வினோத், பரத், சந்தீப் மூவரும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி இறுதியாண்டு படிப்பை முடித்த வர்களுக்கு வீட்டில் நிலைகொள்ள வில்லை. எங்காவது போகவேண்டும்; அதுவும் வித்தியாசமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.

எங்கே போவது என்று மூன்று பேரும் நெடுநேரம் விவாதித்தார்கள். ‘‘என்னோட அங்கிள் ஒருத்தர் மீன்பிடி எந்திரப் படகு வச்சிருக்காரு. அதுல அவங்களோட சேர்ந்து காலையில போயிட்டு, ஈவ்னிங் ரிட்டன் ஆகலாமா?’’ என்று வினோத் கேட்க, பரத்தும், சந்தீப்பும் சூப்பர் என்றனர்.

ஒருநாள் காலை மூன்று எந்திரப் படகில் ஏறிக் கிளம்பினார்கள். அவர்களுடன் மீன் பிடிக்கும் இருவர் வந்தனர். அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்தும்கூட அன்றைக்கு அவர்களுக்கு எந்த மீனும் கிடைக்கவில்லை. எனவே, கரைக்குத் திரும்ப முடிவெடுத்தனர்.

ஆனால், வினோத் வேறுவிதமாக நினைத்தான். “அங்கிள், இன்னும் கொஞ்சம் தூரம் போய்ப் பார்க்கலாமே” என்றான்.

சந்தீப்புக்கு அதில் உடன்பாடில்லை. “டேய், ரொம்ப தூரம் போனா திரும்பறதுக்கு டைமாயிடும், இப்பவே இருட்ட ஆரம்பிச்சுடுச்சு” என்றான். அதைக் கேட்ட பரத், “அதைப் பார்த்தா முடியுமாடா, அவங்களுக்கு இது வாழ்வாதாரம் இல்லையா” என்றான்.

நண்பர்கள் சொல்வதைக் கேட்ட சந்தீப், “சரி, சரி, இன்னும் கொஞ்சம் தூரம் போய்ப் பார்க்கலாம்” என்றான். மீனவர்களும் “சரி இன்னும் கொஞ்சம் தூரம் போய்ப் பார்த்துட்டு எதுவும் கிடைக்கலைன்னா திரும்பிடலாம் தம்பி” என்றனர்.

அவர்கள் சொன்னதிலிருந்து சிறிது தூரமே போயிருப்பார்கள். காற்று பலமாக வீச ஆரம்பித்தது. அந்தப் படகில் பயணித்த மீனவர்கள் கரைக்குத் திரும்பிவிடலாம் என முடிவெடுத்து, கரையை நோக்கிப் படகைச் செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், காற்றின் வேக அதிகமானது. கஷ்டப்பட்டுப் படகை ஓட்டத் தொடங்கினார்கள் மீனவர்கள். அவர்கள் கவலை எல்லாம் அந்த மூன்று இளைஞர்களைப் பற்றித்தான்.

ஆனால், காற்றின் வேகம் கடுமையாக அதிகரித்ததால், படகு கட்டுப்பாட்டை இழந்து செல்ல ஆரம்பித்தது. வேகமாக வீசிய பெரிய அலைகளை உருவாக்க, சில அடி தூரம் முன்னேறிச் செல்வதே பெரும்பாடாக இருந்தது. அடுத்தடுத்து வந்த அலைகள் கடைசியில் படகைக் கவிழ்த்து விட்டன.

படகில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க ஆளுக்கொரு பக்கம் நீந்தத் தொடங்கினர். சில மணி நேரப் போராட்டத்துக்குப்பின் கண்ணில்பட்ட கரையில் ஒதுங்கினர். வினோத்தும், சந்தீப்பும், பரத்தும் ஒரு தீவை அடைய, மீனவர்கள் வேறொரு தீவை அடைந்தனர்.

சந்தீப் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். வினோத், “எல்லாம் என்னாலதான்டா, இப்ப என்ன செய்யறது, எப்படி நாம வீட்டுக்கு போறது” என்று புலம்ப ஆரம்பித்தான். சந்தீப், “டேய் கொஞ்சம் சத்தம் போடாம இருடா” என்றான் வினோத். உடனே வினோத், “நீ சொன்னபோதாவது கிளம்பியி ருக்கலாம். நான்தான் இன்னும் போகலாமுன்னேன். இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே” என்றான்.

சந்தீப் அவனிடம் “கொஞ்ச நேரம் புலம்பாம இருடா, முதல்ல ரிலாக்ஸ் ஆகு” என்றான். வினோத் “எப்படிடா ரிலாக்ஸ் ஆகுறது, இப்ப நாம எப்படி ஊர் போய் சேர்றது” என்று வினோத் புலம்பிக் கொண்டிருந்தான்.

பரத்தின் நிலைமை மிக மோசமாக இருந்தது. மீண்டும் தண்ணீரில் குதிச்சு நீந்திச் செல்லலாமா என்று கேட்டான். அது சரியான முடிவாக இருக்காது என்று நினைத்து, யார் வந்து தன்னைக் காப்பாற்றப் போகிறார்களோ என்று அப்படியே தூங்கிவிட்டான்.

வினோத் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கையில், சந்தீப் சில வேலைகளைச் செய்யத் தொடங்கி னான். முதலில், அந்தத் தீவு எப்படிப்பட்டது என்று ஆராய்ந்தான். சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்று தேடியதில் சில பழங்கள் அவன் கைக்குக் கிடைத்தன. அதைக்கொண்டு வினோத்துக்குத் தந்துவிட்டு சாப்பிட்டான். பரத் தூக்கத்திலிருந்து எழவே இல்லை.

பிறகு வினோத்தின் உதவியுடன் அங்கிருந்த நல்ல மூங்கில் குச்சி யெல்லாம் தேடி எடுத்து, ஒரு சின்ன குடிலைத் தயார் செய்தான். இதைப் பார்த்த வினோத், “என்னடா இங்கேயே தங்கிடுறதா முடிவே பண்ணிட்டியா” என்று சந்தீப்பிடம் கேட்டான்.

அதற்கு சந்தீப், “இப்ப இருட்டிடுச்சு. இதுக்கப்பறம் நம்மைக் காப்பாத்தா இப்போதைக்கு யாரும் வரப்போறது இல்ல. நீ சத்தம் போடுறதாலயோ, அல்லது பதற்றப் படறதுனாலயோ ஒண்ணும் நடக்கப் போறதில்லை. இப்போதைக்கு இந்தச் சின்னச் சின்னக் குச்சிகளை எரிச்சுட்டு, நாம இங்கே படுத்திருப்போம். மீதியை நாளைக்குக் காலையில பார்த்துக்குவோம்’’ என்றான்.

மூவரும் இரவு நேரம் திடீர் திடீரென விழித்துக்கொண்டாலும், இரவில் கப்பல் நடமாட்டம் தென்படுகிறதா என்று பார்த்த வினோத் கத்தினான். “டேய் அங்கே பாருடா, ஏதோ கப்பல் வர்ற மாதிரி தெரியுது” என்றான். சந்தீப், “டேய், கத்திக் கத்தி இருக்குற எனர்ஜியையும் வீணாக்காதடா. நெருப்பை இன்னும் கொஞ்சம் நல்லா எரியவிடு. அதுல நிறையக் குச்சியெல்லாம் கொண்டுவந்து போடு” என்றான். வினோத் ஓடிச் சென்று குச்சிகளை எடுத்துவந்து போட்டான். அப்போது சந்தீப், நிறையப் பச்சை இலைகளை அதன்மேல் போட்டான். வினோத், “ஏன்டா பச்சை இலையெல்லாம் போடுற, நெருப்பு அனைஞ்சிடும்டா” என்றான். உடனே அவன், “பச்சை இலைகளைப் போட்டா புகை நெறைய வரும்டா. அப்ப அவங்க சீக்கிரம் இங்க வர்றதுக்கு வாய்ப்பு ஜாஸ்திடா” என்றான்.

வழக்கத்துக்கு மாறாக பெரும்புகை வருவதைப் பார்த்த மீனவக் கப்பல் ஒன்று, புகைவரும் இடத்தை நோக்கி வந்தது. அந்தக் கப்பல் தங்களை நோக்கி வரவர, தீயை இன்னும் அதிகமாக்கி, தாங்கள் அந்தத் தீவில் இருப்பதை மீனவக் கப்பலுக்கு உணர்த்தினர். யாருக்கோ உதவி தேவை என்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து அந்தக் கப்பலில் இருந்தவர்கள், தீவில் தன்னந்தனியாகத் தவித்துக்கொண்டிருந்த அவர்களைக் கப்பலில் ஏற்றிக்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் வந்த மூன்று இளைஞர்களும் மூன்று விதமாகச் சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள். சந்தீப், எதையும் நிதானித்து செய்பவன். வினோத், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுறவன். ஆனால், தோல்வி என்று வந்தால், அதை எதிர்கொள்வதற்குப் பதிலாகப் புலம்ப ஆரம்பித்துவிடுவான். ஆனால், பரத் எளிதில் சோர்ந்துபோய்விடக் கூடியவன். தோல்வி வந்தால், அதிலிருந்து மீண்டுவருவதற்கு எந்த முயற்சியையும் எடுக்கமாட்டான்.

இந்தச் சம்பவத்தில் வரும் மூன்று இளைஞர்களில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். இந்த மூன்று பேரில் ஒருவருடைய குணம்தான் உங்கள் குணமாக இருக்க வேண்டும் என்கிற நிலையில், நீங்கள் யார், எப்படிப்பட்டவர்?

உங்கள் குணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், சிக்கல்கள் வரும்போது அதிலிருந்து தப்பிக்க நீங்கள் உங்களை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சில விஷயங்களைச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் பின்பற்றிப் பாருங்களேன்.

* சூழல் எப்போதும் ஒரேவிதமாக இருக்காது; எந்தவிதமான சூழலாக இருந்தாலும் முதலில் நிதானியுங்கள்.

* பிறகு அந்தச் சூழலின் தீவிரத்தையும், தன்மையையும் மனதில் கொண்டு, திட்டமிடுங்கள். அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும், தீமைகளையும் அலசுங்கள்.

* நன்மையை மட்டுமே யோசித்து தோல்வி ஏற்பட்டால் சோர்ந்து போகக் கூடாது. எனவே, திட்டமிடுங்கள். அதனைச் சரியாகச் செயல்படுத்துங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

(காலம் வெல்லும்)

படங்கள் : ப.சரவணக்குமார்

சக்தி வாய்ந்த மனிதர்கள்.. சீன அதிபருக்கு முதலிடம்!

உலக அளவில் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஆண்டு தோறும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் விளாடிமிர் புடினுக் கும், மூன்றாவது இடம் அமெரிக்க அதிபர் ட்ரம்புக் கும் கிடைத்து உள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்பதாவது இடமும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 32-வது இடமும், மைக்ரோ சாஃப்ட்டின் தலைவர் சத்ய நாதெள்ளவுக்கு 40-வது கிடைத்துள்ளது.