Published:Updated:

பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?

பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?

பிசினஸ் இலக்கியம்

பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?

பிசினஸ் இலக்கியம்

Published:Updated:
பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?

மிழில் ‘வணிக இலக்கியம்’ என்று சொன்னால் முகம் சுளிப்பவர்கள் உண்டு. இலக்கியத்தை கமர்ஷியல் ஆக்குவது கூடாது என்பதால்தான் இந்த முகம் சுளிப்பு. ஆனால், இப்போது புதிதாக ஒருவகை வணிக இலக்கியம் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. அது கமர்ஷியல் இலக்கிய மல்ல, பிசினஸ் இலக்கியம். கடந்த நான்கு ஆண்டுகளாக பிசினஸ் இலக்கியத்துக்கென்று பெங்களூரில் ஒரு திருவிழாவே நடந்துவருகிறது. அண்மையில் நடந்த இந்த விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்.

பி.பி.எல்.எஃப் (Bangalore Business Literature Festival) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ரகுநாதன் விழாவைத் தொடக்கி வைத்து ஆரம்ப உரையாற்ற, அதன்பின் ஐ.ஐ.எம் – பெங்களூருவில் பணியாற்றிவரும் பேராசிரியை வசந்தி ஸ்ரீனிவாசன், இனி வேலைக்கான எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது பற்றிப் பேசினார். எதிர்காலத்தில் வேலைகள் நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். அவை இணைந்து செயல்படுதல் (Collaboration), மதிப்பு உருவாக்கம் (Value creation), புதுமை (Innovation), பரிசோதனை (Experimentation)’’ என்றார்.

பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?

ஆந்திர அரசுக்கு செயற்கை நுண்ணறிவு துறைக்கு ஆலோசகராக இருக்கும் டாக்டர் லலிதேஷின் பேச்சு பல புதிய தகவல்களைச் சொல்வதாக இருந்தது. `கூகுள் மேப்ஸ்’-ஐ உருவாக்கிய பிதாமகர் இவர். மெக்கின்ஸி நிறுவனம் சமீபத்தில் செய்த ஆய்வின்படி, 2025-ம் ஆண்டுக்குள் தொழில்நுட்பத் துறையில் பாரம்பர்யமாகச் செய்யப்பட்டு வரும் வேலையில் சுமார் 250 மில்லியன் வேலைகள் காணாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்று சொன்னதை அவர் எடுத்துக்காட்டியதுடன், பிக் டேட்டா, புதிய தொழில்நுட்பத் துறைகளான ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, சுற்றுப்புறச் சூழல் சார்ந்த துறைகளில் வேலைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றது ஆறுதலான விஷயம்.  

`பாட்டம் ஆஃப் தி பிரமிட்’ என்கிற கோட்பாட்டை உருவாக்கிய மேலாண்மைத் துறையின் சிந்தனையாளர் சி.கே.ப்ரகலாத் நினைவாக வணிக இலக்கியத்தில் சிறந்த புத்தகமாக சுப்ரதோ பக்ஸியின் `செல் (SELL)’ புத்தகம் தேர்வு செய்யப்பட்டது. சுப்ரதோ பக்ஸியை இந்த விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், `மேனேஜ்மென்ட் நெக்ஸ்ட்’ பத்திரிகையின் ஆசிரியருமான பெனடிக்ட் பரமானந்த் பேட்டி கண்டார். ஒடிசா அரசின் திறன் அபிவிருத்தி ஆணையத்தின் சேர்மனாக இருப்பதில் கிடைத்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதப் போவதாகச் சொன்னார் சுப்ரதோ பக்ஸி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?

இதைத் தொடர்ந்து பருவநிலை மாற்றம் குறித்தும், அந்தத் துறையில் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும், அதை இந்தியா எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எழுத்தாளர்கள், தொழில்வல்லுநர்கள் கலந்துகொண்ட உரையாடல் நடைபெற்றது. சுற்றுப்புறச்சூழல் துறையில் பல வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறினார்கள். இந்தத் துறை சம்பந்தமான சில வேலைகள்: Environmental Engineer, Wind Turbine Technician, Environmental Scientist, Recycling Worker, Solar Photovoltaic Installer போன்றவையாகும். வணிக மேலாண்மைக் கல்வியும் எதிர்காலப் பணியிட சவால்களும் குறித்து சுதாகர் ராவ் பேசினார்.

தற்சமயம் தயாராகிவரும் சில பொருள்கள் குறித்து ராஜீவ் ஜெயராமன் குறிப்பிட்டார். அவற்றில் முக்கியமானவை: ஐபிஎம் டிபேட்டர் (விவாதம் செய்யக்கூடிய கருவி), உங்கள் அன்றாட வாழ்க்கை முறை, உங்கள் ரத்த அழுத்தத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை நிர்ணயிக்கும் செயலி, பீஸாஹட் உருவாக்கிவரும் ஒரு ஷூ (இதை அணிந்துகொண்டால் போதும், நமக்குப் பசியெடுக்கும் நேரத்தில் அதிலிருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் நீங்கள் இருக்கும் இடத்துக்கு பீஸா ஹட்டி லிருந்து பீஸா வந்து சேரும்!)

பெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்?

நிகழ்வின் இறுதியாக, `Emerging Entrepreneurship Models Relevant to India’ பற்றிக் கலந்துரையாடல் நடந்தது. நிதித் துறையில் ஃபின்டெக்  (டிஜிட்டல் பேமென்ட் மற்றும் நிதி/முதலீடு துறை சம்பந்தமான தொழில் நுட்பம்) மாற்றங்களைக் குறுகிய காலத்தில் நிகழ்த்திய மாதிரி, ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிவித்திருக்கும் வேளையில் ஆரோக்கியம், உடல்நலம் சம்பந்தப்பட்டத் துறையில் தொழில்நுட்ப ரீதியில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றனர் நிபுணர்கள்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதி யாக ஐஐஎம்- பெங்களூரு மாணவர்கள் Humanoid மற்றும் அதன் விளைவு குறித்து சிறு நாடகமொன்றை அரங்கேற்றினார்கள்.

இதுமாதிரியான பிசினஸ் இலக்கியம் தொடர்பான கூட்டம் சென்னையில் நடப்பது எப்போது?