Published:Updated:

வேலை பார்க்கும் பெண்கள் முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

ஐ.வி சுப்பிரமணியம், லலிதா ஜெயபாலன்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.வி சுப்பிரமணியம், லலிதா ஜெயபாலன்

முதலீடு

வேலை பார்க்கும் பெண்கள் முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

முதலீடு

Published:Updated:
ஐ.வி சுப்பிரமணியம், லலிதா ஜெயபாலன்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.வி சுப்பிரமணியம், லலிதா ஜெயபாலன்

நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `பெண்களும் முதலீடும்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின. இதில் முதலில் பேசிய குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.வி சுப்பிரமணியம், ‘‘கோவிட்-19 பாதிப்பு குடும்ப உறுப்பினர்களிடையே குறிப்பாக, பெண்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. பல குடும்பத் தலைவிகள் குடும்ப நிதிப் பொறுப்பை எடுத்து நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த நிலையில், அவர்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்திச் சென்றார்கள்; செல் கிறார்கள். அவர்களை நாம் பாராட்டி ஊக்கு விக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்து பேசிய நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன், ‘‘பொதுவாக, பல இடங்களில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் குறைவான காலமே வேலைபார்க்கிறார்கள். அதனால், அவர்கள் முதல் சம்பளத்திலிருந்தே சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்’’ என்றார்.

சிவகுமார் என்பவர், ஈக்விட்டி, கடன் ஃபண்டுகளில் தலா 45%, தங்கத்தில் 10% என முதலீடு செய்யலாமா என்று கேட்க, அதற்கு பதில் அளித்த ஐ.வி சுப்பிரமணியம், ‘‘ஒருவர் அவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்கு, முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப் படையில் அஸெட் அலொகேஷனை உருவாக்க வேண்டும். அப்போதுதான் கோவிட் 19 பாதிப்பு, ரஷ்யா - உக்ரைன் போரின்போது சந்தை இறங்குகையில் நிம்மதியாகத் தூங்க முடியும்” என்றார்.

தங்கத்தில், பெண்கள் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு லலிதா ஜெயபாலன், ‘‘முதலீட்டு நோக்கில் தங்கத்தைப் பார்க்கும்போது நகையாக வாங்கக் கூடாது. நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என சுமார் 20% தொகை போய்விடும். இதற்கு பதில், தங்க நாணயங்கள், கோல்டு இ.டிஎஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு பத்திரத்தில் முதலீடு செய்து வரலாம்’’ என்றார்.

இன்னும் பல சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விரிவாக பதில் அளிக்க நிகழ்ச்சி நிறைவடைந் தது. இந்த நிகழ்ச்சியை வீடியோவில் காண https://bit.ly/3hmYIgH

ஐ.வி சுப்பிரமணியம், லலிதா ஜெயபாலன்
ஐ.வி சுப்பிரமணியம், லலிதா ஜெயபாலன்