Published:Updated:

பயனளிக்காத மோட்டிவேஷன்... மனிதர்கள் புறாக்கள் இல்லை!

பயனளிக்காத மோட்டிவேஷன்... மனிதர்கள் புறாக்கள் இல்லை!

புத்தகத்தின் பெயர்: வொய் மோட்டிவேட்டிங் பீப்பிள் டஸ் நாட் வொர்க்... அண்ட் வாட் டஸ்
            (Why Motivating People Doesn’t Work... and What Does)

ஆசிரியர்: சூசன் பவுலர் (Susan Fowler)

பதிப்பாளர்: Berrett-Koehler Publishers

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் சூசன் பவுலர் எழுதிய ‘வொய் மோட்டிவேட்டிங் பீப்பிள் டஸ் நாட் வொர்க்... அண்ட் வாட் டஸ்' என்னும் புத்தகத்தை. ஊக்கப்படுத்துதல் என்பது பெரும்பான்மையான மனிதர்களிடத்தில் ஏன் வேலை செய்யாமல் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

பயனளிக்காத மோட்டிவேஷன்... மனிதர்கள் புறாக்கள் இல்லை!

இந்தப் புத்தகத்தை படிக்கவேண்டும் என்று உங்களை எது ஊக்குவித்தது என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியையான சூசன் பவுலர். ஊக்கம் என்றால் என்ன என்று கேட்கும் ஆசிரியர், ஊக்கம் என்றால் ஒரு விஷயத்தை செயல்படுத்துவதற்கான
சக்தி என்றே நான் சொல்லி வந்தேன் என்கிறார். ஆனால், என்னுடையதையும் சேர்த்து மோட்டிவேஷனின் 102 சொற்பொருள்களுமே (Definition) தவறானவை என்கிறார் பவுலர்.

மனிதர்களை ஊக்கப் படுத்துதல் என்று நாம் சொல்லும்போது, சொற்பொருள்  என்பது முழுமையாக தவறாகிவிடுகிறது என்கிறார். உதாரணத்துக்கு, இந்தப் புத்தகத்தை படிக்க எது உங்களை ஊக்குவித்தது என்ற கேள்வி தவறு. எதனால் இந்தப் புத்தகத்தை படிக்கும் ஊக்கத்தை நீங்கள் பெற்றீர்கள் என்றுதான் கேட்கவேண்டும் என்கிறார் அவர். இந்தப் புத்தகத்தை படிப்பதற்கான காரணத்தினை எதிலிருந்து பெற்றீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முயன்றால் பின்வருவன தெரியலாம்.

பயனளிக்காத மோட்டிவேஷன்... மனிதர்கள் புறாக்கள் இல்லை!

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு தலைசிறந்த தலைவனாய் இருந்திருப்பீர்கள். திடீரென உங்களுடைய குழு உறுப்பினர்களுடைய செய ல்பாடுகள் வலுவிழந்துகொண்டு வந்திருக்கும். என்ன ஊக்கப்படுத்தினாலும் பெரிய மாறுதல் வந்திருக்காது. அதனாலேயே ஊக்கப்படுத்துதல் மட்டுமே ஏன் வேலை செய்யாது என்ற இந்தப் புத்தகத்தை படிக்க நீங்கள் முற்பட்டிருக்கலாம்.  அல்லது உங்கள் உயரதிகாரி இந்தப் புத்தகத்தை முதலில்படி என உங்களுக்கு கட்டளை யிட்டிருக்கலாம். இதில் என்ன அப்படி இருக்கிறது. படிக்கா விட்டால் என்னவாகுமோ என்ற பயத்தில்கூட நீங்கள் படிக்க முயன்றுகொண்டிருக்கலாம். இதுபோன்ற விஷயங்களினா லேயே உங்களுடைய ஊக்கத்தை மட்டுமே பார்க்காமல் அதற்கான காரணத்தை கண்டறிதல் என்பது முக்கியமானதாகிறது என்கிறார் சூசன் பவுலர்.  

மக்கள் எல்லாக் காலத்திலும் மோட்டிவேஷனுடன்தான் இருக்கிறார்கள். ஆனால், எது அவர்களை மோட்டிவேட்டாகச் செய்கிறது என்பதுதான் மேட்டரே என்கிறார் சூசன் பவுலர். இந்த காரணகாரியம் அறிதல் என்பதே மிகவும் நுணுக்கமானதாக இருக்கிறது. ஒரு விஷயத்தைச் செய்வதற்கான மோட்டிவேஷன் என்பது அந்த மோட்டிவேஷனைப் பெறுவதற்கான காரணம் என்ன என்பதிலிருந்து மாறுபட்டதாக உள்ளது. அன்பு, சந்தோஷம், நம் மனத்தின் நன்மதிப்புகள் (வேல்யூஸ்) போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு உருவாகும் மோட்டிவேஷன்கள் ஒரு ரகம். அதிகாரம், பதவி, நான் எனும் முனைப்பு (ஈகோ), இன்ன ஆதாயம் கிடைக்கும் என்பது போன்றவற்றினால் வரும் மோட்டிவேஷன்கள் வேறு ரகம்.

பயனளிக்காத மோட்டிவேஷன்... மனிதர்கள் புறாக்கள் இல்லை!

நாம் இதைச் சாதிக்கவேண்டும் என்று நினைத்து செயல்படும் போது இருக்கும் மோட்டிவேஷன் வேறு. இன்னாரை தோற்கடித்து காண்பிக்கிறேன் பார் என்று சபதம் போட்டு  செயல்படும்போது இருக்கும் மோட்டிவேஷன் வேறு. இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதுதான் மோட்டிவேஷன் பற்றி தெரிந்துகொள்வதின் அடிப்படையே என்கிறார் சூசன் பவுலர். அதேபோல் நிறைய மோட்டிவேஷன் இருக்கிறது என்பது மட்டுமே ஒருவரை சாதனையாளராக ஆக்காது என்கிறார்.

மோட்டிவேஷன் என்பது நண்பர்களைப் போன்றது. நண்பர்கள் பலர் இருந்தாலுமே அனைவரும் நமக்கு சிக்கல் வரும்போது உபயோகப் படுவதில்லை. ஆனால், ஒரு சில நண்பர்கள் மட்டுமே இருந்தாலுமே, சிக்கல் என்று ஒன்று வந்தால் ஓடிவந்து உதவும் ரகத்தில் இருந்தால் அதுபோன்ற சிறப்பு வேறு எதுவும் இல்லை; இல்லையா? அதேபோல்தான் மோட்டிவேஷனும். நிறைய இருப்பதைவிட குறைவாகவே இருந்தாலும் சரியான வகையில் உதவுவதே சிறந்த வகை மோட்டிவேஷன் என்கிறார் சூசன் பவுலர்.  

இதனால்தான் வெறும் மோட்டிவேஷன் மட்டுமே நமக்கு உதவாது என அடித்துச் சொல்கிறேன் என்கிறார். ஒருவருக்கு மோட்டிவேஷன் இருக்கிறதா, இல்லையா என்பது விஷயம்  இல்லை. அதிகமா, குறைவா என்பதும் விஷயமே  இல்லை என்று சொல்லும் அவர், இதற்கு ஒரு சிறப்பான உதாரணத்தைச் சொல்கிறார். ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் இடையே மாதாந்திர இலக்கு தரப்படுகிறது. அதிகம் விற்கும் நபருக்கு அந்த மாதம் கேஷ் இன்சென்ட்டிவ் என அறிவிப்பு வருகிறது. இரண்டு பேர் சூப்பராக விற்று பரிசைப் பெற்றுச் செல்கிறார்கள். இரண்டு பேருமே அதிகமான அளவில் மோட்டிவேஷன் இருப்பவர்கள் என நாம் எடுத்துக்கொள்ளலாம்.

பயனளிக்காத மோட்டிவேஷன்... மனிதர்கள் புறாக்கள் இல்லை!

ஆனால் அது தவறு. அந்த இருவரில் ஒருவர் இன்சென்ட்டிவ் இருக்கிறது என்பதற்காக மட்டுமே அந்த மாதத்தில் சிறப்பாக உழைத்து விற்பனை செய்திருப்பார். மற்றொருவரோ எப்போதுமே சிறப்பாக உழைத்துக்கொண்டிருப்பவராக இருப்பார். இதில் அவர்கள் செலவு செய்த எனர்ஜியின் குவாலிட்டி மாறுபடும். எப்போதும் சிறப்பாக செயல்படுபவர் செலவழித்த எனர்ஜிக்கும் இன்சென்ட்டிவ்விற்காக பாடுபட்டவர் செலவழித்த எனர்ஜிக்கும் அதிக வித்தியாசம் இருக்கும்.

மோட்டிவேஷன் குறித்த ஆராய்ச்சிகள் முதன்முதலில் செய்யப்பட்டபோது புறாக்களுக்கு தானியத்தை கொடுப்பதன் மூலம் எந்தவொரு செயலையும் செய்யவைக்க முடியும் என்று கண்டறிந்தனர். அதையே மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம் போன்ற   விஷயங்களைக் கொடுத்து செய்யவைக்கலாம் என்று நினைத்து பல்வேறு மாடல்களை உருவாக்கி செயல்படுத்த ஆரம்பித்தார்கள். இந்த வகை மோட்டிவேஷன்கள் சில தொழில்களில், சில தொழிற்சாலைகளில், சிலவகை பணிகளில் மட்டுமே உதவும் என்பதை முற்றிலும் உணராமல் உலகத் தொழில்கள் அனைத்திலும் இதை நடைமுறைப்படுத்தினார்கள். இதனாலேயே பல சிக்கல்களை இன்றைக்கு நிறுவனங்கள் சந்திக்கின்றன என்கிறார் ஆசிரியை. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன? மோட்டிவேஷனைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல் இந்த வகைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதுதான் என்கிறார்.

மனிதர்கள் புறாக்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ளாமல் எல்லா சூழல்களிலும் இந்த வகை மோட்டிவேஷனல் டூல்களை அறிமுகப்படுத்தியதாலேயே நிறைய எதிர்மறை விளைவுகளை தொழில்கள் சந்திக்கின்றன. ஷார்ட் டேர்மில் வெற்றிபெறுவதைப்போல் தெரிந்தாலுமே லாங் டேர்மில் சிக்கல்கள் பலவும் வர ஆரம்பித்துவிடுகின்றன என்கிறார் ஆசிரியை.

இப்படி மோட்டிவேஷனைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அதை நடைமுறைப்படுத்தியதாலேயே உள்ளார்ந்த மோட்டிவேஷன், வெளிவேஷ மோட்டிவேஷன் என இரண்டு வகை பிரச்னையை நிறுவனங்கள் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. 

மனமார்ந்த/உள்ளார்ந்த மோட்டிவேஷன் என்பதே ஷார்ட் மற்றும் லாங் டேர்மில் பலனளிப்பதாய் இருக்கும். ஆக்டிங் செய்யும் வெளிவேஷ மோட்டிவேஷன் பல சமயங்களிலும் நிறுவனங்களை சிக்கலான பாதையில் எடுத்துச்சென்றுவிடும் வாய்ப்பே இருக்கிறது. இந்த வெளிவேஷ மோட்டிவேஷன் நிலையைத் தவிர்க்க, ஐந்து பிசினஸ் நம்பிக்கை குறித்த விஷயங்களை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும். முதலாவதாக, இதில் பெர்சனல் விஷயம் எதுவும் இல்லை. எல்லாமே பிசினஸ்தான் என்ற எண்ணம். இரண்டாவதாக, பிசினஸ் என்றாலே பணம் சம்பாதிப்பதுதான் என்ற எண்ணம். மூன்றாவதாக, லீடர்கள் என்றாலே பவரை கையில் வைத்திருப்பவர்கள் என்ற எண்ணம். நான்காவதாக, எதை வேண்டுமானாலும் செய் அல்லது செய்யாது போ! எனக்கு வேண்டியது கடைசியில் ரிசல்ட்தான் என்ற எண்ணம். ஐந்தாவதாக, பண ரீதியாக சரியாக அளவீடு செய்ய முடியாத விஷயம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்ற எண்ணம். இந்த ஐந்து வகை எண்ணங்களையும் எப்படி மாற்றியமைப்பது என்பது குறித்து விளக்கமான உதாரணங்களுடன் விளக்கியுள்ளார் சூசன் பவுலர்.

தொழில் முனைவோர்கள் மற்றும் மேனேஜர்கள் படிக்கவேண்டிய புத்தகம் இது.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

நாணயம் லைப்ரரி

அடுத்த கட்டுரைக்கு