Published:Updated:

அனில் அம்பானியைப் போல் மொபைல் சேவையால் வீழ்ச்சியை சந்தித்த வீடியோகான் வேணுகோபால் தூத்!

வீடியோகான் வேணுகோபால் தூத்
News
வீடியோகான் வேணுகோபால் தூத்

தொழிலதிபர் அனில் அம்பானி வீழ்ந்த போது அவரை தூக்கிவிட முகேஷ் அம்பானி இருந்தார். ஆனால் வேணுகோபாலை தூக்கிவிட யாரும் இல்லை. அவரது நிறுவனம் 31 ஆயிரம் கோடி கடனில் சிக்கியது. பிரச்னை தேசிய கம்பெனி தீர்ப்பாயத்திற்கு சென்றது.

அனில் அம்பானியைப் போல் மொபைல் சேவையால் வீழ்ச்சியை சந்தித்த வீடியோகான் வேணுகோபால் தூத்!

தொழிலதிபர் அனில் அம்பானி வீழ்ந்த போது அவரை தூக்கிவிட முகேஷ் அம்பானி இருந்தார். ஆனால் வேணுகோபாலை தூக்கிவிட யாரும் இல்லை. அவரது நிறுவனம் 31 ஆயிரம் கோடி கடனில் சிக்கியது. பிரச்னை தேசிய கம்பெனி தீர்ப்பாயத்திற்கு சென்றது.

Published:Updated:
வீடியோகான் வேணுகோபால் தூத்
News
வீடியோகான் வேணுகோபால் தூத்

வீடியோகான் தொழிலதிபர் வேணுகோபால் தூத் ரூ.31 ஆயிரம் கோடி கடன் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த வேணுகோபால் தொழிலின் உச்சத்திற்கே சென்றார். வீடியோகான் டிவி, வாஷிங்மெஷின் என்று எதை எடுத்தாலும் வீடியோகான் பெயர் ஒரு காலத்தில் மேலோங்கி இருந்தது. ஆனால் எல்லாம் திடீரென மாறிவிட்டது. மகாராஷ்டிராவின் அகமத்நகரை சேர்ந்த வேணுகோபால் வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள், கேஸ், ஆயில், ரியல் எஸ்டேட், சில்லறை வர்த்தகம் என அனைத்து துறையிலும் காலடி எடுத்து வைத்திருந்தார்.

வேணுகோபால் தூத்
வேணுகோபால் தூத்

ஆரம்பத்தில் பஜாஜ் ஸ்கூட்டர் டீலர்ஜிப் நடத்தி வந்த வேணுகோபால் 1984-ம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்தை தொடங்கினார். வேணுகோபால் கலர் டிவி உற்பத்தியை தொடங்குவதற்காக ஜப்பான் சென்று ஒரு ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் தொழில் தொடங்க பயிற்சி எடுத்து வந்தார்.

வீடியோகான் டிவி தொடக்கம்

1986-ம் ஆண்டு வீடியோகான் இண்டர்நேசனல் என்ற பெயரில் தனி நிறுவனத்தை தொடங்கி ஆண்டுக்கு ஒரு லட்சம் டிவி தயாரிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டார். டிவி தயாரிப்பு தொழில் நுட்பத்திற்காக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். டிவி உற்பத்தியை தொடர்ந்து ரெபிரிஜரேட்டர், வாஷிங்மெஷின், ஏர்கண்டிஷனர் உட்பட வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தியில் தனது தொழிலை விரிவுபடுத்தினார்.

அந்நேரத்தில் போட்டி நிறுவனங்களாக இருந்தவை வீடியோகானுடன் போட்டியிட முடியாத நிலையில் இருந்தன. டிவி மற்றும் எலக்ட்ரானிக் தொழில் பெரிய அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஆயில், கேஸ் மற்றும் செல் போன் சேவையில் அடியெடுத்து வைத்தது. செல்போன் சேவையில் அடியெடுத்து வைத்ததுதான் வீடியோகான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது.

சறுக்கல் தொடங்கியது...

18 மண்டலங்களில் மொபைல் சேவை தொடங்க அனுமதி பெற்று வெறும் 11 மண்டலத்தில் மட்டுமே மொபைல் போன் சேவையை தொடங்கிய வீடியோகான் அதனையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்து உத்தரவிட்டது. அதில் வீடியோகானின் 21 லைசென்ஸ்களும் அடங்கும். அப்படி இருந்தும் போராடி மீண்டும் ஏலத்தில் கலந்து கொண்டு 6 லைசென்ஸ்களை மட்டும் வீடியோகான் திரும்ப பெற்றது.

ஆனால் அதனையும் நடத்த முடியாமல் ஏர்டெல் நிறுவனத்திடம் மலிவு விலைக்கு விற்பனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதோடு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் எல்ஜி மற்றும் சேம்சங் நிறுவனங்களால் கடுமையான போட்டியை சந்திக்க நேரிட்டது. எல்ஜி மற்றும் சேம்சங் நிறுவனங்கள் உயர் தொழில் நுட்பத்தில் குறைந்த விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சப்ளை செய்தது. இதனால் வீடியோகான் நிறுவனத்தால் போட்டியை சமாளிக்க முடியவில்லை.

கைதான வீடியோகான் வேணுகோபால் தூத்
கைதான வீடியோகான் வேணுகோபால் தூத்

நிறுவனங்கள் விற்பனை

வீடியோகான் நிறுவனத்திற்கு எலக்ட்ரானிஸ் பொருட்கள் உற்பத்தியில்தான் அதிக அளவில் வருவாய் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் அதில் வருவாய் குறைந்தவுடன் கடன் தொல்லை அதிகரித்தது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனது. இதனால் வீடியோகான் தனது டிடிஎச் சேவையை டிஸ் டிவிக்கு விற்பனை செய்தது. அப்படியும் முடியாமல் கேஸ்பீல்டு, செல்போன் சேவையை விற்பனை செய்த பிறகும் நிலைமையை சமாளிக்க முடியவில்லை.

தொழிலதிபர் அனில் அம்பானி வீழ்ந்த போது அவரை தூக்கிவிட முகேஷ் அம்பானி இருந்தார். ஆனால் வேணுகோபாலை தூக்கிவிட யாரும் இல்லை. அவரது நிறுவனம் 31 ஆயிரம் கோடி கடனில் சிக்கியது. பிரச்னை தேசிய கம்பெனி தீர்ப்பாயத்திற்கு சென்றது. இதையடுத்து வீடியோகான் கம்பெனியின் சொத்துக்கள் அனைத்தையும் அப்படியே விற்பனை செய்ய ஏலம் விட்ட போது வெறும் 2692 கோடிக்கு தொழிலதிபர் அனில் அகர்வால் எடுத்தார். இந்த அளவுக்கு குறைந்த தொகைக்கு எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அனில் அம்பானியைப் போல் மொபைல் சேவையால் வீழ்ச்சியை சந்தித்த வீடியோகான் வேணுகோபால் தூத்!

இதையடுத்து மறு ஏலத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அனில் அகர்வால் சுப்ரீம்கோர்ட்டில் வழக்குதொடர்ந்துள்ளார். கடனை கொடுத்தவர்கள் வீடியோகானின் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஆட்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

எப்போதும் கோட் சூட் அணிந்து இருக்கும் இருக்கும் வேணுகோபால் இப்போது சிறையில் இருக்கிறார். அவருக்கு கடன் கொடுத்த ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் சந்தா தனது கணவரோடு சிறையில் இருக்கிறார்.