Published:Updated:

நீங்கள் சூப்பர் பாஸ் ஆக உங்களிடம் இருக்க வேண்டிய 5 தகுதிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீங்கள் சூப்பர் பாஸ் ஆக உங்களிடம் இருக்க வேண்டிய 5 தகுதிகள்!
நீங்கள் சூப்பர் பாஸ் ஆக உங்களிடம் இருக்க வேண்டிய 5 தகுதிகள்!

இலக்கை அடைவதில் தலைவன் அக்கறை, உறுதிப்பாடு, பேச்சு சாதுரியம், விடாமுயற்சி, தைரியம், வித்தியாசமான அணுகுமுறை, புதிய கோணத்தில் சிந்தித்தல் இவற்றோடு வெற்றி பெற்றிடுவோம் என்ற தன்னம்பிக்கை மிக்கவராக இருக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாம் பணிபுரியும் நிறுவனத்தில் சிறு பிரிவுக்காவது பாஸ் ஆக வேண்டும் என்று, நம் எல்லோருக்குமே ஆசை உண்டு. அதை நோக்கித்தான் அனைவருமே பயணித்துக்கொண்டிருப்போம். ஆனால், அது எளிதில் வாய்த்திடாது. தலைமைப் பண்பு என்பது, சாதாரணமாக எல்லோருக்கும் வந்துவிடாது. படிப்படியான பதவி உயர்வு பெறுவதுபோல, அந்தப் பண்பையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.  

குவாலிட்டி No.1: குழு உறுப்பினர்களின் நலன்!

ஒரு தலைவன், எப்போதுமே மாற்றத்துக்கு வித்திடுபவனாக இருக்க வேண்டும். ஒரு செயலைச் செய்ய, செய்து முடிக்க மற்றவர்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருக்க வேண்டும். அந்தத் தூண்டுதல் அந்தக் குழுவின் வளர்ச்சிக்கும் நன்மதிப்புக்கும் வித்தாக இருக்கும். தான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ, அதை மற்றவர்களிடம் இருந்து சாமர்த்தியமாகப் பெற்றுக்கொள்வது மட்டும் தலைவனின் வேலை கிடையாது. அந்த எண்ணத்தில், தன் குழு உறுப்பினர்களின் நலன் குறித்த விஷயங்கள் நிரம்பியிருக்க வேண்டும். 

நீங்கள் சூப்பர் பாஸ் ஆக உங்களிடம் இருக்க வேண்டிய 5 தகுதிகள்!

குவாலிட்டி No.2: இலக்கு!

இலக்கில்லா தலைவன் திறம்பட செயல்பட முடியாது என்பது 100 சதவிகிதம் உண்மை. அரசியல் கட்சியாகட்டும், ஒரு நிறுவனத்தின் சிறு பிரிவாகட்டும் அல்லது குடும்பத் தலைவனாகட்டும் இலக்கில்லா தலைவன், பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தில் பலவீனப்படுவான். இலக்கை அடைவதில் ஒரு தலைவன், அக்கறை, உறுதிப்பாடு, பேச்சு சாதுரியம், விடாமுயற்சி, தைரியம், வித்தியாசமான அணுகுமுறை, புதிய கோணத்தில் சிந்தித்தல் இவற்றோடு வெற்றி பெற்றிடுவோம் என்ற தன்னம்பிக்கைமிக்கவராக இருக்க வேண்டும். இலக்கில்லா தலைவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு இலக்கை நிர்ணயிக்க முடியாது. 

குவாலிட்டி No.3: பலம்; பலவீனம்!

தலைவனுக்கு, சுயதூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சொல்லாமலேயே தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டு தன்னை வெளிக்கொணர வேண்டும். ஏமாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். ஒரு விடிவெள்ளியைப்போல, வெற்றியின் அடையாளமாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும். தலைவனுடைய பலம் தலைவனுக்குத் தெரிய வேண்டும். அதேபோல தன்னுடைய பலவீனம் எது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். போட்டியாளர்களின் பலம், பலவீனம் பற்றியும் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல தானும், தன்னுடைய குழு உறுப்பினர்களையும் வழிநடத்துவது ரொம்பவே முக்கியம்.

குவாலிட்டி No.4: ஒற்றுமையின் பாலமாக!

நீங்கள் சூப்பர் பாஸ் ஆக உங்களிடம் இருக்க வேண்டிய 5 தகுதிகள்!

தலைவனுக்கு இருக்க வேண்டியவற்றில் மிக முக்கியமானது, சக ஊழியர்களிடத்தில் ஒற்றுமை உணர்வுகளை மேலோங்கச் செய்வது. ஒருவரைப் பற்றி மற்றொரு நபரிடம் குறை கூறுவதோ, ஒப்பிட்டுப் பேசுவதோகூட பணியாளர்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையைச் சீர்குலைக்கும். அப்படியில்லாமல், ஒற்றுமையை ஓர் உறவுபோல வளர்த்திட வேண்டும். விரிசல் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக எப்போதுமே அவர் இருக்க வேண்டும். 

குவாலிட்டி No.5: தவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதல்!

ஒரு தலைவனுக்கு, பேச்சாற்றல் ரொம்பவே முக்கியம். தலைவனின் பேச்சுகள் மற்றவர்களைக் கவர்வது மட்டுமல்லாமல், கவலையிலிருந்து விடுவிப்பதாகவும் இருக்க வேண்டும். அவருடைய பேச்சு, பயத்தை விலக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது அப்படிப்பட்ட ஆற்றலை வளர்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். சந்தர்ப்பவாதியாக இல்லாமல் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சாதகமாக்கிக்கொள்ள தன்னைச் சார்ந்தவர்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். தலைவன், தவறு செய்யாதவன் அல்ல... தவற்றிலிருந்து கற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தலைவன் என்ற நம்பிக்கையை முழுமையாக மனதுக்குள்ளும் செயல்பாடுகளிலும் விதைக்க வேண்டும். 

இந்த ஐந்து குவாலிட்டிகள் உங்களிடம் இருந்தால்... பாஸ் மட்டுமல்ல, சீக்கிரமாகவே நீங்கள் சூப்பர் பாஸ் ஆகிவிடலாம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு