Published:Updated:

ஆன்லைன் ஷாப்பிங் Review-களுக்கு வந்தாச்சு செக்! ஐ.எஸ் 19000:2022 வெளியீடு!

ஆன்லைன் ஷாப்பிங்
News
ஆன்லைன் ஷாப்பிங்

இந்த வழிமுறைகளின்படி, ரிவ்யூ பதிவுகள் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் சரிபார்க்கப்படும். captcha அல்லது லிங்க் மூலம் அவர்களது registration சரிபார்க்கப்படும்.

ஆன்லைன் ஷாப்பிங் Review-களுக்கு வந்தாச்சு செக்! ஐ.எஸ் 19000:2022 வெளியீடு!

இந்த வழிமுறைகளின்படி, ரிவ்யூ பதிவுகள் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் சரிபார்க்கப்படும். captcha அல்லது லிங்க் மூலம் அவர்களது registration சரிபார்க்கப்படும்.

Published:Updated:
ஆன்லைன் ஷாப்பிங்
News
ஆன்லைன் ஷாப்பிங்

வலைதளங்கள் வழிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள BIS-யில் சரிபார்த்து சான்று பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை இதைப் பின்பற்றாமல், தவறான வணிக நடைமுறைகளைப் பின்பற்றினால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட வலைதளம் மேல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

ஆன்லைன் ஷாப்பிங் review
ஆன்லைன் ஷாப்பிங் review

இன்றைய காலகட்டத்தில் நமக்கு ஷாப்பிங் என்றாலே ஆன்லைன் ஷாப்பிங்தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். நாம் கடைவீதிக்கு சென்று பொருள்களைத் தேடித்தேடி வாங்குவதைவிட ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு க்ளிக் நமது ஷாப்பிங்கை எளிதாக்கிவிடுகிறது. ஆனால், நாம் நேரில் சென்று பொருள்களை வாங்கும்போது அதைத் தொட்டு தரம் பார்த்து வாங்க முடியும்; ஆன்லைன் ஷாப்பிங் என்று வந்துவிட்டால் அந்த வசதி கிடையாது. அதனால் நமக்கு இருக்கும் ஒரே ஆப்சன் ரிவ்யூ (review) பார்த்து பொருள்களை வாங்குவதுதான்.

ஒரு பொருளுக்கு வந்திருக்கும் அனைத்து ரிவ்யூக்களும் உண்மையானதா என்ற சந்தேகம் நமக்கு எழுந்துகொண்டேதான் இருக்கிறது. மேலும், பல ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களில் போலியான ரிவ்யூக்கள் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இது நுகர்வோருக்கான பிரச்னை மட்டும் இல்லை; விற்பவர்களுக்குமானதுதான்.

கடந்த திங்கள்கிழமை, இதற்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் போலி ரிவ்யூக்களை தடுக்க ஐ.எஸ் 19000:2022 என சில வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த வழிமுறைகள் வரும் நவம்பர் 25-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

BIS
BIS

இந்த ஐ.எஸ் 19000:2022 வழிமுறைகள் Bureau of Indian Standards-ஆல் வகுக்கப்பட்டதாகும். BIS, நுகர்வோர் செயலகம் (Consumer Affairs Secretary), தொழிற்சாலைகள் ஆகிய மூன்றும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழிமுறைகளை வகுத்துள்ளது. மேலும், இதில் பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாக்கள், உணவகங்கள், சாதனங்கள் ஆகியவற்றில் ரிவ்யூ என்பது மிக மிக முக்கியமாகும். இவற்றிலெல்லாம் போலி ரிவ்யூக்கள் மலிந்து கிடக்கின்றன என்பது கவலையான மற்றும் சிக்கலான விஷயம் ஆகும்.

நுகர்வோர் செயலாளர் ரோஹித் குமார் சிங்
நுகர்வோர் செயலாளர் ரோஹித் குமார் சிங்
Twitter

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் நுகர்வோர் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியதாவது, ``போலி ரிவ்யூக்கள் என்பது நம் நாட்டுக்கான பிரச்னை மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளுக்குமான பிரச்னை ஆகும். அதைத் தடுக்க சில நாடுகள் விதிமுறைகளையும், சில நாடுகள் சட்டங்களையும் பிறப்பிக்கின்றன. ஆனால், போலி ரிவ்யூக்களைத் தடுக்க வழிமுறைகள் வகுக்கும் முதல் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

புதிதாக வகுக்கப்பட்ட வழிமுறைகள், ஆன்லைனில் பதிவு செய்யப்படும் அனைத்து ரிவ்யூக்களுக்கும் பொருந்தும். இந்த வழிமுறைகளின்படி, ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களில் வரக்கூடிய அனைத்து ரிவ்யூக்களுமான உண்மைத்தன்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ரிவ்யூ பதிவு செய்தவரின் தகவல்களை வெளியிடக் கூடாது.

ரிவ்யூ
ரிவ்யூ

முதல்கட்டமாக, இந்த வழிமுறைகளை அனைத்து வலைதளங்களும் பின்பற்றுவது கட்டாயமானது இல்லை. இந்த போலி ரிவ்யூக்கள் பிரச்னை தொடருமானால், பின்னர் இந்த வழிமுறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த வழிமுறைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் நேர்மறையான நடைமுறைகளை உருவாக்க ஏற்றவாறு வழிமுறைகளை வகுக்க உதவும்.

இந்த வழிமுறைகள் நுகர்வோர், ஆன்லைன் வலைதளம், விற்பனையாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது நுகர்வோருக்கு ஆன்லைன் வலைதளங்களின்மீது உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்" என்று கூறினார்.

 ரிவ்யூ
ரிவ்யூ

இந்த வழிமுறைகளின்படி, ரிவ்யூ பதிவுகள் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் சரிபார்க்கப்படும். captcha அல்லது லிங்க் மூலம் அவர்களது registration சரிபார்க்கப்படும். மேலும் ரிவ்யூக்கள் ஆட்டோமேட் முறை மூலமும் மேனுவல் முறை மூலமும் சரிபார்க்கப்படும்.