Published:Updated:

புரட்சித் தலைவர் ஆகுங்கள்!

புரட்சித் தலைவர் ஆகுங்கள்!

புரட்சித் தலைவர் ஆகுங்கள்!

புரட்சித் தலைவர் ஆகுங்கள்!

Published:Updated:
##~##

'இவரெல்லாம் என்னப்பா லீடரு! எனக்கு ஒரு வாய்ப்பு தந்து பாருங்க! நான் எப்படி கம்பெனியை நடத்துறேன்னு!’ என்று நம்மோடு வேலை பார்க்கும் சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். லீடர்ஷிப்பில் அது அவரோட ஸ்டைல், இது இவரோட ஸ்டைல் என்று ஒவ்வொருவரையும் பற்றிச் சொல்கிறார்களே, கம்பெனியை ஒழுங்காக நடத்துவதற்கும் ஒருவருடைய ஸ்டைலுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களேகூட கேட்டிருக்கலாம்.

லீடர்ஷிப் (தலைமைப்பண்பு) என்பது ஒருவருக்கொருவர் எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் லீடர்ஷிப் என்றால் என்னவென்று புரிந்துகொள்வது கட்டாயம். அதற்கு உதவுவதற்காகத்தான் மைக் பிக்லியுலோ எழுதியுள்ள 'ஒன் பீஸ் ஆஃப் பேப்பர்’ என்கிற புத்தகம். இதில் சக்தி வாய்ந்த லீடராவதற்கான எளிமையான வழிமுறைகளைச் சொல்கிறார் தாட் லீடர்ஸ் என்ற நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான மைக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரட்சித் தலைவர் ஆகுங்கள்!

உங்களுடைய லீடர்ஷிப் தத்துவம் என்ன என்பதை ஒரே பேப்பரில் விளக்கமாக எழுத முடிந்தால் எப்படி இருக்கும் என்ற அடிப்படைக் கேள்வியுடன் ஆரம்பிக்கின்றார் மைக். அப்படி ஒரே பேப்பரில் எழுத முடிந்தால் உங்களுடன் வேலை பார்ப்பவர்களுக்கு அது படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், மறக்க முடியாமல் இருப்பதற்கும் எளிதாக இருக்கும் இல்லையா? அதிலும் புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் இப்படி ஒரு தெளிவான, ஒரு பக்க கையேட்டை பார்த்தால், அட என்று ஆச்சரியத்துடன் உங்களை கொண்டாட மாட்டார்களா? என்கிறார் மைக்.

ஆனால், ஒரு செயலை செய்யும்போது அதனால் ஏற்படும் லாபத்தைத்தான் பார்க்கிறோமே ஒழிய, அதை  அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வதில்லை என்கிறார் மைக். பொதுவாக எல்லா லீடர்களுமே தன்னுடைய லீடர்ஷிப், மற்றொருவருடையதைப்போல் லாபம் தரவில்லை. அதனால் தன் லீடர்ஷிப் தவறு என்று நினைத்து அதை மாற்ற முயல்கின்றனர். இப்படி ஒருவர் தன்னுடைய லீடர்ஷிப் தத்துவங்களை மாற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் அவருடைய ஒரிஜினாலிட்டியை விட்டுவிட்டு மற்றொரு லீடரின் வழிநடப்பவராக மாறிவிடுகிறார். இதனால் லீடர்ஷிப்பில் புதுமை என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடுகின்றது. அப்படி இல்லாமல் லீடர்ஷிப் தத்துவம் என்பது எந்த அளவுக்கு ஒரிஜினலாக, எளிமையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வெற்றி, நம்பகத்தன்மை, நேர்மை என்ற மூன்றும் அதிகமாக இருக்கும் என்கின்றார் ஆசிரியர்.

நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாவிட்டால் யாரும் உங்களைப் பின்தொடர மாட்டார்கள் என்று 'நச்’சென சொல்லும் ஆசிரியர், உங்களுக்கென்று தனியான இலக்கு மற்றும் தர அளவீட்டை நிர்ணயித்துக்கொள்வதன் அவசியத்தை அவர் விரிவாக விளக்குகின்றார். இதற்கு உதவியாக இருக்கும் சில கேள்விகளையும் அவர் உதாரணங்களாகத் தருகிறார். எதைச் செய்வதற்காக நாம் காலையில் படுக்கையில் இருந்து எழுகிறோம்? எந்த மாதிரியான எதிர்காலத்தை நாம்

புரட்சித் தலைவர் ஆகுங்கள்!

கொண்டிருக்க நினைக்கிறோம்? எந்தெந்த கொள்கைகளுடன் நாம் வாழ நினைக்கிறோம், நாம் போகும் பாதையில் தவறிக் கீழே விழுந்தால் எப்படி மீண்டும் எழுந்து பயணத்தைத் தொடரப் போகிறோம், நம் செயல்பாடுகளுக்கு நாம் எந்த அளவுக்குப் பொறுப்பானவர்களாக இருக்கப்போகிறோம்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார் ஆசிரியர்.

ஒரு லீடர் என்பவர் தன்னுடன் இருப்பவர்களின் வாழ்வில் ஒளியேற்றுபவராக இருக்கவேண்டும். ஒளியேற்றுதல் என்பதை நீங்கள் பணம் தந்து உதவுதல் என்று அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. தன்னை உணரச் செய்தல் என்று அர்த்தம் செய்துகொள்ளவேண்டும். லீடர்ஷிப் கொள்கையை எந்த அளவுக்குத் தெளிவுபடுத்தி உருவாக்குகின்றோமோ அந்த அளவுக்கு வெற்றியும் உறுதி. அன்றாட வாழ்வில் பலர் தன்னை அறியாமலேயே ஒவ்வொரு லீடர்ஷிப் தத்துவத்தையும் அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டுவருவார்கள். சில சமயம் சில பழமொழிகள்கூட தத்துவமாக இருக்கும். அதை இன்னும் தீவிரமாக ஆராய்ந்து தெளிவுபடுத்தி திட்டமிட்டு சீர்படுத்தினால் முன்னேற்றம் இன்னும் வேகமாக இருக்கும் என்கின்றார் மைக்.

இறுதியாக லீடர்ஷிப் என்பது முழுக்க தனிமனித சம்பந்தப்பட்டது. அதனால் அதில் நீங்கள் முழுமையாக இறங்கிவிடவேண்டும். எந்த ஒரு புத்தகமும் இதை முழுமையாகச் சொல்லித் தந்துவிடாது. புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொள்பவர்தான் சிறந்த லீடர் என்று முடிக்கின்றார் மைக்.

நிர்வாகத் துறையில் பெரும் தலைவர்களாக ஆக நினைப்பவர்களும், அரசியலில் இறங்கி புரட்சித் தலைவராக மாற நினைப்பவர்களும் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்!

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism