Published:Updated:

பங்கு விலையை அதிகரிக்க எல்.ஐ.சி போனஸ் பங்குகள் வழங்க திட்டம்?

எல்.ஐ.சி போனஸ் பங்குகள்
News
எல்.ஐ.சி போனஸ் பங்குகள்

பாலிசிதாரர்களிடமிருந்து பங்குதாரர்களுக்கு பணத்தை மாற்றுவது ஒரு புதிய அணுகுமுறை என்றாலும், பங்கு விலையை அதிகரிக்க போனஸ் பங்குகளை வழங்குவது பழைய நடைமுறையாகும்.

பங்கு விலையை அதிகரிக்க எல்.ஐ.சி போனஸ் பங்குகள் வழங்க திட்டம்?

பாலிசிதாரர்களிடமிருந்து பங்குதாரர்களுக்கு பணத்தை மாற்றுவது ஒரு புதிய அணுகுமுறை என்றாலும், பங்கு விலையை அதிகரிக்க போனஸ் பங்குகளை வழங்குவது பழைய நடைமுறையாகும்.

Published:Updated:
எல்.ஐ.சி போனஸ் பங்குகள்
News
எல்.ஐ.சி போனஸ் பங்குகள்

பாலிசிதாரர்களிடமிருந்து பங்குதாரர்களுக்கு பணத்தை மாற்றுவது ஒரு புதிய அணுகுமுறை என்றாலும், பங்கு விலையை அதிகரிக்க போனஸ் பங்குகளை வழங்குவது பழைய நடைமுறையாகும். உதாரணமாக, 2008-ம் ஆண்டில் சந்தை விலை ஐபிஓ விலையைவிடக் குறைவாக இருந்தபோது, ரிலையன்ஸ் பவர் (Reliance Power) நிறுவனம் 3:5 விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்கியது. நிறுவன ஸ்தாபகர்கள் தங்கள் போனஸ் உரிமையை விட்டுக் கொடுத்தபோதிலும் பங்கு விலை உயரவில்லை!

காப்பீட்டுத் துறையிலும் 2 சமீபத்திய எடுத்துக் காட்டுகள் உள்ளன. அவற்றை பரிசீலனை செய்வோம். எல்.ஐ.சி பற்றிய விவரங்களை ஒப்பீடு செய்வதற்காக கீழே உள்ள அட்டவனையைப் பாருங்கள்.

ஒப்பீடு
ஒப்பீடு

கணிசமான போனஸ் பங்குகள் கொடுத்த போதிலும் மேலே குறிப்பிட்ட இரு நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் சரிவையே சந்தித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்குகளின் விலை 70% -க்கும் மேலாக சரிந்து, பங்குதாரர்களுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், இவ்விரு பங்குகளும் கடந்த 5 ஆண்டுகளில் ஐபிஓ விலையை (போனஸ் பங்கிற்கு முன்னும் மற்றும் பின்னும்) கடக்கவே இல்லை!

இத்தகைய சூழ்நிலையில், போனஸ் பங்குகளோ, சிறப்பு டிவிடெண்டோ எவ்விதத்தில் எல்.ஐ.சி-யின் பங்கு விலையை உயர்த்த முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எல்.ஐ.சி-யின் பி/ஈ விகிதம் (P/E Ratio) மிகவும் அதிகம். எல்.ஐ.சி பங்கின் தற்போதைய விலையான ரூ. 619/-ஐ சென்ற ஆண்டின் நிகர லாபத்தோடு (ஒரு பங்குக்கு ரூ.6.30/-) ஒப்பிடுகையில், பி/ஈ விகிதம் 97-க்கும் அதிகம். வரும் ஆண்டுகளில் எல்.ஐ.சி-யின் லாபம் கணிசமாக உயர்ந்தால்தான் பங்கு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. போனஸ் வெளியீடு மற்றும் சிறப்பு டிவிடெண்ட் போன்ற நிகழ்வுகள் மட்டும் பங்கின் விலையை நிரந்தமாக உயர்த்த வழியில்லை.

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com
எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

இந்த நடவடிக்கையால் எல்.ஐ.சி-யின் பங்குதாரர்களின் மதிப்பு ரூ. 1.80 லட்சம் கோடி அதிகரிக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன. இது சரியானதே. ஆனால், இது சென்ற நிதி ஆண்டு லாபத்தின் அடிப்படையில், பங்குதாரர்களின் லாப விகிதம் (Return on Equity) 2.1% ஆகக் குறைந்துவிடும். இது வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தைவிட குறைவானது. இந்த லாப விகிதம் மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் பங்கு விலை உயர்வதற்கான வாய்ப்பு குறைவே. எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்ய எண்ணம் இருப்பின் மேற்கூறிய அம்சங்களை மனதில் கொண்டு முடிவெடுத்தல் நலம்.

- எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com