Published:Updated:

வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!

வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!
வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!

புத்தகத்தின் பெயர் : தி 15 கமிட்மென்ட்ஸ் ஆஃப் கான்சியஸ் லீடர்ஷிப் (The 15 Commitments of Conscious Leadership)

ஆசிரியர் : டித்மெர், டயானா சேப்மென், கலெ வார்னர் க்ளெம்ப் (Jim Dethmer, Diana Chapman, Kaley Klemp)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதிப்பாளர் : Dethmer, Chapman & Klemp

தொடர்ந்து வெற்றியை நிலைநாட்ட விரும்பும் தலைவராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு 15 முக்கியமான கடமைகள் இருக்க வேண்டும். அந்தக் கடமைகள் எவை என்பது குறித்து சொல்கிறது ‘தி 15 கமிட்மென்ட்ஸ் ஆஃப் கான்சியஸ் லீடர்ஷிப்’ என்கிற புத்தகம். ஜிம் டித்மெர், டயானா சேப்மென், மற்றும் கலெ வார்னர் க்ளெம்ப் ஆகிய மூவரும் சேர்த்து எழுதியதுதான் இந்தப் புத்தகம்.

எதற்காக லீடர்ஷிப் குறித்து மற்றொரு புத்தகம் என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். ஏனென்றால், தற்போதிருக்கும் சூழல்கள் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள லீடர்ஷிப் குறித்த புத்தகங்கள் எழுதப்பட்ட காலகட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுவிட்டது. அதனால் அவை போதுமானதாக இல்லை. மேலும், அந்தப் புத்தகங்கள் சொல்லும் விஷயங்கள் இப்போது சரிப்பட்டு வராததாக இருக்கின்றன.

குறிப்பாகச் சொன்னால், ஏற்கெனவே சொல்லப் பட்டிருக்கும் லீடர்ஷிப் மாடல்கள் எல்லாம் சரியாகத்தானே இருக்கின்றன என்பீர்கள். அதுதான் இல்லை.  தனிமனித அளவீட்டிலும் சரி, நிறுவனம் தொடர்பான அளவீட்டிலும் சரி, பிரபஞ்ச அளவீட்டிலும் சரி, தற்போதைய லீடர்ஷிப் மாடல்கள் அனைத்தும் முழுமை அடையாத நிலையிலேயே இருக்கின்றன. எனவே, தன் பொறுப்புகளை உணர்ந்த தலைமை என்பது அவசியமாகிறது என்று சொல்லும் ஆசிரியர்கள், அதற்கான பதினைந்து விஷயங்களைத் தொகுத்து இந்தப் புத்தகத்தில் தந்துள்ளனர்.

வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!1. டிம் என்பவர் காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து, மாலை எட்டரை மணி வரை பறந்து பறந்து வேலை செய்து குழந்தைகளுக்கு குட்நைட் சொல்லும் நேரத்தில் வீட்டுக்குச் செல்கிறார். ஷாரான் எனும் பெண்மணி நிதானமாக எழுந்து சமைத்து, காலை ஏழரை மணிக்குக் குடும்பத்துடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு அலுவலகம் சென்று நிதானமாகத் திட்டமிட்டு வேலை செய்து, ஒரு நாளைக்கு இரண்டே முறை மெயில் பார்த்து, சாப்பிடும்போது செல்போனை நோண்டாமல் அனுபவித்துச் சாப்பிட்டு, ஆறு மணிக்கு வீட்டுக்குக் கிளம்பிச்செல்லும் பழக்கம் கொண்டவர். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் வீட்டில் இருப்பவர்களுடன் முழுமையாகச் செலவு செய்பவர். இவர்கள் இருவரில் யார் சூப்பராக வேலைகளை முடிக்கிறார் என்று பார்த்தால் ஷரான்தான். ஷரானே சரியான தலைவராவார். இந்தப் புத்தகம் டிம் போன்ற நபர்களுக் கானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.

2.
நிறுவனத்தில் செயல்படும் தலைவர்கள் எல்லாவிதத்திலும் அடிப்படை சார்ந்த பொறுப்பு களுடன் செயல்படவேண்டும். ஏதாவது தவறு நடந்தால், ‘இதுக்கு யாருப்பா பொறுப்பு’ என்று பழி சொல்ல ஆள் தேடுவதற்குப் பதிலாக இதிலிருந்து நாம் கற்றுக் கொண்டது என்ன? இது மீண்டும் நடக்காது இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதே தொடர் வெற்றிக்கு வழிவகை செய்யும்.

3. ஆர்வத்துடன் எதையும் கற்றுக்கொள்வதும் தற்காலத் தலைமைக்குத் தேவையான பண்பாகும். எதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் வேண்டும். அதிலும் தன்னை உணர்ந்து கொள்ள பேரார்வம் வேண்டும்.

4. நாம் சரியாகத்தான் செயல் படுகிறோமா என்று எடை போட்டுப் பார்க்கத் தலைவர் களுக்குப் பக்காவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

5. சரியான தலைமையாக இருந்தால், சூழல்களே சரியான தலைமை என்பதை எடுத்துரைப்ப தாக இருக்கும். அப்படியில்லை எனில், நான் சரியான தலைமை தான் என்று வலுக்கட்டாயமாய் சண்டைபோட்டு நிரூபிக்கவேண்டி யிருக்கும். அதனால் சரியான தலைமையாகச் செயல்பட நினைப்பவருக்குமே அவ்வப் போது சண்டைபோட்டு நிரூபிக்க வேண்டிய சூழல் வரும். ஆனால், அதைத் தவிர்த்து, தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டால் மட்டுமே தொடர் வெற்றிகள் சாத்தியமாகும்.

6. புத்திசாலித்தனத்துடன் கூடிய சரியான தலைமை மூளை, மனது மற்றும் துணிச்சல் என்ற மூன்றையும் சரியான அளவீட்டில் பயன்படுத்தத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

7. உணர்வுகளைச் சரியான விதத்தில் பயன்படுத்தவும், சரியான அளவில் வெளிக்கொண்டு வரவும் தெரிந்துவைத்திருப்பதே இன்றைய சூழலுக்குத் தேவைப் படும் தலைசிறந்த தலைமையின் பண்பாகும்.

8. உள்ளதை உடைத்துப் பேசவும், உண்மையான நிலையை உணர்ந்துகொண்டு அதை விவாதிக்கவும் தலைமை தயாராக இருக்கவேண்டும். தலைமைக்கு  உண்மை தெரிந்தும் மறைப்ப தனாலேயும் சொல்ல மறுப்பதினா லேயுமே பல சாம்ராஜ்யங்கள் சரிந்துபோகின்றன. உண்மையை மறைப்பது தலைவர்களின் எனர்ஜி லெவலைக் கீழே கொண்டு சென்று விடும் என்பதே உண்மை.

9. அலுவலகக் கிசுகிசுக்கள் என்பது அலுவலகத்தின் கலாசாரம். ஆனால், கிசுகிசுக்கள் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மையில் பரவியிருக்கும் ஒரு கொடுமையான நோயாகும். இதை உடைத்து விட்டாலே பல நிறுவனங்கள் வெற்றிப்பாதையில் பயணித்து விடும். எதை ஒருவரின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேர் சொல்ல முடியுமோ, அதை மட்டுமே அந்த நபர் நம்முடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் சொல்ல வேண்டும் என்ற கலாசாரத்தினை கொண்டுவர எதிர்காலத் தலைமை பெருமளவில் முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

10.
நேர்மை என்பதைக் கடைப்பிடிப்பது இன்றைய நவீன நிறுவனங்களில் மிக முக்கியமான ஒன்று. நேர்மை என்றால் என்ன என்று கணக்கெடுத்தால், பொறுப்பேற்பதில் ஆரம்பித்து, நிஜமாக நாம் என்ன நினைக்கிறோம் என்று சொல்லிப் பழகுவது,  விவாதிக்க முடியாத விஷயங்களைக்கூட வெளிப்படையாகச் சொல்வது போன்ற பல நூதனமான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும். நேர்மை என்பது அடிப்படையான ஒரு விஷயம். நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டியது பொறுப்பான தலைமைக்குக் கட்டாயம், அவ்வளவேதான்.

11. பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவது நவீன காலத் தலைமைக்கு அவசியமான குணம். ‘இது உங்களால்தான் சிறப்பாக நடந்தது. நான் தலைமைப்பொறுப்பில் இருப்பதால், எனக்குப் பாராட்டுகள் வருகிறது, அவ்வளவுதான்...’ என வெளிப்படையாகக் காரணகர்த்தாக்களிடம் சொல்வது மிக மிக அவசியம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

12. பொறுப்பான தலைவர்கள் தங்களுடன் பணிபுரியும் அனைவருடைய முழு ஆற்றலையும் உபயோகப்படுத்திப் பணியாற்றும் வண்ணம் நிறுவனக் கலாசாரத்தினை உருவாக்கி வைக்கவேண்டும்.  திறமையின்மை, திறமை, சிறப்புநிலை மற்றும் மேதை என்ற நான்கு படிநிலையிலேயே பணியாளர்கள் ஒரு நிறுவனத்தினுள் பணியாற்று கின்றனர். பொறுப்பான தலைமை முதல் நிலையிலிருந்து நான்காம் நிலைக்கு அனைவரையும் உயர்த்தும் வண்ணம் ஒரு கலாசாரத்தினை அலுவலகத்தில் நிலைநாட்டவேண்டும்.

13. விளையாட்டு, தனிமனித முன்னேற்றம், சிரிப்பு என்ற மூன்றுமே தலைமைக்கும் அவசியம். தலைமையின் கீழ் பணியாற்றுபவர்களுக்கும் அவசியம் என்பதைப் பொறுப்பான தலைவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

14. என்னுடைய கருத்தே இறுதியானது என்று சொல்லாமல், வெளிவரும் எதிர்கருத்தினை நன்றாக ஆய்வு செய்யவும் அவர்கள் தெரிந்துவைத்திருப்பார்கள்.

15. பணியாளர்களுக்கு ஒப்புதல், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு என்ற மூன்றுமே பல்வேறு கலவைகளில் தேவைப்படுகிறது. ஒப்புதல் என்பது, ‘நீ செய் ராஜா, நான் இருக்கிறேன்’ என்று தலைமை நம்பிக்கையை அளிக்க உதவுவது. பாதுகாப்பு என்பது, ‘தவறுகள் என்பது சகஜம். அது தவறுதலாகச் செய்யப்படும் வரை வேலைக்குப் பாதிப்பிருக் காது’ என்பதை உணர்த்தும் வண்ணம் தலைமை நடந்து கொள்வதாகும்.  இன்றைய சிஸ்டத்தில் இருக்கும் இடைஞ்சலே இவை மூன்றையும் தராமல், தந்ததாக நினைத்துக்கொண்டு, ‘யார் கேட்டுச் செய்கின்றனர், யாரையாவது கட்டுப்படுத்த முடிகிறதா...’ எனத் தலைவர்கள் புலம்புவதே என்கின்றனர் ஆசிரியர்கள்.

நவீன யுகத்தில் பணியிடத்தில் தலைமைக்குத் தேவைப்படும் அத்தனை குணாதிசயங்களையும் கற்றுத்தரும் இந்தப் புத்தகத்தைத் தலைமைப் பதவியில் இருப்பவர்களும், இருக்க நினைப்பவர்களும் அவசியம் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்

வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான 15 குணாதிசயங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட்... புதிய முதலீடுகள்!

டந்த நிதியாண்டில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் 1.70 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளனர். இது 2016-17-ம் நிதியாண்டில் ரூ.70,367 கோடியாக இருந்தது  குறிப்பிடத்தக்கது. 2017-18-ம் நிதியாண்டில் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 38% உயர்ந்து, ரூ.5.43 லட்சம் கோடி யிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் மீதான முதலீடுகள், எதிர்பார்த்த ஆதாயத்தைத் தரவில்லை என்பதால் முதலீட்டாளர்களின் பார்வை மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களின்மீது திருப்பியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism