பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

விரைவில் ஐ.பி.ஓ வரும் டி.வி.எஸ் சப்ளை செயின் நிறுவனம்!

ஆர்.தினேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.தினேஷ்

முதலீடு

தி.ஈ.நரசிம்மன்

டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் (TVS Supply Chain Solutions (TVS SCS)) நிறுவனம், பங்குச் சந்தையில் தனது பங்குகளை ஐ.பி.ஓ மூலம் வெளியிட்டு ரூ.5,000 கோடி முதலீட்டைத் திரட்ட உள்ளது. கடந்த பிப்ரவரி 15-ம் தேதியன்று செபியிடம் இதற் கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

விரைவில் ஐ.பி.ஓ வரும் டி.வி.எஸ் சப்ளை செயின் நிறுவனம்!

டி.வி.எஸ் குழுமத்திலிருந்து 28 ஆண்டு களுக்குப் பிறகு ஐ.பி.ஓ வரும் முதல் நிறுவனம் இது என்பதுடன், டி.வி.எஸ் மோட்டாருக்குப் பிறகு, இந்தக் குழுமத்திலிருந்து வரும் இரண்டாவது பெரிய நிறுவனம் இதுவாகும்.

ஐ.பி.ஓ மூலம் கிடைக்கும் வருவாயில் கடனைத் திருப்பிச் செலுத்த ரூ.1,166 கோடியும், ஜெர்மனி, அமெரிக்காவில் உள்ள வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துணை நிறுவனங்களின் சந்தை மதிப்பை மேலும் அதிகரிப்பதற்கான செயல்பாடுகளுக்காக ரூ.75.2 கோடியும் பயன்படுத்தப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் டி.வி.எஸ் குழும நிறுவனங்கள் பங்குதாரர்களுக்குச் சிறப்பான லாபத்தை அளித்துள்ளன. டி.வி.எஸ் சக்ரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2012 பிப்ரவரியில் ரூ.305-லிருந்து, 2022-ல் ரூ.1,964-ஆகவும், சுந்தரம் பாசனர்ஸ் லிட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.53.75-லிருந்து ரூ.840 ஆகவும், டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.49.75-லிருந்து ரூ.642 ஆகவும், டி.வி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.19.85-லிருந்து ரூ.219 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆர்.தினேஷ்
ஆர்.தினேஷ்

ஆர்.தினேஷ் தலைமையில் இயங்கும்டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் கடந்த 15 ஆண்டுகளில் 36% கூட்டு வருமான வளர்ச்சியையும், 37% எபிட்டா வளர்ச்சியையும் தொடர்ச்சியாக ஈட்டி வருகிறது. டி.வி.எஸ் குழுமத்தின் பிற நிறுவனங்களைப்போல, இந்த நிறுவனமும் முலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை அள்ளித் தரும் என எதிர்பார்க்கலாம்!