Published:Updated:

அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!

அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!

புத்தகத்தின் பெயர்     : 30 Lessons for Living

ஆசிரியர்        : Karl Pillemer

பதிப்பகம்        : Penguin USA

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் கார்ல் பில்லெமர் என்பவர் எழுதிய அமெரிக்காவின் அதிபுத்திசாலிகள் கடைப்பிடித்து வாழ்ந்ததும் அறிவுரையாகச் சொன்ன வாழ்க்கைக்கான 30 பாடங்களைச் சொல்லும் புத்தகமாகும். இந்தப் புத்தகத்தில் சொல்லபட்டிருப் பவை மிகச்சிறந்த அமெரிக்கர்கள் சொன்ன வாழ்க்கைப்பாடம் என்றாலும், அவர்களுடைய உண்மையான பெயர் தரப்பட வில்லை. மாற்றுப்பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளது என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். யார் சார் அந்த புத்திசாலி அமெரிக்கர்கள், அவர்கள் சொல்லும் அந்த அற்புதமான ஆலோசனைகள் என்ன? 

 நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை, குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான பாதையைத் தெளிவாக வகுத்துப் பங்கெடுத்து அவர்களும் சிறந்த வகையில் பரிமளித்து நமக்குப் பெருமை சேர்ப்பது, பிடித்த வேலையைச் செய்வது, நிறைவான வாழ்க்கையை வாழவே விரும்புகிறோம். ஆனால், இதற்கெல்லாம் வழிவகை செய்வது எப்படி என்பதை யாரும் நமக்குச் சொல்லித் தருவார்களா என்று கேட்கிறீர்கள் இல்லையா? இதோ, இந்தப் புத்தகம் உங்களுக்குச் சொல்லித் தருகிறது என்கிறார் ஆசிரியர்.

அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!

சரியோ, தவறோ பொதுவாக நாம் எல்லோரும் அட்வைஸைத் தேடி (இப்போதோ அல்லது முன்னொரு காலத்திலோ) அலைந்தவர்கள்தான். அமெரிக்கர்கள் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் அளவிலான பணத்தை ஆலோசனைப் பெறுவதற்காக செலவழிக்கிறார்கள் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்தானே! அமெரிக்காவில் இருக்கும் அதிபுத்திசாலிகள் பலரைச் சந்தித்து, அவர்களிட மிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டதை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள முதல் ஆலோசனை திருமணம் குறித்தது. இன்றைக்குத் திருமணம் என்ற சிஸ்டமே பெரிய அளவிலான அச்சுறுத்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதால், முதலில் அதை எடுத்துக்கொண்டுள்ளார் ஆசிரியர். முதலாவதாக, நம்மை விரும்புகிறவரை மணமுடிப்பது என்பதே சரி என்கின்றனர். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே ஆயுள்காலம் முழுவதும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்கின்றனர் முதியவர்கள். நட்பு காதலாகி, காதல் திருமணமாதல் என்பது போன்ற சிறப்பு எதுவும் இல்லை என்றும் அவர்கள் சொல் கின்றனர். காதல், திருமணம், குடும்பம் என்பவற்றையெல்லாம் இணைப்பது நட்பு என்ற ஒரு விஷயமே.

திருமண பந்தத்தில் இதையெல்லாம் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு திரியாதீர் கள். நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன், நீ இவ்வளவு சம்பாதிக்கிறாய் எனக் கணக்குகளைப்போட ஆரம்பித்தீர்கள் என்றால், அது பந்தமில்லை. அதனால் ஸ்கோர் கார்டுகளைக் கிழித்து எறிந்துவிட்டு இணைந்து வாழப் பழகுங்கள் என்கின்றனர். ‘கொஞ்சம் மனம்விட்டு அவ்வப்போது பேசுங்கள் சார்’ என்பதும் பெரியவர்கள் சொல்லும் அறிவுரையாய் இருக்கிறது.

அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!

நல்ல மணவாழ்க்கை என்பது நல்ல பலவிஷயங்களைப் பேசிக்கொள்வதிலும் இருக்கிறது. தவிர்க்க முடியாத இடத்தில் சண்டை போடவும் தவிர்க்கக்கூடிய இடத்தில் பேசித் தீர்க்கவும் வேண்டும் என்பது சரியென்றால் சாதாரணமாகப் பேசிக்கொள்ளாத இருவர் எப்படி பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று கேட்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கமிட் ஆகாமல் திருமணத்திற்கு கமிட் ஆகுங்கள் என்கிறார் ஆசிரியர்.

நல்ல, மனநிறைவான பணி செய்வது குறித்த கேள்விக்கு இந்த முதியவர்கள் சொன்ன ஆலோசனைகளைப் பார்ப்போம். அதிகாலையில் எழுந்துகொள்ளப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஆரம்பித்து, பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்பதற்காக ஒரு வேலையைத் தேர்வு செய்யாதீர்கள். இருக்கும் வேலை உங்களை சந்தோஷப்படுத்துவதாக இல்லையென்றால், புதிய வேலையைத் தேடுவதைத் தொடர்ந்து செய்துவாருங்கள் என்றும், கொஞ்சமாவது சொந்தமாக முடிவெடுத்துச் செயல்படும் அளவிற் கான வேலையில் மட்டும் இருங்கள் என்றும் சொல்கின்றனர்.

இந்த உலகில் யாருமே குறைபாடற்றவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு வாழுங்கள். குழந்தைகளுடன் நீங்கள் செலவிடும் நேரம் மிக மிக முக்கியமானது என்பதை உணருங்கள். குழந்தை களுடன் அதிக நேரம் செலவிட முயலுங்கள். பணம் சம்பாதிக்கிறேன் பேர்வழி என்று குழந்தை களுடன் நேரம் செலவிட மறந்துவிடாதீர்கள். உங்களு டைய பணம் குழந்தைகளுக்கு தேவையில்லை. அவர் களுக்குத் தேவை நீங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் நிச்சய மாக ஒன்றைவிட மற்றொன்றின்மீது அதிக பாசம் இருக்க வாய்ப்புள்ளது. அதனை மனதுக்குள் பூட்டி வையுங்கள். ஒருபோதும் வெளிக்காட்டாதீர்கள்.

ஒருபோதும் குழந்தைகளை அடிக்காதீர்கள். குழந்தைகளுடன் விளையாட்டாகக்கூட சண்டை போட்டுப் பிரியாதீர்கள். அவர்களுக்காகத்தான் நீங்கள். அவர்கள் இல்லையென்றால், உங்கள் உலகம் நரகமாகிவிடும். மேலும், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டால் உங்களுடன் செலவிட நேரம் அவர்களுக்கு இருக்காது என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுங்கள் என்கிறார்கள் முதியவர்கள். இன்றைய பெற்றோர்கள் மறக்கக்கூடாத ஆலோசனை இது.

நம் அனைவருக்கும் நிச்சயமாக வயதாகும். ‘அய்யோ வயதாகிறதே’ என்று பிதற்றித் திரியாதீர்கள். பயமேதும் இல்லாமல், வயதாவது இயற்கையான ஒன்று என்று புரிந்துகொள்ளுங்கள். முதுமை என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஒன்றும் மோசமானதல்ல.

அதேபோல், இறந்து போய்விடு வோமோ என்று நினைத்து கவலைப் படாதீர்கள். நிபுணர்களுக்கு அந்தக் கவலை எள்ளளவும் இருப்பதில்லை. காரணம், உலகில் எல்லாமே ஒரு நாள் மரித்துப்போகவே செய்யும். வயதாக ஆக  எல்லா விஷயங்களையும் நேராக்கி வைத்துக் கணக்குத் தீர்த்து விட்டு, ஒரு பயணத்துக்குத் தயாரா வதைப்போல் காத்திருக்க வேண் டியது உங்கள் கடமை என்கிறார் ஆசிரியர்.

வருத்தப்படாமல் வாழவேண்டும் என்ற விருப்பம் நம் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்களா? அதற்கும் பதில் சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.
எப்போதும் நேர்மையாக இருங்கள். வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு செவி சாயுங்கள். எல்லாவற்றுக்கும் ‘யெஸ்’ என்று சொல்லிப் பாருங்கள். அலுவலக வேலையா, சமூக சேவையா? ‘யெஸ்’ என்று குதூகலமாகக் கிளம்புங்கள். மாறுபட்ட மனிதர்களைச் சந்திப்பீர்கள். மாற்றங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் வரும் என்கின்றனர்.

அதிகம் பயணம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அனுபவஸ்தர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுச்சொல்கின்றனர் என்கிறார் ஆசிரியர். அதேபோல், சொல்லவேண்டும் என்று தோன்று வதைத் தள்ளிப்போடாமல் சொல்லி விடுங்கள். இது உங்கள் மனதை இலகுவாக்கும் என்கின்றனர்.

மகிழ்ச்சியையே வாழ்வின் சிறந்த தேர்வாக தேர்ந்தெடுக்கச் சொல்லும் ஆசிரியர், நாம் நினைப்பதுபோல் வாழ்க்கை ஒன்றும் முடியாத ஒரு விஷயமல்ல. சட்டென முடிந்து போகக்கூடிய ஒன்று. அதுவும் சிறு பிராயத்தைவிட மத்திம பிராயத்தில் நேரம் அதிவேகமாகச் சென்றுவிடும். 

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நாம் தேர்வுசெய்வது. அது ஒரு நிலையல்ல. ஒருவேளை சாப்பிட்டு விட்டும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஐந்து வேளை சாப்பிட்டு நிம்மதி இல்லாமலும் இருக்கலாம். கவலைப்படுவதற்காக நாம் செலவிடும் நேரம் நாம் வீணாகச் செலவழித்த நேரமேயன்றி வேறேதும் இல்லை என்கின்றனர் இந்த முதியவர்கள் என்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்திற்காக நேர்காணலில் ஈடுபட்டபோது 1908-ல் பிறந்த 102  வயதுடைய ஒரு பெண்மணியை ஆசிரியர் சந்தித்தாராம். அவருடைய தாத்தா 1850-ல் பிறந்ததாகவும் அவர் அமெரிக்க சிவில் போருக்குப்பின்னால் வந்த அவருடைய அனுபவத்தைத் தன்னிடம் சொல்லியிருப்பதாகவும் சொன்னாராம்.

கொஞ்சம் சிந்தியுங்கள். சிவில் போருக்குப் பின்னால் பிறந்த இவருடைய தாத்தா சிறுகுழந்தையாக இருந்தபோது, அவருக்குத் தெரிந்த வயதான நபர் சிவில் போர் குறித்த நேரடி அனுபவத்தை அவரிடம் பகிர்ந்திருப்பார். இப்படித்தான் மனித இனத்தின் அறிவு பகிரப்படுகிறது. தலைமுறைகள் தாண்டி நம்மை வந்து சேர்வது என்னவோ சிறிய அளவில்தான். இன்றைக்கும் முதியவர்கள் பலரிடமும் இந்த அறிவு இருக்கவே செய்கிறது. நீங்கள்தான் கேட்டுத்தெரிந்துகொள்ள முயல வேண்டும் என்று முடிக்கிறார் ஆசிரியர்.

- நாணயம் டீம்

அதிபுத்திசாலிகள்... அசத்தல் பாடங்கள்!

டாக்ஸ் ஃபைலிங்... கெடு நீடிப்பு!

2017-18-ம் நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) வருமான வரிக் கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இந்த கெடு தேதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீடிக்கப்பட்டது. பிறகு செப்டம்பர் 30-ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டது. இப்போது அக்டோபர் 15-ம் தேதி வரைக்கும் அபராதம் இல்லாமல் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்கும் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தாக்கல் செய்த வரிக் கணக்கு 71% அதிகரித்து, 5.42 கோடியாக உயர்ந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism