புத்தகத்தின் பெயர் : தி ட்ரான்ஸ்ஃபர்மேஷனல் கன்ஸ்யூமர் (The Transformational Consumer)

ஆசிரியர் : டாரா நிக்கோல் நெல்சன் (Tara-Nicholle Nelson)

பதிப்பகம் : ReadHowYouWant.com Ltd

வாடிக்கையாளர்களைப் புத்திசாலியாகவும், பணக்காரராகவும், நல்ல உடல்ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய அன்பைப் பெற்று, உங்களுக்கான வாடிக்கையாளர்களாக அவர்களை மாற்ற முடியும் என்கிற கருத்தை அழுத்தமாகச் சொல்லும் ‘தி ட்ரான்ஸ்ஃபர்மேஷனல் கன்ஸ்யூமர்’ என்கிற புத்தகத்தைத்தான் நாம் இப்போது பார்க்கவிருக்கிறோம். டாரா நிக்கோல் நெல்சன் என்கிற பெண்மணி எழுதிய இந்தப் புத்தகம் வாடிக்கையாளர்கள் என்றென்றும் நம்முடனே இருப்பதற்கான அற்புதமான சூட்சுமங்களை நமக்குச் சொல்லித் தருகிறது.

உடற்பயிற்சி மையத்தின் ஒரு பயிற்சியாளராக, வக்கீலாக எனப் பல்வேறு தொழில்களைச் செய்த போதிலும், ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டாகத் தொழில் செய்ய முயற்சி செய்தபோது கிடைத்த அனுபவம்தான் இந்தப் புத்தகத்தை எழுதவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன் என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியை டாரா.

2005-ம் ஆண்டு அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தை ரொம்பவுமே எகிறிக்கொண்டிருந்த காலம். அந்தக் காலகட்டத்தில் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டாக லைசென்ஸ் பெற்று வேலை பார்த்துவந்தார் டாரா. அவர், தனது வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கான வீடு எப்படி இருக்க வேண்டும் எனக் கேட்டார். அவர்களில் பெரும்பாலானவர்கள், ‘‘வீடு என்பது தேவையில்லை. ஒரு லைஃப் ஸ்டைல் டிசைன் எங்களுக்குத் தேவை’’ என்றனர்.

வாழ்க்கையின் மிகப் பெரிய கொள்முதலான வீடு என்பது அவர்களுடைய பணி/தொழில் வாழ்க்கையை (கேரியர்), நிதிநிலையை, குழந்தைகள், பெற்றோர்கள், தொழில்ரீதியான பார்ட்னர்கள் போன்றவர்களுடன் இருக்கும் உறவை அதிகரித்துக்கொள்வதற்கான ஒரு விஷயமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் வாங்கும் வீடு இதையெல்லாம் தருமா என்கிற கேள்விக்கு அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. வீடு வாங்குவதற்காக எதற்கு இவ்வளவு பணத்தைச் செலவழிக்கிறீர்கள் அல்லது உங்களை வாழ்நாள் முழுக்க அடிமைப்படுத்தும் வீட்டுக் கடனில் போய் ஏன் விழுகிறீர்கள் என்று கேட்டால், அதை வீடு வாங்குகிறவர்கள் காதில் போட்டுக்கொள்கிறமாதிரி தெரியவில்லை.
அனுபவமிக்க சக ரியல் எஸ்டேட் ஏஜென்டுகளிடம் இதுகுறித்துப் பேசினார். ‘‘நம்மால் இதை ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் சொல்கிறமாதிரி ஒரு வீட்டை வாங்கித் தந்துவிட்டு, கமிஷனை வாங்கிக் கொண்டுபோக வேண்டியதுதான். ஒருநாள், கடன் கட்டமுடியாமல் வீட்டை இழக்கும்போது உண்மை என்னவென்று புரிந்துகொள்வார்கள்’’ என்றார்கள்.

ஆனால், இந்தப் புத்தகத்தின் ஆசிரியையான டாராவுக்கு இதில் உடன்பாடில்லை. நம் வாடிக்கை யாளரை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் (எங்கே, எப்படிப்பட்ட, எந்த அளவிலான போன்ற) குறித்து ஒரு சிறு கையேட்டை உருவாக்கி, அதை தனது வாடிக்கையாளர்களிடம் விளக்கமாக எடுத்துச்சொல்லி, கனவுக்கும், நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகப் புரிய வைத்தாராம்.

அங்கே ஆரம்பித்ததுதான் ஆசிரியையின் இந்தப் பயணம். இன்றைக்குப் பல்வேறு நிறுவனங் களுக்கு ஆலோசகராக இருக்கும் ஆசிரியை, வாடிக்கையாளர்கள் புத்திசாலியாகவும், பணத்தைச் சேமிப்பவராகவும், ஆரோக்கிய மிக்கவராகவும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையுடன் அவர் களுடன் பழகுங்கள். அவர்கள் எப்போதும் உங்களை விட்டுப் பிரியமாட்டார்கள் எனப் பணியாளர்களுக்குச் சொல்லித் தருகிறார்.

எல்லா வாடிக்கையாளரையும் கருத்தில்கொண்டு நம்முடைய செயல்பாடுகளைத் திட்டமிடாமல் ட்ரான்ஸ்ஃபர்மேஷனல் கன்ஸ்யூமர்களை மனதில்கொண்டு திட்டமிட்டால் வெற்றி பெறு வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்.

‘‘இன்றைக்கு எது உங்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை (ஸ்ட்ரெஸ்) தருகிறது எனத் தொழில்முனைவோர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது வியாபாரத்தை வளர்ப்பது, போட்டியை வெற்றிகொள்வது, சோஷியல் மீடியாவில் சரியான விஷயங்களைச் சரியான நேரத்தில் போஸ்ட் செய்வது என்ற மூன்று விஷயங்களையே சொல்கிறார்கள். இதில் முதல் இரண்டு விஷயத்தைச் சரிசெய்யவேண்டும் என்று இறங்கினால், அது ரிஷிமூலம், நதிமூலம் நேற்று, இன்றல்ல, 1759-ம் ஆண்டு வரை அது நீள்கிறது.

ஆனால், இந்தப் பிரச்னைகளைக் கூட விட்டுவிடலாம். சோஷியல் மீடியாவில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விதான் நிறுவனங்களுக்கும், நிர்வாகி களுக்கும் அதிக அழுத்தத்தைத் தருவதாக இருக்கிறது’’ என்றார் ஆசிரியை.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியையான டாரா, உலகத்தின் மிகப் பெரிய பிட்னெஸ் நிறுவன மாகிய ‘மை ஃபிட்னெஸ்பால்’ என்னும் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையின் துணைத்தலைவராகப் பணியாற்றி னாராம். அந்த நிறுவனம் ஒரு இணையதள பிளாக் ஒன்றை ஆரம்பித்து எந்தவிதமான செலவும் செய்யாமல், 18 மாதங்களில் 4.5 கோடி வாசகர்களைப் பெற்றதாம். எப்படி இது சாத்தியமானது?

‘‘எங்களுடைய வாடிக்கை யாளர்கள் மற்றும் வாசகர்களின் வாழ்க்கையை முன்னேற்றமடையச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உண்மையாகவே இருந்ததுதான் இதற்குக் காரணம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை ஹெல்த், வெல்த் மற்றும் புத்திசாலித்தனத்தினால் ஏனைய வர்களைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே கொண்டிருக்கின்றனர். இந்த மாற்றத்தைத் தரும் நிறுவனமாக உங்கள் நிறுவனம் இருக்கிறதா என்கிற கேள்விக்கான பதில் ஆம் என்றால், உங்களுடைய நிறுவனத் தின் வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது’’ என்கிறார் ஆசிரியை.

‘‘உலகில் நமக்கு இருக்கும் வாடிக்கையாளர்களில் ஒரு பிரிவினர் நிலையற்ற மாற்றங்களை விரும்பும் வாடிக்கையாளர்களாக (ட்ரான்ஸ்ஃபர் மேஷனல் கன்ஸ்யூமர்) திகழ்கின்றனர். அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் மேலே சொன்ன (ஹெல்த், வெல்த் மற்றும் புத்திசாலித்தனம்) விஷயங் களைப் பெறுவதற்காகப் பல்வேறு சின்னச் சின்ன விஷயங்களை (பர்சனல் டிஸ்ரப்ஷன்களை) வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டே வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றனர். இந்த விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யும் போது எக்கச்சக்கமான செலவுகளையும் அவர்கள் செய்கின்றனர். எதையும் புதிதாக முயற்சி செய்து பார்ப்பதே அவர்களது குணமாக இருக்கும். இவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் என்னென்ன பொருள்களையும், சேவைகளையும் வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்பவர்களாக இருப்பார்கள்’’ என்கிறார் ஆசிரியை.

ட்ரான்ஸ்ஃபர்மேஷனல் கன்ஸ்யூமர் களின் அன்பைப் பெறுவதற்கு நிறுவனங்கள் என்ன செய்யவேண்டும்? ‘‘மாற்றத்தை விரும்பும் அவர்களுடைய நடவடிக்கைகள் மிகவும் இலகுவாக இருப்பதைப்போல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாற்றத்தை விரும்பியேற்கும் நபர்கள் இவர்கள் என்பதால், இவர்களிடம் சுலபத்தில் மாற்றத்தைத் தூண்டும்படி நிறுவனத்தின் செயல் பாடுகள் இருக்கவேண்டும். வாடிக்கை யாளர்கள் மாற்றத்தினை எதிர் கொள்ளும்போது எந்தவித இடைஞ்சலையும் எதிர்கொள்ளாத படிக்கு இருக்கவேண்டும்.

இதுமாதிரியான வாடிக்கையாளர் களிடம் நீங்கள் விற்பது உங்களுடைய தயாரிப்புகளை அல்ல. அது தரக்கூடிய மாற்றத்தைத்தான் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். அவர்கள் தங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் இலக்குகளை நோக்கிப் பயணிக்கும்போது தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட இடையூறுகளை எதிர் கொள்ளத் துணிந்தவர்களாக (பர்சனல் டிஸ்ரப்ஷன்) இவர்கள் இருப்பதால், உங்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகள் அவர்களுக்கு உதவுகிறமாதிரி இருக்க வேண்டும்’’ என்கிறார் ஆசிரியை.

‘‘ட்ரான்ஸ்ஃபர்மேஷனல் வாடிக்கையாளர்கள் உங்கள் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை மனதில் கொள்ளாதபடிக்கு நீங்கள் திட்டங்களைத் தீட்டவேண்டும். ஏனென்றால், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் வெறுமனே போட்டித் தயாரிப்புகள் இல்லை. டிரான்ஸ்ஃபர் மேஷனல் வாடிக்கையாளர்கள் உங்களுடைய தயாரிப்பு களை நோக்கிவரும் பாதையில் தடைகளை உருவாக்கக் கூடியவை’’ என்று எச்சரிக்கிறார் ஆசிரியை.

இறுதியாக ஆசிரியை சொல்வது, வணிகரீதியாக வாடிக்கையாளர்களை மட்டுமே உருவாக்குவதில் இருந்து மாறுபட்டு வாடிக்கையாளர்களுக்குத் துணையாக நின்று வியாபாரத்தைப் பெருக்குவதில் இறங்குகிறமாதிரி உங்கள் நிறுவனத்தின் கலாசாரத்தையும் நீங்கள் மாற்ற வேண்டும் என்பதை. இதற்கான முயற்சிகளை எடுத்தால், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்து சேர்ப்பார்கள்’’ என்று சொல்லி முடிக்கிறார்.

எதிலும் அதீத ஈடுபாடுகொண்டிராத வாடிக்கையாளர் களைக் கொண்டிருக்கும் இந்த உலகில் வியாபாரத்தை வளர்த்தெடுக்க ஒரு மாற்றுக் கருத்தைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை, தொழில்முனைவோரும், விற்பனைப் பிரிவில் செயல்படும் பணியாளர்களும் கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்