Published:Updated:

தொழில்முனைவோருக்கு தேவையான தகுதிகள் !

தொழில்முனைவோருக்கு தேவையான தகுதிகள் !

தொழில்முனைவோருக்கு தேவையான தகுதிகள் !

தொழில்முனைவோருக்கு தேவையான தகுதிகள் !

Published:Updated:
##~##

முக்கியமான தொழிலதிபர்களாகவும் தற்போது வெஞ்ச்சர் கேப்பிட்டல் முதலீடு செய்துவருபவர் களுமாகிய அந்தோணி கே.டிஜான், ரிச்சர்ட் ஜே. ஹாரிங்டன், ட்சூன்-யான் ஹிஷே ஆகிய மூவரும் சேர்ந்து எழுதிய புத்தகம்தான் இது. வெற்றிகரமான தொழில்முனைவோரின் குணாதிசயத்தைச் சொல்ல இவர்கள் மிகவும் தகுதியானவர்கள்.

எந்தெந்த குணங்கள் சிறந்த தொழில்முனைவோரை உருவாக்குகின்றது. ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் தொழில்முனையும் குணத்தை எப்படிக் கண்டறிவது? நீங்கள் எப்படி தொழில்முனைவோர் ஆவது? என்ற மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கும் முயற்சியில் எழுதப்பட்டது தான் இப்புத்தகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதயம், கூரறிவு, தைரியம் மற்றும் அதிர்ஷ்டம் (ஹார்ட், ஸ்மார்ட்ஸ், கட்ஸ் அண்ட் லக்) இவைதான் தொழில்முனை வோருக்கான மூலாதாரம். இந்த நான்கும் சில சமயத்தில் ஒன்றுக்கொன்று உதவும் வகையில் செயல்படுவதாகவும், சில சமயங்களில் எதிர்மறையாகச் செயல்படுவதாகவும் சொல்கின்றனர் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள்.

தொழில்முனைவோருக்கு தேவையான தகுதிகள் !

ஒரு பிஸினஸ் ஐடியாவில் தீராத ஈடுபாட்டைக்கொண்ட ஒருவரிடம், இந்த ஐடியா சரிப்பட்டு வராது, பிராக்டிக்கலா இந்த புராடக்ட் எடுபடாது என்றெல்லாம் சொல்லி மனதை மாற்றிவிட முடியாது. ஒரு பிஸினஸ் ஐடியாவின் மீது தீராத காதல் கொண்டவர் ஹார்ட்-டாமினன்ட் (மனதின் ஆட்சி) ரகத்தைச் சார்ந்தவர். இவரை பிஸினஸ் பிளான், ரிசர்ச், பிராக்டிகாலிட்டி என்பதையெல்லாம் சொல்லி நிறுத்தவே  முடியாது. எப்படியாவது தன்னுடைய ஐடியாவை பிஸினஸாக மாற்ற முயற்சிசெய்துகொண்டே இருப்பார்.  

அடுத்து, ஸ்மார்ட் மனிதன். இவர்கள் நடைமுறைக்கு தோதானவர்கள். நிஜம் புரிந்தவர்கள், வேலையை பிரித்துத் தந்து கண்காணிக்கத் திறமை வாய்ந்தவர்கள். தொழிலுக்குத் தேவையான பல்வேறு விஷயங்களையும் பரபரப்பாகச் செயலாக்குவார்கள். இவர்கள் ஹார்ட் மனிதனின் மனது எனும் விளைச்சல் நிலத்தில் விளையும் ஐடியாக்கள் செம்மையாக வளர ஏற்பாடு செய்து களைகளை அகற்றி உரம் போட்டு சிறப்பான அறுவடை செய்ய முயற்சிப்பவர்கள்.

உலகம் ஹார்ட் மற்றும் ஸ்மார்ட் மனிதர்களை மட்டுமே கொண்டிருந்தால் தொழில் வளராது. ஹார்ட் ஐடியாவையும் ஸ்மார்ட் ஐடியாவைச் செயலாக்கும் வழிமுறைகளையும் தரும். ஆனால், ஐடியாவைச் செயலாக்க பணம் வேண்டும். அந்தப் பணத்தை முதலீடு செய்ய ரிஸ்க் எடுக்கவேண்டும். ரிஸ்க் எடுக்க தைரியம் (கட்ஸ்) வேண்டும். எந்தத் தொழிலையும் ஆரம்பிக்கும்போது கண்ணை மூடிக்கொண்டு ஆரம்பித்துவிடலாம். ஆனால், நடத்தும்போது வரும் பிரச்னைகளை லாவகமாக எதிர்கொள்ளும் கட்ஸை கொண்டவருக்குத்தான் வெற்றி கிடைக்கும்.

இதையெல்லாம் தாண்டி நம் கையில் இல்லாத, ஆனால் வெற்றிக்குத் தேவையான ஒரு விஷயம் இருக்கின்றது. அதுதான் அதிர்ஷ்டம் என்று சொல்லப்படும் லக். ஈடுபாடில்லாதவன் ஈடுபாடு இருப்பதைப்போல் நடிக்கலாம். கட்ஸ் இல்லாதவன் கட்ஸ் இருப்பதைப்போல் பாவ்லா செய்யலாம். ஆனால், லக் இல்லாதவன் இந்த மாதிரி நடிக்கவோ அல்லது பாவ்லா செய்யவோ முடியாது என்று நச்செனச் சொல்கின்றார்கள் ஆசிரியர்கள். அதிர்ஷ்டம் என்பது நம்முடைய கன்ட்ரோலில் இல்லாத ஒன்றானாலும் அது நம்மை நோக்கி வரவும், நம்மை ஓரக்கண்ணால் பார்க்க வைக்கவும் முயற்சிகளை ஓரளவுக்கு நாம் மேற்கொள்ளலாம்.

இறுதியாக, வெற்றிகரமான ஒரு பிஸினஸை உங்களால் உருவாக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ள சில கேள்விகளை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். முதலில், ஹார்ட் தொடர்பான

தொழில்முனைவோருக்கு தேவையான தகுதிகள் !

கேள்விகள்: 1. பிஸினஸ் செய்ய எது உங்களுக்கு தடை போடுகின்றது?, 2. உங்கள் நோக்கம் மற்றும் தீர்க்கதரிசனம் என்ன?, 3. உங்கள் யூகங்கள், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வியல் கொள்கை மதிப்பீடுகள் என்ன?

அடுத்து ஸ்மார்ட் தொடர்பான கேள்விகள்: 1. தொழில் நடத்த சரியான நடைமுறைகள் உங்களிடம் உள்ளதா?, உங்கள் பிஸினஸ் ஸ்ட்ராட்டஜி சரியா?

கட்ஸ் தொடர்பான கேள்விகள். 1. உங்களுக்குத் தைரியம் இருக்கின்றதா?, 2. விற்கப் போகின்றீர்களா, இல்லையா?

லக் தொடர்பான கேள்விகள்: 1. நீங்கள் அடக்கமானவரா, பகட்டு இல்லாதவரா?, 2. ஈடுபாட்டுடன் பிஸினஸ் உறவைப் பேணுபவரா?, 3. உங்கள் தோல்வியை நீங்கள் எவ்வாறு ஆராய்வீர்கள்?

எங்கே இதயம் செமத்தியாக ஈடுபாடு கொள்கின்றது, எங்கே கூரறிவு சூப்பராய் மிளிர்கின்றது, எங்கே தைரியம் பீறிடுகின்றது, யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கின்றது என்பதைப் பற்றியும் தெளிவாய் விளக்கியுள்ளனர் ஆசிரியர்கள். தொழில் முனைய நினைப்பவர்களும், தொழிலில் வளர நினைப்பவர்களும் நிச்சயமாய் படிக்கவேண்டிய புத்தகம் இது.

(நாணயம் டீம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism