Published:Updated:

பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்!

பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்!

பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்!

பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்!

Published:Updated:
##~##

வேலைக்குப் போகும் பெண்கள் பணியிடத்தில் படும்பாடு என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர்களுடைய பிரச்னைகள்தான் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளிப்பது? பல பிரச்னைகள் விவாதிக்கப்படாமல் போய்விடுவதால் பெரும்பாலும் பெண்கள் மனதிலேயே அவை முடங்கிப் போகின்றன. வெளியில் சொல்லி ஆலோசனைக் கேட்கவும் அனைவரும் தயங்குகின்றார்கள். இப்படிப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் விதமாக வெளியாகியுள்ள புத்தகம்தான் 'த அமேசிங்

அட்வெஞ்சர்ஸ்.’  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு நாடுகளில், இருபத்தி இரண்டு நகரங்களில், நாற்பது வருடங்களில், 59 விதமான வேலை களைச் செய்த ஒரு பெண், வேலைக்குப் போகும் பெண்களுக்கான அட்வைஸ்களைச் சொன்னால் அது பொருத்தமானதாக இருக்கும். ஆம், இந்தப் புத்தகத்தை எழுதிய கேரின் பர்ன்ஸ்தான் இத்தனை அனுபவத்தையும் ஒன்றாகப் பெற்று அதைத் தொகுத்து, வேலைக்குச் செல்லும் பெண்களுக்காகக் கொடுத்துள்ளார் இந்தப் புத்தகத்தில்.

பத்தாவது வயதில் வேலைக்குப் போக ஆரம்பித்த இந்தப் பெண்மணி, பல்வேறு நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளில் இருந்துள்ளார். செக்கோஸ்லோவாகியாவில் குழி தோண்டும் பணியில் ஆரம்பித்து, பாத்திரம் கழுவும் பெண்ணாக, கிளார்க்காக, மாடலாக, டைப்பிஸ்ட்டாக, டீச்சராக, தையல்காரியாக, கேஷியராக, ஜர்னலிஸ்ட்டாக, எடிட்டராக, கன்சல்டன்ட்டாக  பல்வேறு பணிகளைச் செய்த இந்தப் பெண் மற்றவர்களுக்கு கேரியர் குறித்த அட்வைஸ் செய்ய மிகத் தகுதியானவராகத்தான் இருக்கின்றார். தான் பார்த்த ஐம்பத்து ஒன்பது வேலைகளின் அனுபவத்தையும் ஐம்பத்து ஒன்பது அத்தியாயமாகத் தந்துள்ளார்.

பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்!

இவற்றை தலைப்பு வாரியாகப் பெரிய பிரிவாகப் பிரித்தால் கற்ற பாடங்கள், நம்பிக்கை, வெற்றி பெற்றது எப்படி என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஆரம்ப காலத்தில் இவர் செய்த மற்றொரு வேலை பக்கத்து வீட்டில் இருந்த எண்பது வயது தம்பதியருக்கு வீட்டைச் சுத்தப்படுத்தித் தரும் வேலை. எப்போதுமே சுத்தமாக இருக்கும் வீட்டை மீண்டும் மீண்டும் துடைத்து எல்லாவற்றையும் நகர்த்தி, தலையணைகளை எல்லாம் தட்டிப் போட்டாலும், அந்த வயதான இருவரும் நீ நன்றாக வேலை செய்கின்றாய் எனச் சொன்னதே இல்லையாம். பாராட்டாத ஒரு பாஸ் எந்த அளவுக்கு மனஅழுத்தத்தைத் தருவார் என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் இந்த வொர்க்கிங் கேர்ள்.

வேலைக்குப் போகும் பெண்களின் மனதில் இருக்கும், மிகவும் குமைச்சலான விஷயம் ஒன்றை சூப்பராகச் சொல்கின்றார் ஆசிரியர். பாஸ் என்றைக்குமே நம்மிடம் 'ப்ளீஸ்’ என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டார். கஸ்டமரில் பாதிப்பேர் பெண்தானே எனத் திமிர்த்தனமாக மரியாதை இல்லாமல் பேசுவார்கள். இதனைத் தவிர்க்க மிஸ் மேனர்ஸாக இருங்கள் என்று சொல்லும் ஆசிரியர், அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வொன்றைச் சொல்கின்றார். பார்ட் டைமாக ஒரு சிகரெட் கடை யில் வேலை பார்க்கும்போது, ஐம்பது வயது ஆசாமிகள் எல்லாம் வந்து, 'ஒரு மல்ப்ரோ பாக்கெட், பேபி’ என்று கேட்டு கண்ணடிப் பார்களாம். இதைத் தவிர்க்க, கஸ்டமர் வந்தவுடன் 'குட் ஈவினிங் சார். மே ஐ ஹெல்ப் யூ’ என்று சத்தமாகக் கேட்பாராம். இந்த அதிரடி மேனர்ஸால் பலபேர் வேண்டியதை மட்டும் தெளிவாகக் கேட்டு வாங்கிச் செல்வார்களாம். கண்ணடித்தல் போன்ற குசும்புகள் எல்லாம் இருக்கவே இருக்காதாம்.

மேனர்ஸில் முக்கியமாக வெறும் ஹாய்-க்குப் பதிலாக குட் மார்னிங், குட் ஈவினிங் என்று திருத்தமாகச் சொல்வது, நன்றி சொல்வது, கிசுகிசுக்களைக் கேட்டால் அதைப் பரப்பாமல் உடனடியாக மறந்துவிடுவது என பன்னிரண்டு விஷயங்களைச் சொல்கின்றார் ஆசிரியர். பிடிக்காத வேலையைவிட்டுப் போயே ஆக வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், என்றைக் காவது ஒருநாள் நீங்கள் இருக்கும் வேலையை விட்டு நீங்கள் போயேதான் ஆகவேண்டும். அதற்குக் காரணம் ரிட்டையர்மென்டாகவோ, உங்களுடைய இறப்பாகவோ, உங்களை வேலையைவிட்டுத் தூக்குவதனாலோ என எதுவாகவும் இருக்கலாம். இப்படி நிச்சயம் ஒருநாள் வேலையை விடவேண்டியிருக்கும் என்ற நிலையில், நீங்கள் ஏன் அதை திட்டமிட்டு விட முடியாது! பிடிக்காத வேலையைவிட ஒரு திட்டத்தைத் தயாரியுங்கள். இன்றிலிருந்து ஒரு வருடத்தில் நான் வேலையை விடுவேன் என்று குறித்து வைத்துக்கொண்டு செயலாற்றுங்கள் என்கின்றார்.

எத்தனை வேலைக்குப் போனாலும் பாஸ் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கிறார். எப்போதுமே அதில் சிலர் நரகத்தில் இருந்து வந்தவரைப் போலத்தான் நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்ட பாஸை எப்படி மேனேஜ் செய்வது? என்று கேட்பீர்கள். அதற்கு ஆசிரியர் சொல்லும் பதில், உங்கள் வேலையை எப்படிச் சிறப்பாகச் செய்ய நீங்கள் வழிவகைகளைக் கண்டுபிடிக்கின்றீர்களோ, அதேபோல் உங்கள் பாஸை மேனேஜ் செய்யவும் சிறப்பான வழிவகைகளை கண்டறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். பாஸ் என்பவர் ஒரு தவிர்க்க முடியாத ஆள். நல்ல வேளையாக நரகத்தில் இருந்து வந்தவர்கள் குறைவாக இருக்கின்றனர். இதுபோன்ற பாஸ்களை மேனேஜ் செய்வதற்கு பத்து முத்தான வழிகளைச் சொல்கின்றார் ஆசிரியர்.

பெண்கள்... பிரச்னைகள்... தீர்வுகள்!

பாஸ் மிகவும் மட்ட ரகமானவராக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கோபதாபங்களை விட்டுவிட்டு ஹெச்.ஆர். மேனேஜரை அணுகி பொறுமையாக எனக்கு டிரான்ஸ்பர் போடுங்கள் என்றோ, இந்த ஆளால் நான் பதவி விலகுகின்றேன் என்றோ நீங்கள் சொல்லலாம். பல சமயம் ஹெச்.ஆர். மேனேஜர் உங்களுக்கு பாசிட்டிவ்வான உதவிகளைச் செய்வார். ஆனாலும் எச்சரிக்கை! நீங்கள் வேலையை விட்டுத் தூக்கப்படுவதற்கான வாய்ப்பும் இந்த முயற்சியில் அடங்கியுள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர். நல்லவேளையாக, டார்ச்சர் பாஸ்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், அதுபற்றி அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை என்கிறார் ஆசிரியர்.  

அடுத்தபடியாக, ஆபீஸில் அசடுவழியும் ஆசாமிகள். இவர்களை எப்படி கையாள்வது என்பதையும் கிண்டலும் கேலியுமாகச் சொல்லியுள்ள ஆசிரியர், நீங்கள் எந்த அலுவலகத்திற்குப் போனாலும் அங்கே ஒருவராவது பெண்ணுக்கு ஆண் என்பது ஆண்டவன் அளித்த பரிசு என்ற எண்ணத்துடன் இருப்பார் என்று கூறியுள்ளார்.

'வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் செய்யவே முடியாததைப் போலவே தோன்றும்; அதை நாம் செய்து முடிக்கும் வரை...’ என்று 'நச்’சென்று சொல்லியிருக்கின்ற கேரின் பர்ன்ஸ், 'பெண்களே... வாழ்க்கை என்ற விளையாட்டில் அதில் நடந்த மோசமான நிகழ்வுகளின் நினைவுகளைச் சேகரித்தால் தோற்றுப் போவீர்கள். அதில் நடந்த நல்ல நிகழ்வுகளின் நினைவுகளைச் சேகரித்தால் வெற்றி பெறுவீர்கள்’ என்று சொல்லியிருப்பது அனைத்து வேலைக்குச் செல்லும் பெண்களும் நினைவில் கொள்ளவேண்டியது.

வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அதற்குண்டான தீர்வையும் ஆசிரியரின் அனுபவத்தையும் பல்வேறு துறையில் வேலை செய்யும் பெண்கள் அவர்கள் கையாண்டதாகச் சொல்லும் டெக்னிக்கு களையும் சேர்த்துத் தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பாகும்.

வேலைக்குப் போகும் பெண்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism