Published:Updated:

முக்கிய புத்தகம் : கிரிசில் உத்தரவாதம் !

முக்கிய புத்தகம் : கிரிசில் உத்தரவாதம் !

முக்கிய புத்தகம் : கிரிசில் உத்தரவாதம் !

முக்கிய புத்தகம் : கிரிசில் உத்தரவாதம் !

Published:Updated:

சித்தார்த்தன் சுந்தரம்

அறிமுகம்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலீட்டாளர்கள் அனைவருக்கும் மிகவும் அறிமுகமான பெயர் 'தி கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீஸஸ் ஆஃப் இண்டியா லிமிடெட் (CRISIL)’. இதனுடைய வெள்ளிவிழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையட்டி வெளியான புத்தகம்தான் ஹேமந்த் கோருர், சுமித் சௌத்ரி எழுதிய 'டூயிங் வாட் இஸ் ரைட்.’   1987, ஜனவரி 29 அன்று போட்ட விதை இன்று ரூ.800 கோடி வருமானம் ஈட்டும் ஆலவிருட்சமாக வளர்ந்திருக்கிறது. 'முக்கியமான பண்புகள் குணத்தை வரையறுக்கும்; குணம் நிறுவனத்தை நடத்திச் செல்லும்’ (Core values define character. Character drives organization) என்பதற்கு ஒரு முன்மாதிரி நிறுவனமாக கிரிசில் இன்று வரை வெற்றிநடை போட்டு வருகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ., யூ.டி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஏசியன் டெவலப்மென்ட் பேங்க் மற்றும் பல வங்கிகள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த முதலீட்டு ஆவண மதிப்பீட்டு நிறுவனம்தான் கிரிசில். ரூ.15 கோடி முதலீட்டில் 160 பேரைக்கொண்டு ஹெச்.டி.எஃப்.சி.யில் வேலை பார்த்துவந்த, பிரபல வங்கியாளர் நாராயணன் வாகுலின் சிஷ்யர் பிரதீப் பன்னாலால் ஷாவை நிர்வாக இயக்குநராகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் இந்தியா, அர்ஜென்டினா, சீனா, போலந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து என பல நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளையோ அல்லது மற்ற முதலீட்டு ஆவணங்களையோ வாங்க வேண்டுமெனில் நாம் பலமுறை யோசித்து, நமக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது புரோக்கர்களின் யோசனையின்பேரில் முதலீடு செய்துவந்த காலகட்டம் அது. 1985-86-ல் பங்குச் சந்தையில் சந்தடி அதிகமாக இருந்தது. அபரிமிதமாக பணம் புரண்டது; பல நிறுவனங்கள் புதிய திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட பங்குச் சந்தையை அணுகிய நேரம்.

முக்கிய புத்தகம் : கிரிசில் உத்தரவாதம் !

இதோடு திட்டங்களுக்கான செலவும், போட்டியும் அதிகரித்து வந்தது. இதனால் தொழிலில் தோல்வியும், தவறுகளும் அதிகம் ஏற்படக்கூடும் என்கிற கணிப்பும் நிபுணர்கள் மத்தியில் நிலவி வந்தது. கணிப்புக்குத் தோதாக, 1986-ல் நிர்லான் நிறுவனம் கடனீட்டுப் பத்திரத்தின் மீது முதலீட்டாளருக்கு வட்டி கொடுப்பதை (கிட்டத்தட்ட ரூ.27 கோடி) நிறுத்தி வைத்தது. இவ்வளவிற்கும் அந்த நிறுவனம் கடனீட்டுப் பத்திரம் வெளியிட்டு ஒரு வருடம்தான் ஆகியிருந்தது.

நிதி நிலைமை பற்றி அதிகமான தகவல்களை தன்னிடத்தே கொண்டிருந்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முதலீட்டுப் பத்திரங்கள் மற்றும் பங்குகளுக்கான மதிப்பீடு தேவை என்பதை உணர்ந்தது. அந்த நேரத்தில் உலகப் புகழ்பெற்ற ஸ்டாண்டர்டு அண்ட் பூவர், மூடி (Moody - இதை பலரும் தவறாக மோடி என்று உச்சரிக்கிறார்கள்!) போன்ற மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடியெடுத்து வைக்கத் தயங்கிக்கொண்டிருந்தன. இதன்பொருட்டு மேற்கூறிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்ததுதான் கிரிசில். இன்றைக்கு கிரிசிலின் முக்கிய பங்குதாரர் ஸ்டாண்டர்டு அண்ட் பூவர் என்று சொல்லப் படும் எஸ் அண்ட் பி (கிட்டத்தட்ட 53 சதவிகிதம்) நிறுவனம்தான்!

கிரிசிலின் முதல் வாடிக்கையாளர் ஐ.பி.சி.எல். (Indian Petrochemicals Corporation Ltd). இந்நிறுவனம் ரூ.64 கோடி மதிப்புள்ள கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட உத்தேசித்திருந்தது. உரிய வேலைகள் எல்லாம் முடிந்தபின், 1988 மார்ச் 31-ம் தேதி

முக்கிய புத்தகம் : கிரிசில் உத்தரவாதம் !

AAA’ (மிகவும் பாதுகாப்பானது) என்கிற முத்திரையுடன் வெளியிடப்பட்டது.

இந்திய கார்ப்பரேட் பாண்டுகளில் மூன்றில் இரண்டு கிரிசில் முத்திரையுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது; * 45 வங்கிகளின் முதலீட்டு ஆவணங்களை மதிப்பீடு செய்திருக்கிறது;  2005-ல் எஸ்.எம்.இ. நிறுவனங்களையும் மதிப்பிட ஆரம்பித்த முன்னோடி; 2011 வரை 30,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மதிப்பீடு செய்திருக்கிறது; 2006-ல் ஐ.பி.ஓ கிரேடிங் பணியையும் அறிமுகப்படுத்தியது; 2010 ரியல் எஸ்டேட் ஸ்டார் ரேட்டிங்ஸ் அறிமுகம்; 2011-ல் எஜுகேஷன் கிரேடிங், சோலார் கிரேடிங் மற்றும் கோல்டு - கில்டு குறியீடுகளை அறிமுகப்படுத்தியது என கடந்த 25 ஆண்டுகளில் இந்நிறுவனம் செய்த சாதனைகள் பல. அதை 135 பக்கங்களில் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள். இந்நிறுவனத்தின் சிறப்பு இதன் தனித்துவமும், நம்பகத்தன்மையும்தான். எந்த நிறுவனமும் பணம் கொடுத்து கிரிசிலிடமிருந்து தனக்கு சாதகமாக கிரேடிங்கோ, ரேட்டிங்கோ வாங்க முடியாது. இதுவரை வாங்கியதும் கிடையாது.

பிரதீப் ஷாவிற்குப் பிறகு இதன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ரவி மோகன், அதற்குப் பிறகு ரூபா குட்வா. இவர்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் மற்றவர்களின் தலைமைப்பண்பு, அறிந்தாயும் திறன் பற்றியும் இந்தப் புத்தகத்தில் அங்கங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரூபாவின் முன்னுரை யில் ஆரம்பித்து, பிரதீப் ஷாவின் முடிவுரையுடன் முடியும் இந்தப் புத்தகம், நிறுவனங்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு நிஜமான விருந்துதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism