சுய அறிதல் (Meta cognition) என்பது நம்முடைய சிந்தனையைக் குறித்து சிந்திக்கும் விஷயமாகும். எந்தவொரு விஷயம் குறித்தும் நீங்கள் ஏன் ஒரு நிலைப்பாட்டிலிருந்து சிந்திக்கிறீர்கள் என்பதுதான் தவ் மிட்செல் என்பவர் எழுதிய ‘தி பவர் ஆஃப் அண்டர்ஸ்டாண்டிங் யுவர்செல்ஃப்’ எனும் புத்தகம் விளக்கும் விஷயமே. இந்த சுய அறிதல் என்பது நமக்கு வந்துவிட்டால் (உங்களையே நீங்கள் அறிந்துகொண்டு விட்டால்) நமக்கு அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

‘‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...? என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் எனக்கு ஏன் பிரச்னை வருகிறது, என்னைப் பார்த்தால், எல்லோருக்கும் இளக்காரமாய் இருக்கிறதோ? என்றெல்லாம் நாம் அனைவருமே பலமுறை நம் மனதுக்குள் கேள்விகளைக் கேட்டு, பதில் கிடைக்காமல், பிற்பாடு அதை மறந்துபோயிருப்போம்.

நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நமக்குச் சுமுகமான உறவு இல்லாமல்போவது, நம்மைப் பற்றி நாம் சரிவர புரிந்துகொண்டிருப்பதில்லை என்பதனாலேயேதான். நம்மைப் பற்றி நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்வது எப்படி என்ற கேள்விக்குப் பதில் சொல்வது ஒன்றும் சாமானியமான விஷயமில்லை. மனிதர்கள் அனைவருமே வெவ்வேறு மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருப்பதால், ஒரே மாதிரியான வரைமுறையை உருவாக்கி, அதன்மூலம் அனைவரும் அவர்களைப் பற்றி புரிந்துகொள்வதற்கு உதவ முடியாது.

மனிதர்களாகிய நாம் ஒரு தனிநபராக நம்முடைய அனுபவங்களினாலேயே கட்டமைக்கப்படுகிறோம். சிறுபிராயத்தில் பார்த்தல், கேட்டல், செய்தல் மூலமாகப் பலவிஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். அதன் மூலமே நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்கிறோம். ஒரு தனிநபர் உருவாக்கப்படுவது பல விதமான சூழ்நிலைகளாலும் அந்த சூழ்நிலைகளைக் கொண்டு எவ்வாறு அவருடைய அறிவாற்றலை அவர் கட்டமைத்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துமே அமையும்.

நூலகம் என்பது அருமையான ஓர் இடம். அமைதியாக இருக்கும். பல்வேறுவிதமான புத்திசாலிகளின் கருத்துகள் கொண்ட புத்தகங்கள் குவிந்திருக்கும். ஒரு ஆராய்ச்சிக்காக நாம் நூலகத்திற்குச் சென்றால், அருமையான சூழலில் நமக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து அந்தப் புத்தகங்களில் இருக்கும் நமக்கு வேண்டாத விஷயங்களைப் புறந்தள்ளிவிட்டு, நமக்கு வேண்டிய விஷயங்களைக் குறிப்பெடுத்து (ஏற்கெனவே புத்தகங்கள் பலவற்றிலும் இருப்பவையேயானாலும் அவற்றைப் பிரித்துத் தொகுத்து மேலும் பல ஆய்வுகளைச் செய்து) புதிய விஷயங்களை நாம் கண்டறிகிறோம்.

அதேபோல்தான், நம்முடைய மூளையும். பல்வேறு நல்ல விஷயங்கள் அடங்கிய ஒன்று அது. இன்றைக்கு நூலகங்களுக்குச் செல்லும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லை. அதேபோல, நம்முடைய மூளைக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்த ஆர்வமும் நம்மில் பலருக்கு இல்லாமலே போய்விட்டது.

நம்மைப் பற்றிய விழிப்புணர்வு என்பது நம்மில் பலருக்கும் இருக்கும். அதையும் தாண்டிய விஷயம், இந்த சுய அறிதல் என்பது. சரி, பலன்கள் அதிகம் இருக்கிற விஷயம் என்கிறீர்கள். நாம் ஏன் இது குறித்து முயற்சி செய்வதில்லை என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் என் பதில் ஒன்றேதான். நூலகத்தில் சென்று படிப்பதால், ஒருவருக்கு நிறையப் பலன் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் நம்மில் பெரும்பாலானோர் ஏன் நூலகம் இருக்கும் திசையிலேயே தலைவைத்துப்படுப்பதில்லை என்பதற்கான பதில்தான் இதற்கும் பதில்’’ என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

“ஏற்கெனவே சொன்னபடி, நாம் அனைவருமே நம்முடைய அனுபவங்கள் (பட்டறிவு) கொண்டே கட்டமைக்கப்பட்ட வர்கள்தான். ஆனாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை வெவ்வேறு மாதிரியாக தங்களுடைய மூளைக்குள் செலுத்தி, சிந்தனைக்கான கட்டமைப்பை உருவாக்கிக்கொள்கிறோம். அதனாலேயே நாம் ஒவ்வொரு வரும் சிந்தனை செய்யும் விதம் பெருமளவில் மாறுபடுகிறது. அதனால்தான் எந்தவொரு அனுபவத்தையும் இரண்டு பேர் ஒரே மாதிரியாக தங்கள் மூளையின் சிந்தனை கட்டமைப்புக்குள் வைத்துக்கொள்வதில்லை.

உதாரணமாக, ஒரு பிரபலமான உணவகத்தின் உணவு வகை (ஃபேமிலி ரோஸ்ட்) ஒன்று குறித்து உங்கள் வீட்டில் இருக்கும் கடைக்குட்டியில் ஆரம்பித்து, தாத்தா வரையில் அவர்களுடைய கருத்துகளை சொல்லச் சொல்லி கேட்டுப் பாருங்கள். ஆளுக்கு ஒரு மாதிரியாகச் சொல் வார்கள். ஒவ்வொருவரும் அவர்களுடைய அனுபவத்தைக் கட்டமைத்துக் கொள்கிற விதம் மாறுபடுவதால்தான் இந்த நிலைமை என்கிறார் ஆசிரியர். அதேபோல், ஒவ்வொருவர் மூளையிலும் இருக்கிற அனுபவ டேட்டாபேஸ் என்பது எக்கச் சக்கமாக மாறுபடும் என்பதாலும் இந்த நிலைமை” என்கிறார் ஆசிரியர்.

“வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ‘அதுபாட்டுக்கு போகிறது. நம்மைக் கேட்டா எதுவும் நடக்கிறது’ என்று நாம் சொல்வோம். அதாவது, வாழ்க்கையின்மீது நமக்கு எந்த ஒரு கன்ட்ரோலும் இல்லை என்கிற ரீதியில். ஆனால், நம்முடைய எண்ணம் எப்படி இருக்கும் என்றால், நமக்கு நம்முடைய வாழ்வின் மேல் முழு கன்ட்ரோல் இருப்பதைப் போன்ற பிம்பத்துடன் இருக்கும். ‘இதைச் செய்து விடலாம், அதைச் சாதித்து விடலாம்’ என்றெல்லாம் நாம் திட்டங்களை தீட்டிக் கொண்டேயிருப்போம். கடவுளைச் சிரிக்க வைக்க வேண்டும் என்றால், உங்கள் எதிர்கால திட்டங்களை அவரிடத்தில் சொல்லுங்கள் என்று சொல்லும் மூதுரை ஒன்று இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி, உங்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்களை நீங்களே கன்ட்ரோல் செய்துகொள்ளும் அளவிற்கு சுய அறிதல் என்பது உங்களுக்கு நிச்சயம் உதவும்” என்கிறார் ஆசிரியர்.

‘‘பல அனுபவங்களைச் சுமந்துகொண்டிருக்கும் மூளையின் உதவியினால் திட்டங்களைத் தீட்டுவது மிக சுலபமான ஒன்றாக இருக்கும். ஆனால், அதனை நடைமுறைப் படுத்தும்போதும், செயல்படுத்தும்போதும் நாம் ஒரு இன்டராக்டிவ் மோடுக்குச் செல்கிறோம். அங்கே நம்முடைய செயல்பாட்டு ஸ்டைல் என்ன என்பது எப்படி இருக்கும்?

திட்டங்கள் எல்லாம் மூளையில் இருக்கும். செயல்பாடு சில சமயம் திட்டத்திற்கு எதிராக இருக்கும். நினைப்பதொன்றும் நடப்பது (நடத்துவது) ஒன்றுமாக இருப்பது இதனால்தான். உதாரணத்திற்கு, நம்முடைய மூளையில் ரொமான்டிக், வாரியர், எக்ஸ்பர்ட் மற்றும் மாஸ்டர் மைண்ட் என்ற நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இந்த நான்கும் உலக நடப்புகளை நான்கு விதமாக அர்த்தம் செய்துகொள்ளும். அதேபோல், நான்கும் நான்கு விதமாக உலக நடப்பைக் கையாளும்.

ஒரு சூழலில் நாம் எந்தப் பிரிவில் நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்வது சுலபமோ அந்தப் பிரிவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொஞ்சம் சிந்தித்தால் நாம் சுலபத்தைவிட கொஞ்சம் கடின வகையிலான நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்வோம். அதேசமயம், இன்டராக்டிவ் சூழலில் எளிமையான வழிமுறையே முண்டியடித்துக் கொண்டுவந்து முதலில் நிற்கும். இல்லையா?’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

இந்த நிலையைத் தவிர்க்க நினைக்கும் ஒருவருக்கு அவர் யார் என்ற தெளிவான பிம்பக் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே அவருடைய நிலைப்பாட்டினை ஒரே மாதிரி யாக எல்லா சூழ்நிலைகளிலும் வெளிப்படுத்த முடியும் என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு விதமான ஸ்டைலையும் ஆசிரியர் பல்வேறுவிதமான உதாரணங்களுடன் விளக்கியுள்ளார்.

இதுதான் என் ஸ்டைல் என நீங்கள் தீர்க்கமாக முடிவுசெய்து கொள்ள உங்களுக்கு உதவும் வகையில் ஒரு கேள்வித்தாளையும் ஆசிரியர் தந்துள்ளார். உங்கள் ஸ்டைல் என்ன என்பதே மற்றவர்களுடைய மூளையில் பதிந்துள்ள ஒரு முக்கிய விஷயமாகும். அதற்கேற்பவே அவர்கள் அனைவரும் செயல்படுவார்கள்.

எனவே, உங்களை அறிந்துகொள்வதன்மூலம் நீங்கள் உங்கள் நடைமுறை ஸ்டைலை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, உங்களைக் குறித்து நீங்கள் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் உங்களுடைய செயல்பாட்டைப் பாதிக்கும் சுலபமான ஸ்டைல்கள் (முண்டியடித்து முன்னால் வந்து நிற்கும் விஷயங்கள்) என்னென்ன என்பதையும் அறிந்துகொள்வதன் மூலம் அவற்றைக் கருத்தாகத் தவிர்க்கவும் முடியும் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

தன்னை அறிந்துகொள்வதின் மகத்துவத்தையும், அதற்கான வழிமுறைகளையும் கொஞ்சம் கடின நடையில் இருந்தாலும் தெளிவாய் விளக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் டீம்