அறிமுகம்

உங்களுக்குள் இருக்கும் கனவு மனிதனை எப்படி அறிந்துகொண்டு அவனை வெளியே கொண்டுவரப் போகிறீர்கள், உங்களிடம் தற்போது இருக்கும் அறிவைத் தாண்டி எவற்றையெல்லாம் தெரிந்துகொண்டால் நீங்கள் அந்தக் கனவு மனிதனை ஒரு சிறப்பான நபராக வெளியே கொண்டுவரமுடியும் என்பதை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கிறது 'தடையைத் தகருங்கள்’ (பிரேக்த்ரூ) என்னும் புத்தகம்.

தினமும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பல்வேறுவிதமான சாய்ஸ்கள் நம் முன் வந்துபோகும். அவற்றில் எந்த சாய்ஸை தேர்வு செய்வது? 'எந்த சாய்ஸ் நமக்குள்ளிருக்கும் திறமையை முழுமையாக வெளிக்கொணர உதவுவதாக இருக்கும் என்று தெரிந்துகொண்டு அதை தேர்வு செய்யவேண்டும்’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் சி.எம். கார்ட்டர்.

மிகவும் பிராக்டிகலான வழிகளைச் சொல்லும் ஆசிரியர் 'ப்ரேக்த்ரூ’வை அடைய 'மனஉறுதியும் (வில்பவர்) வேண்டும்; வழிஉறுதியும் (வே பவர்) வேண்டும் என்பதோடு, அதையும் தாண்டி 'வேவ் பவர்’ (முன்னேற்றத்தை நோக்கிய பவர்ஃபுல்லான அலை) நம்மிடம் கட்டாயம் இருக்கவேண்டும்’ என்கின்றார் ஆசிரியர்.

நான் யார்? எதற்காக இங்கிருக்கிறேன்? இப்போது இங்கேயிருக்கும் நான் என்ன செய்யவேண்டும்? இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்கிற ஆசிரியர், தடைகளைத் தகர்ப்பதற்கு இருபது வழிகளையும் இந்தப் புத்தகத்தில் சொல்கிறார்.

'உங்களுடைய துருவ நட்சத்திரத்தை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய விதியை மாற்றும் பாதையை நீங்களே முடிவு செய்யவேண்டும். எல்லையில்லாத நிலையையும் தாண்டிச் செல்ல தொடர்ந்து முயலவேண்டும். நம்மால் எதைச் செய்ய முடியுமோ, அதை மட்டுமே செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மனப்பாங்கே நம்முடைய வாழ்க்கையின் உயரத்தை முடிவு செய்யும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும். எப்போதுமே சரியான விஷயங்களை சரியான வழிமுறைகளில் மட்டுமே செய்து பழகவேண்டும். உங்களுக்கென்று ஒரு சரியான பிராண்டை உருவாக்கிக்கொண்டு, அதை சரியான விதத்தில் நிலைநாட்ட வேண்டும். நம்மைப் பற்றித் தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வலிமை என்பது எப்போதுமே நம்மிடத்தில் இருக்கின்றது என்று புரிந்துகொள்ள வேண்டும். வில்பவரிலிருந்து வே பவர் வழியாக வேவ் பவரை உருவாக்கிக்கொள்ள பழகவேண்டும். அன்பு என்பது ஒரு வினைச்சொல் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். உணர்ச்சி வயப்படும்போது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். நம் உடல் நலத்தில் நாம் கொள்ளும் கவனம் என்பது நம்மைப் பற்றி பறைசாற்றும் ஒரு விஷயம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

நன்றியுணர்வுடன் நடந்துகொள்ளுதல் ஒரு மனிதனைப் புனிதனாக்குகின்றது. எந்தச் சூழலில் நாம் இருக்கின்றோமோ, அதை முழுமையாகப் புரிந்துகொண்டு அதைப் பிரதிபலிக்கவேண்டும். வாழ்க்கைச் சக்கரத்தை எப்படித் திட்டமிட்டு நகர்த்துவது என்று புரிந்துகொள்ள வேண்டும். தோற்றுப் போதல் என்பது கீழே விழுவதல்ல; சற்றுப் பின்தங்கியிருத்தலே என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

உணர்ச்சிகளைத் திரட்டி அதை எப்படி ஒருமுகப்படுத்தி முன்னேற்றச் செயலாக்குவது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு மாற்றத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றோமா என்று முழுமனதுடன் ஆராய்ந்துகொண்டே இருக்கவேண்டும். அனுபவமிக்க ஒரு அறிவுரையாளரை (மென்டர்) நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடமே அனுபவம் போதுமான அளவுக்கு இருந்தால் நாம் நிச்சயம் ஒரு மென்டராகச் செயல்பட வேண்டும். இவரிடமிருந்து அறிவை மட்டும் பெற்றால் போதாது; சுயபுரிதல் (செல்ப் அவேர்நஸ்) என்பது நிறையவே இருக்கவேண்டும்.’

சுயபுரிதல் மட்டுமே ஒருவருடைய முன்னேற்றத்திற்கு மிகவும் உதவுவதாக இருக்கும். சுயபுரிதல் என்றால் என்ன? நீங்களே உங்களுடைய பிரச்னைகளுக்குண்டான வழிவகைகளைக் கண்டுபிடித்துக்கொள்வது அல்லது உங்கள் வழியைக் கண்டுபிடிப்பது. இந்த வழியை அறிவுசார் வழியில் கண்டுபிடிப்பீர்களா? அல்லது மனது சொல்லும் வழியில் நடப்பீர்களா? எப்படி விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்? படிப்பதன் மூலமா? கேட்பதன் மூலமா? பல்வேறு வழிவகைகளைச் செய்து பார்ப்பதன் மூலமா?

கேட்டல், பார்த்தல், தொட்டுணர்தல் என்றவற்றில் எந்த உணர்வு உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் போட்டிக்குத் தயாரானவரா? தன்னம்பிக்கை அதிகமுள்ளவரா? மாற்றங்களை விரும்புபவரா? எந்தவித உணர்வுகள் உங்களை அதிகமாக கட்டுப்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டவரா? என பல்வேறுவிதமான தனிநபர் குறித்த கேள்விகளைக் கேட்டுக் குவித்துள்ள ஆசிரியர், தனிமனித முன்னேற்றத்திற்கான பல்வேறு வழிவகைகளை தன்னுடைய வாழ்க்கையிலிருந்தும், அவருடைய நண்பர்கள் மற்றும் சிஷ்யர்கள் வாழ்க்கையிலிருந்தும் தொகுத்துத் தந்துள்ளார்.

லட்சியத்தை அடைய திட்டமிட்டு முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

- நாணயம் டீம்.