ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. எனக்கு நாளை அதிகாலை எழுந்திருக்க வேண்டுமே என்ற பிரச்னை. இதற்கான காரணத்தை நான் சொல்லும் முன், இன்னொரு விஷயம் சொல்லியாக வேண்டும். என்னிடம் பத்து லட்சம் ரூபாய் பணமாக உள்ளது. அதை அப்படியே பார்த்துப் பார்த்துப் பரவசமடைய நான்அவ்வளவு காய்ந்துபோனவன் அல்ல. அதனால் நல்லதாக அதை முதலீடு செய்யலாம் என்று நினைத்தேன். முதலீடு என்று வரும்போது அது குறைந்தபட்சம் விலைவாசி உயர்வைத் தாண்டிய வருமானம் தரவேண்டும் என்பது என் எம்பிஏ படிப்பு எனக்குச் சொல்லித் தந்த பாடம். விலைவாசி உயர்வு 8 சதவிகிதம் என்பதால் என் முதலீடு குறைந்தபட்சம் 9 சதவிகித வருமானமாவது எனக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்த்தேன். இது தெரியாமல் லட்சக்கணக்கில் வங்கியில் முடக்குபவனோ, வேறு ஏதாவது முதலீட்டில் கொண்டுபோய்க் கொட்டுபவனோ என் அகராதியில் வடிக்கட்டிய முட்டாள்தான்!

சரி, இப்போது சொல்லிவிடுகிறேன் என் அதிகாலை விஜயம் எங்கு என்று. எனக்கு 30 சதவிகிதம் லாபம் தரும் ஒரு தொழில் உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பஞ்சாயத்தில் சிறிது நிலம் வாங்கிப் போடலாம் என்று முடிவு எடுத்து இன்றோடு ஒரு மாத காலம் ஆகிறது. ஏன் இன்னும் வாங்கவில்லை என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. காரணம், எனது மனைவி. என்னதான் கணவன் அறிவாளி யாக இருந்தாலும் மனைவிமார்களுக்கு அவர்களை ஒரு காமெடி பீஸாகப் பார்ப்பது ஒரு வகையில் உண்மைதான். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. அவளுடைய அப்பா வந்துதான் முடிவு செய்ய வேண்டுமாம். குடும்பத்தின் சமநிலையைக் காக்க நான் சற்று காலம் காத்திருந்தேன். இன்றுதான் அவருடைய திருப்பாதம் என் வீட்டில் பதிந்தது.

அவர் ஒரு மிளகாய் வத்தல் வியாபாரி. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, பட்டாப் பெட்டி தெரியுமளவுக்குத் தூக்கிக் கட்டும் பழக்கமுடையவர். தேர்தல் வந்தால் தவறாமல் ஜனநாயகக் கடமை ஆற்றிவிடுவார். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சிக்கு ஓட்டு போடுவார். எட்டு மணிக்குப் படுத்து, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருப்பார். எழுந்தவுடன் நெல்லிக்காய்ச் சாறு குடிப்பார் (இவருக்கு மட்டும் எப்படி எல்லா சீசனிலும் நெல்லிக்காய் கிடைக்கிறதோ!) பின்னர் காலார காத்து வாங்கி வருவார். பின் ஏதாவதொரு தமிழ் செய்தித்தாளுடன் ஒரு மணி நேரப் போராட்டம். அதிகம் பேச மாட்டார். குறிப்பாக, அவர் என்னிடம் அதிகம் பேசியதில்லை .

“நாளைக்கு காலையில போயி இடத்தப் பாத்துருவோமா?”

“சரிங்க மாமா’’

“அப்ப காலையில ஆறு மணிக்கெல்லாம் ரெடியாயிருங்க, நாம கெளம்பிரலாம்’’

“சரிங்க மாமா’’ என்றேன் சற்று எரிச்சலுடன்.

சூரிய உதயத்தை நான் பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இது தெரிந்தும் என்னைக் கடுப்பேற்றுவதற்காகவே இவர் காலையில் கூப்பிடுகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட் பற்றி என்ன தெரியும் என்று தெரியவில்லை. மனைவியின் மனம் கோணக்கூடாது என்கிற ஒரே காரணத்துக்கு அதை எல்லாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. இருந்தாலும் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்கிற நம்பிக்கையுடன் படுக்கையில் விழுந்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு வைத்த அலாரம் அடித்ததோ இல்லையோ, 5.10-க்கு மனைவி அலாரமாகக் கத்தினாள். பால் இல்லாததால் கடுங் காப்பிதான் கொடுத்தாள். அதையே மாமனார் ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார்.

கடுப்பில் அவசர அவசரமாகக் கிளம்பி காரை வெளியே எடுத்தேன். அருகில் அமர்ந்தார் மாமனார். சைட்டுக்குச் செல்லும் வரையில் நாங்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை.

அது ஒரு ஏக்கர் நிலம். அதை முப்பது சைட்டுகளாகப் பிரித்திருந்தனர். ஒரு சைட் என்பது இரண்டே முக்கால் சென்ட்.

“நான் போயி ஒரு பார்வை பாத்துட்டு வரேன்’’ என்று நகர்ந்தார். அதிகாலையில், அரைத் தூக்கத்தில், சில்லென்ற காற்றில் நிற்கும்போது ஒரு சிகரெட் பற்ற வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வேறு என்னை இம்சித்துக்கொண்டிருந்தது.

அவர் ஒரு ஏக்கர் நிலத்தை மூன்று முறை சுற்றி வந்துவிட்டார். போதாக்குறைக்கு அடி மீது அடி வைத்து ஏதோ அளந்துகொண்டும், கையை மடக்கி விரல்களோடு பேசிக்கொண்டும் திரிந்து கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்குப்பின் இடத்தின் சொந்தக்காரரும், புரோக்கரும் வந்து சேர்ந்தார்கள்.

“என்ன சார், எந்த சைட் பிடிச்சிருக்கு, பேசிரலாமா?’’ என்றார் புரோக்கர்.

“இல்லைங்க, மாமா வந்துருக்காரு, சைட் பாத்திட்டு இருக்காரு, அவரு வந்திரட்டும்’’ என்று சொல்லும்போதே வந்து சேர்ந்தார் மாமனார் .

“எவ்வளவு சொல்றீங்க?’’ என்று நேரடியாக விலையைக் கேட்டார் மாமனார். இப்படி நேராகக் கேட்கக்கூடாது என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். கொஞ்ச நேரம் மார்க்கெட் பற்றிப் பேசி அவர்களுடன் ஒரு சின்ன ‘ரேப்போ’ உருவானபின் வியாபாரம் பற்றிப் பேசவேண்டும். சரி, அவர் எப்படி டீல் பண்ணுகிறார் என்று அமைதியாக கவனிக்க ஆரம்பித்தேன் .

“சென்ட் ஒன்னு ஒரு லட்சத்து அம்பது சார். நீங்க தெரிஞ்சவரு, அதனால ஒன்னு நாப்பத்தஞ்கிக்குக் கொடுக்கலாமின்னு சொல்லியிருக்கேன்’’ என்றார் தரகர்.

“அப்படியா, நான் ஒரு சைட் பாத்திருக்கேன், என்கூட வாங்க, காட்றேன். அங்க வச்சுப் பேசுவோம்’’ என்று கூறி எங்களை ஒரு மூன்று சாலைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார். எதுவும் பேசாமல் சொன்ன விலைக்கு சரி என்பாரோ என்ற பயம் வேறு எனக்கு.

“இந்த மூணு சைட்டு எனக்குப் பிடிச்சிருக்கு’’ என்று காட்டினார். அவர் காட்டிய இடம் மூன்று சாலை டி வடிவில் பிரியும் இடம். இடவலமாக இரண்டு தெருவும், எதிரே ஒரு தெருவும் பிரியுமிடம். சாதாரணமாக யாரும் இந்த இடத்தை வாங்க மாட்டார்கள், ‘சாலைக் குத்து’ வாஸ்துபடி யாருக்கும் ஆகாது. அடி மாட்டு விலைக்கு விற்கப்படும் இடம் அது .

“மாமா, இந்த மூணு சைட்டுல, கடைசி சைட்டு சாலைக் குத்து மாதிரி தெரியுது’’ என்றேன்.

“ஆமாங்க, வேணுன்னா ரெண்டு சைட்டு வாங்கிக்குங்க. சாலைக் குத்து மட்டும் விட்ருங்க’’ என்றார் தரகர்.

“இல்லைங்க, எனக்கு இதுவும் சேத்துதான் வேணும். ரெண்டு சைட்டு வீடு கட்டி, சாலைக் குத்து சைட்ட போர்டிகோ மாதிரியோ, இல்ல தோட்டம் மாதிரியோ வச்சிக்கலாம். அதனால ஒரு பிரச்னையும் வராது’’ என்றார்.

“இந்த சைட்டுக்கு என்ன விலை சொல்றீங்க?” என்றார் மாமனார்.

“ரோடு குத்தல் இருக்குறதனால, ஒரு லட்சத்துக்கு கொடுக்கலாம்னு வச்சிருக்கோம்’’ என்றார் இடத்தின் சொந்தக்காரர்.

சிறிது நேர பேரத்துக்குப் பிறகு 85,000 ரூபாய்க்கு அந்த சைட்டைப் பேசி முடித்தார் மாமனார்.

“அப்ப மூணு சைட்டுக்கும் சேர்த்து ஒரே நாள்ல கிரயம் வச்சுக்கலாமா?’’ என்று மாமனார் கேட்ட போது, இட உரிமையாளர் அவசரமாக, “ரோடு குத்தல் சைட்டுதான் அந்த விலைக்கு வரும். ஒட்டுனாப்புல இருக்கிற ரெண்டு சைட்டுக்கும் அந்த விலை வராது’’ என்றார்.

“சார், வேற யாரும் இந்த ரோடு குத்தல் சைட்டு வாங்க மாட்டாங்க. ரெண்டாவது, நாங்க வாங்கி வீடு கட்டிட்டோம்னா, ரோடு குத்தல் சைட்டே முதல்ல வாங்கியிருக்காங்க. அதனால இந்த இடத்துக்கு வேல்யு அதிகம்னு வாங்குறவங்க போட்டி போட்டு வருவாங்க. அப்புறம் உங்க இஷ்டம்’’ என்று முடித்தார்.

சின்னச் சின்னப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதே விலைக்கு மூன்று சைட்டையும் பேசி முடித்தார். அவரை நான் என்னவோ நினைத்திருந்தேன், அசத்திட்டாரே! நான் பேசியிருந்தால்கூட ஒன்னு இருபது வரைதான் பேசியிருப்பேன். ஆனால், இவர் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத விலைக்குப் பேசியிருக்கிறாரே என்ற வியப்பு வராமல் இல்லை. இப்போது அவர் மீது ஒரு சின்ன மரியாதை எட்டிப் பார்த்தது. ஆனாலும் ரோடு குத்தல் சைட்டும் சேர்ந்து வாங்குவது மனசுக்கு நெருடலாகவே இருந்தது.

“சார், நமக்கு இந்த அக்ரிமென்ட் அது இது எல்லாம் பிடிக்காது. நேரா கிரயம் பண்றதுதான் பிடிக்கும்.

நாளைக்கே கிரயம் பண்ணிக்கலாம். அப்புறம் ரோடு குத்தல் சைட்டு மட்டும் வைகாசியிலதான் கிரயம் பண்ணுவாங்க வாஸ்துபடி. அதுக்கு வேணும்னா நான் இப்பவே ஒரு வெள்ளை பேப்பரில எழுதிக் கொடுத்து சைன் பண்றேன், என்ன சொல்றீங்க?’’ என்று அட்வான்ஸ் பணத்தைக் கண்ணுக்குத் தெரியும்படி காட்டினார்.

உடன் வந்த புரோக்கர் முந்திக்கொண்டு, “அதிலென்ன இருக்கு சார், வைகாசிக்கு இன்னும் நாலு மாசம்தானே! பண்ணிக்கலாம், நீங்க என்ன சொல்றீங்க?’’ என்று இடத்தின் சொந்தக்காரரைப் பார்த்துக் கேட்க, அவர் புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் தலை ஆட்டினார்.

வீடு திரும்பும்போது காரை நிதானமாக செலுத்திக்கொண்டிருந்தேன். “நல்ல விலைக்குப் பேசியிருக்கீங்க மாமா. ஆனா, ரோடு குத்தல் இடத்தை வாங்கவே கூடாதுன்னு சொல்லுவாங்களே’’ என்றேன்.
“யாரு இப்போ வாங்கப் போறாங்க?’’

“நாம இப்போ வாங்குறோம்னு சொல்லித்தானே இந்த விலைக்கு முடிச்சிருக்கோம் மாமா’?’

“வாங்குறோம்னு சொல்லியிருக்கோம். நாலு மாசம் கழிச்சுத்தானே கிரயம் பண்றோம்னு சொல்லியிருக்கோம்’’

“நாலு மாசம் கழிச்சி வாங்கித்தானே ஆகணும் மாமா?’’

“மாப்ள, இப்பவே அஞ்சாறு வீடு வர ஆரம்பிச்சிடுச்சு. நாலு மாசம் கழிச்சு இந்த ரோடு குத்தல் சைட்டே லட்சத்துக்கு மேல விலை கேப்பாங்க. அப்போ நாமலே கேட்டாகூட இவங்க தரமாட்டாங்க. அதுக்குத்தான் நாலு மாசம் தள்ளிப் போட்டேன்’’ என்றார் அமைதியாக.
என்னையும் அறியாமல் என் கால்கள் பிரேக்கை மிதித்தன.

“என்ன மாப்ள, வண்டிய நிப்பாட்டிட்டீங்க?’’

“ஒண்ணுமில்ல, உங்களோட வத்தல் வியாபாரத்தைப் பத்தி சொல்லுங்களேன்’’ என்று நான் பேச்சை மாற்றினேன்.