Published:Updated:

சீனாவிலிருந்து வெளியேற சர்வதேச முதலீட்டாளர்கள் முன்வருவார்களா?

முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள்

மிகச் சிறப்பான தொழில் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட சீனாவிலிருந்து வெளியேற முதலீட்டாளர்கள் அவ்வளவு சீக்கிரம் முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே.

இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றுக்கும் கொரோனா பெருந்தொற்று கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியிருந்தாலும், மறுபக்கம் அரிதான சில நல்வாய்ப்புகளையும் வழங்கியிருக்கிறது.

தற்போது உலக நாடுகளின் கோபம் சீனாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. உலகின் உற்பத்தி கேந்திரமாக சீனா விளங்கிவருவதால், அங்கு கொரோனா பெருந்தொற்றால் உற்பத்தி நிறுத்தம் ஏற்பட்டபோது, ஒட்டுமொத்த உலகமே பொருள் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டது.

இதன் காரணமாக, தொழில் முதலீட்டுக்கு ஒரு நாட்டை மட்டுமே பெருமளவு சார்ந்திராமல், வருங்காலத்தில் தங்களது முதலீடுகளைப் பரந்துபட்டு வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்த சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் விரும்புவார்கள் என்பதே பல பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.

இதுபோன்ற ஒரு முதலீட்டு நல்வாய்ப்பை இந்தியா எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளும் என்பதே இன்றைக்குப் பலரின் கேள்வியாக இருக்கிறது.

முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள்

`சீனா, தனது நாணயத்தின் மதிப்பை அதிரடியாகக் குறைக்கும்பட்சத்தில், அந்த நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளதால், உலகம் முழுவதுமுள்ள மக்கள் சீனப் பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்' என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணரான அபிஜித் பானர்ஜி சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

கொரோனா என்ற வைரஸ் குறித்து எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத நிலையிலும்கூட மிகத் துரிதமாகச் செயல்பட்டு அந்த நோய் நாடு முழுவதும் பரவாமல் தடுத்தது சீனா.

எனவே, இந்த நோயால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீண்டெழும் முதல் நாடாகவும் இருக்கும் என்பதே பலரது கருத்து. மேலும், மிகச் சிறப்பான தொழில் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட சீனாவிலிருந்து வெளியேற முதலீட்டாளர்கள் அவ்வளவு சீக்கிரம் முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே.

'ஒட்டுமொத்த உலகத்துக்குமான ஏற்றுமதியாளர்' என்ற நிலையை எளிதாக சீனா விட்டுக் கொடுத்து விடாது!

குறிப்பாக, அமெரிக்காவுக்கு நிகரான பெரும் வல்லரசாக உருவெடுத்திருக்கும் சீனாவின் பொருளாதார வலிமையையும் குறைத்து மதிப்பிட முடியாது.

- இந்தப் பின்னணியில் இந்தியா என்ன செய்ய வேண்டும்..? - முழுமையான கட்டுரையை வாசிக்க > சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள்..! - இந்தியாவில் கால்பதிக்குமா..? https://bit.ly/2WEnU8W

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு