு ஒரு முறை ஃபண்டின் வருமானச் செயல்பாட்டை கண்காணித்து தேவைப்பட்டால், ஃபண்டை மாற்றுவது லாபகரமாக இருக்கும்.