Published:Updated:

புதுமைக்குத் தேவை பணமில்லை, மனம்!

புதுமைக்குத் தேவை பணமில்லை, மனம்!

புதுமைக்குத் தேவை பணமில்லை, மனம்!

புதுமைக்குத் தேவை பணமில்லை, மனம்!

Published:Updated:

ராமகிருஷ்ணா நகர், இது குஜராத் மாநிலத்தின் பாலைவனத்தில் உள்ள ஒரு குக்கிராமம். இங்கு ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு கன்சல்டன்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர் மற்றும் மினியபோலிஸில் (Minneapolis) உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் ஆகியோர் போனார்கள். அவர்களுடைய குறிக்கோள், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் புதுமையான பொருட்கள் மற்றும் அனுபவங்கள் உலக நாடுகளுக்கு எப்படி உதவக்கூடும் என்பது பற்றி ஆய்வு செய்வதுதான்.  

அவர்களை அங்கு அழைத்துக்கொண்டு போனவர், 'ஹனி பீ நெட்ஒர்க்’ என்கிற அமைப்பை நடத்திவரும் ஐ.ஐ.எம். பேராசிரியர் அனில் குப்தா. புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியா முழுக்க பல்லாயிரம் தொழில்முனைபவர்களை உருவாக்கியவர் இவர். அப்படி உருவான தொழில்முனைவோர்களில் ஒருவர்தான், மன்சுக் பிரஜாபதி. இவர் ஒரு குயவர்.

புதுமைக்குத் தேவை பணமில்லை, மனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆராய்ச்சியாளர்கள் நால்வரும் வேகாத வெயிலில் நடந்து செல்ல, அவர்களிடம் இருந்த தண்ணீர் காலியாகிவிட்டது. மன்சுக்கைப் பார்த்தவுடன் அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவரும் குளிர்ந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தார். ஆராய்ச்சியாளர்களுக்கோ ஆச்சரியம். காரணம், மன்சுக்கின் வீட்டில்  ரெஃப்ரிஜிரேட்டர், வயர் என எதுவும் இல்லை. மாறாக, அவர்களுக்குத் தெரிந்தது டெரகோட்டாவினால் ஆன ஒரு பெட்டி; அதில் கண்ணாடியிலான ஒரு சிறிய கதவு; அதன் கீழே ஒரு பிளாஸ்டிக் பைப். இதிலிருந்துதான் அவர் குளிர்ந்த நீரை எடுத்துத் தந்தார்.

இதற்குப் பெயர் 'மிட்டிக்கூல்’ என்று சொல்லிவிட்டு, அது எப்படி இயங்குகிறது என்றும் விளக்கினார்.

புதுமைக்குத் தேவை பணமில்லை, மனம்!

மின்சாரம் தேவையில்லை (அப்ப, தமிழ்நாட்டுக்கு நிச்சயம் தேவை!); நூறு சதவிகிதம் மக்கிப் போகக்கூடியது. விலை ரூ.2,000. இவ்வளவுக்கும் மன்சுக், பள்ளிக்கூடப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். இந்த 'மிட்டிக்கூல்’ இன்று குஜராத் கிராமங்களில் மிகவும் பிரபலம்.

மன்சுக் போன்ற பல புதுமை கண்டுபிடிப்பாளர்களை பற்றி 'ஜுகாட்’ என்கிற இந்த புத்தகத்தில் எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் 'பிரிக்’ (ஙிஸிமிசி) நாடுகள் என அழைக்கக்கூடிய பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவிலிருந்தும் பல உதாரணங்கள் புத்தகம் முழுக்க அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதுமை பொருட்கள் லாபநோக்கமற்று செயல்பட்டுவரும் தன்னார்வ அமைப்புகளாலும், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களாலும் கண்டறியப்பட்டு, பலருக்கும் பயன் தரும் வகையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  

இந்தியில் 'ஜுகாட்’ என்றால் குறைவானதிலிருந்து அதிகமானதைப் பெறுவது (Do More with Less)  என்று பொருள். சந்தர்ப்பச் சூழ்நிலை, பொருளாதார நிலைமை, சமூகப் பயன்பாடு ஆகியவைகளைக் கருத்தில்கொண்டு அனைவருக்கும் பயன்படும்படி எளிமையான, நூதனமான படைப்புகளைப் படைப்பது இதில் அடங்கும். இந்த புத்தகத்தை எழுதிய நூலாசிரியர்கள் ஆறு கொள்கைகளை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள். அவை, 1.துரதிர்ஷ்டமான சமயத்தில் வாய்ப்பைத் தேடுவது ((Seek opportunity in adversity); 2.குறைந்ததிலிருந்து அதிகம் பெறுவது (Do More with Less); 3.சிந்தித்து வளைந்து வேலை செய்வது(Think and Act Flexibly);  4.எதையும் எளிமையாகச் செய்வது (Keep it Simple); 5.பொருளாதாரத்தில் நலிவுநிலையில் உள்ளவர்களையும் கருத்தில்கொள்வது (Include the Margin); 6.மனம் சொல்வதைக் கேட்பது (Follow your Heart).

ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தை ஆய்வுகளில் நம்பிக்கையே இல்லாதவர். இவர் தனது மனம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு அறிமுகம் செய்ததுதான் ஐபாட், ஐபோன், ஐட்யூன், ஐபேட் போன்ற சாதனங்கள்.  இவர் ஆர்-டி-க்காகச் செலவிட்டது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செலவிட்டதில் ஐந்தில் ஒரு பங்குதான். ஆப்பிளின் வெற்றிக்குக் காரணம், ஸ்டீவ்-ன் உள்ளுணர்வு, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறியும் தன்மை, பேரார்வம்.

ஜி.இ. குழும நிறுவனங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஜி.இ. ஹெல்த்கேர் MAC  என்கிற இ.சி.ஜி. கருவியை 500 டாலருக்கு சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தியது. இதைப் பயன்படுத்தி செய்யக்கூடிய இ.சி.ஜி. சோதனைக்கான செலவு ரூ.10-தான். அதற்குப் பிறகு அவர்கள் இதை அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தினார்கள்.

அரவிந்த் மருத்துவமனையில் குறைந்த செலவில் செய்யப்படும் கண் அறுவை சிகிச்சைகள், நாராயண ஹிருதாலயாவில் ஒவ்வொரு வாரமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்குச் செய்யப்பட்டு வரும் நூற்றுக்கும் அதிகமான இருதய அறுவை சிகிச்சைகள், டேட்டா விண்ட் நிறுவனத்தின் 'ஆகாஷ்’ டேப்லட் கணினி எல்லாம் இந்த 'சிக்கனமான புதுமை’களுக்கு (frugal innovation) உதாரணம்.

ஆக, புதுமை படைக்க பணத்தைவிட மனம்தான் முக்கியம் என்பது தெளிவாகிறது. புதுமை படைக்கும் எண்ணத்தை நமக்குள் விதைத்து, வெற்றிக்கு வழிவகுக்கும் இந்த புத்தகத்தை எஸ்.எம்.இ. துறையைச் சேர்ந்த அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism