யெஸ் பேங்க், நிதி நெருக்கடி யில் சிக்கிய காரணத்தால் அந்த வங்கியைத் தற்போது எஸ்.பி.ஐ கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. எஸ்.பி.ஐ தமது கையகப்படுத்தலின் ஒரு பகுதியாக யெஸ் பேங்கின் கடன்களை சீராய்வு செய்து வருகிறது. இந்தப் பிரச்னை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது அந்த வங்கியில் AT1 பாண்டுகளில் முதலீடு செய்தவர்களாக உள்ளனர். இந்த பாண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்று கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்ததால், அதில் முதலீடு செய்தவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கிகள் மக்களிடம் டெபாசிட் மட்டுமன்றி, வேறு பலவித வழிகளில் முதலீடுகளைப் பெறுகின்றன. அடிஷனல் டயர் 1 பாண்டுகள் என்று அழைக்கப்படும் AT1 பாண்டுகள் சற்று ரிஸ்க் அதிகமான முதலீடாகக் கருதப் படுகிறது. வங்கி டெபாசிட்டைவிட இதுபோன்ற பாண்டுகளில் முதலீடு செய்யும்போது அதற்கு வட்டி அதிகம் கிடைக்கும். அதன் காரணமாகப் பல முதலீட்டாளர்கள் இதுபோன்ற பாண்டுகளில் முதலீடு செய்வது வழக்கம். அங்கீகரிக்கப்பட்ட பல கிளைகளைக் கொண்ட வங்கி ஆதலால் தமது பணம் நிச்சயம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற பாண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற பாண்டுகளை நேரடி யாக வங்கிகளில் வெளியிடப்படும் தேதிகளில் வாடிக்கையாளர் வாங்க முடியும். அல்லது செகண்டரி மார்க்கெட்டில் வாங்க முடியும். யெஸ் பேங்க் வெளியிட்ட AT1 பாண்டுகளின் முகமதிப்பு ரூ.10 லட்சமாக உள்ளது. இதுபோன்ற பாண்டுகளை வெளியிட்டு யெஸ் பேங்க் ரூ.10,800 கோடி திரட்டியுள்ளது. இந்த பாண்டுகளில் பலர் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு செய்து உள்ளனர். அதிகபட்சமாக 63 மூன்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனம் இது போன்று 3,000 பாண்டுகளில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதுபோன்ற பாண்டுகளில் முதிர்ச்சிக் காலம் என்று பொதுவான தேதி இருக்காது. வட்டி விகிதங்களை மாற்றுவதற்கோ, பொருளாதாரக் காரணிகளால் வங்கி திவாலானால் இது போன்ற பாண்டுகளைத் தள்ளுபடி செய்வதற்கோ வங்கிக்கு உரிமை உள்ளது.

‘‘ரிஸ்க் அதிகமாக உள்ள காரணத்தால்தான் இதுபோன்ற பாண்டுகளுக்கு அதிக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரிஸ்க்கைத் தெரிந்துகொண்டுதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து உள்ளனர். அதனால் நிதிச் சிக்கல் காரணங்களால் யெஸ் பேங்க் வழங்கிய இந்த பாண்டுகளுக்கு எஸ்.பி.ஐ பொறுப்பு ஏற்க முடியாது’’ என்று ரிசர்வ் வங்கி இந்த பாண்டு களைத் தள்ளுபடி செய்ததே முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, வங்கி டெபாசிட்டுக்கு வட்டி என்பது 7% என்கிற அளவுக்கு உள்ளது. இது போன்ற பாண்டுகளில் 9% - 10% வட்டி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ரிஸ்க் அதிகமான பாண்டுகளில் முதலீடு செய்வது முதலுக்கே மோசம் செய்துவிடும் என்ற பாடத்தை யெஸ் பேங்க் நமக்கு உணர்த்தியுள்ளது. இந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணம் முழுவதும் கிடைத்துவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சந்தையில் பலவித முதலீடுத் திட்டங்கள் இருக் கின்றன. இது போன்ற திட்டங்களில் அதிக பணத்தை முதலீடு செய்யும் போது அதன் சாதக பாதகங்களை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் ஏதாவது அதிசயம் நடந்து, முதலீடு செய்த பணத்தை எஸ்.பி.ஐ வங்கி திரும்பி தந்துவிடாதா என்ற பரிதவிப்பில் ரூ.10,800 கோடி முதலீடு செய்தவர்கள் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல முடியும்.