Published:Updated:

முக்கிய புத்தகம் : சக்தி தரும் திருப்பு முனைகள் !

முக்கிய புத்தகம் : சக்தி தரும் திருப்பு முனைகள் !

முக்கிய புத்தகம் : சக்தி தரும் திருப்பு முனைகள் !

முக்கிய புத்தகம் : சக்தி தரும் திருப்பு முனைகள் !

Published:Updated:
##~##

தொழில்முனைவு பற்றி சிறப்பான போதனைகளையும் சிந்தனைகளையும் அள்ளித் தந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஹோவர்ட் ஸ்டீவன்சனின் கருத்துக்களைத் தொகுத்து அவருடைய மாணவரும் பிரதம சிஷ்யருமான எரிக் சி.சினோவேயும், மெர்ரில் மெடோ என்பவரும் இணைந்து எழுதிய இந்தப் புத்தகம்தான் இந்த வாரம் அறிமுகம்.

''இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்தபோது, உலகில் எல்லாமே செழிப்பாக இருந்தது. பொருளாதாரம் மேலே, சந்தைகளும் மேலே, லாபங்களும் மேலே என்று இருந்தது.  அந்தச் சூழ்நிலையில் பணம் சம்பாதிக்காத மனிதர்களைப் பார்த்தால், ஏன் இவங்களெல்லாம் சம்பாதிக்கவில்லை? என்று தோன்றும். ஒருவேளை இவர்கள் வாழ்க்கையை வேறுமாதிரியாக எதிர்கொண்டிருக்க வேண்டுமோ என்றும் தோன்றும். ஆனால், 2008-ல் நடந்த அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின் எங்கள் எண்ணமே மாறியது. குறிப்பாக, இரண்டு முக்கிய விஷயங்களை நாம் அனைவரும் பார்க்கத் தவறிவிட்டோம்'' என இந்தப் புத்தகம் எழுதத் தொடங்கியதன் பின்னணியை பணிவாக சொல்ல ஆரம்பிக்கின்றனர் ஆசிரியர்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மேலே போவதெல்லாம் கீழே வந்தாக வேண்டும்; அடிப்படையே சரியில்லாமல் தில்லுமுல்லுகளுடன் இருக்கும் பிசினஸ்கள் கொஞ்சநாள் ஜெயிப்பதைப்போல் தெரிந்தாலும் நிச்சயமாக ஒருநாள் தோற்றுப்போய்விடும் என்கிற இரண்டு முக்கிய விஷயங்களை நாங்கள் கவனிக்கத் தவறிவிட்டோம். விளைவு..?

முக்கிய புத்தகம் : சக்தி தரும் திருப்பு முனைகள் !

பெரிய கார்ப்பரேஷன்கள் திவாலாவதையும், பங்குச் சந்தையில் பணத்தைப் பெருக்குவதற்கு கஷ்டப்படுவதற்குப் பதிலாகப் பணத்தைக் காப்பாற்ற முதலீட்டாளர்கள் கஷ்டப்படுவதை யும், அன்றாடம் புரமோஷன், இன்சென்டிவ் என்று பேசியவர்களெல்லாம் வேலையைத் தக்க வைத்துக்கொள்வதற்கே பிரயத்தனப்படுவதையும், கல்லூரியில் படித்து முடித்து வெளிவரும் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் தவிப் பதையும் பார்த்த ஆசிரியர்கள், வாழ்க்கையில் வெற்றி என்பதன் பொருளே வேறு என்பதைப் புரிந்துகொண்டோம். இதுபோன்ற நிலையற்ற சூழல்களைச் சமாளிப்பது எப்படி?'' என்று பதில் தேடினார்கள் ஆசிரியர்கள்.  

இச்சூழ்நிலையை வெல்ல வழியைச் சொல்லத் தகுதியானவர் ஒரேயரு மேதைதான். அவர்தான் ஹோவர்ட் ஸ்டீவன்சன் என்று சொல்லும் ஆசிரியர்கள், இப்புத்தகத்தில் ஹோவர்ட்ஸுடன் ஆறு வருட காலத்தில் பல நூறு மணி நேரம் நடந்த கலந்துரையாடலின் சாராம்சத்தைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த அரிய கருத்துக்கள் என்னென்ன?

முதலாவதாக, மனித வாழ்வில் வரும் திருப்புமுனைகளைப் பற்றிச் சொல்லும் ஆசிரியர்கள், மனித வாழ்வில் திருப்புமுனைகள் பாசிட்டிவ், நெகட்டிவ், சுலபம், கஷ்டம், தெளிவாக, மறைவாக என பல்வேறு சூழலில் பல்வேறு வடிவில் வந்துசேரலாம். எந்த ரூபத்தில், எந்த நேரத்தில் வந்தாலும் அது மிக முக்கியம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இரண்டாவதாக, முடிவில் தொடங்குங்கள் என்று சொல்லும் ஆசிரியர்கள் அதுபற்றி விளக்க மாகவும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு செயலின் ஆரம்பத்திலேயே அதிக நேரத்தை யும் சிந்தனையையும் செலவிட்டு அதன் முடிவு எப்படி இருந்தாகவேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்கின்றனர்.

மூன்றாவதாக, நேரத்தின் முக்கியத்துவத்தையும் தெளிவாக கூறுகிறார்கள். ஃபார்ச்சூன் 500 கம்பெனியோ, தெருக்கோடியில் இருக்கும் பேக்கரியோ நேரம் என்பது அவரவர் தொழிலுக்கு ஏற்றாற்போல் முக்கியமானது. கம்பெனிகளாவது பல நூறாண்டு வாழக்கூடியவை. மனிதர்களாகிய நாம் குறைந்த வருடங்களே வாழப்போகின்றோம். எனவே, நேரம் என்பது தனிமனிதனுக்கு மிக மிக முக்கியமானது என்று சொல்லி, அதற்கு பல உதாரணங்களையும் எடுத்துக்கூறி புரிய வைக்கின்றனர்.

நான்காவதாக, தன்னம்பிக்கை என்பது திமிராகாது என்று சொல்லும் ஆசிரியர்கள், பெரும்பாலான அலுவல் பணிகளில் தன்னம்பிக்கை திமிராகக் கருதப்படும் வாய்ப்புள்ளது என்பதைக் கவனிக்குமாறு எச்சரிக்கின்றனர். வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நீங்கள் எப்படி ஒரு திறமையான கன்சல்டன்ட்-ஆக மாறி இந்த நிலைக்கு வந்தீர்கள்? என ஒருவரிடம் ஆசிரியர்கள் கேட்க, அவர் சொன்ன பதில் சுவாரஸ்யம்.

''ஃபேர்வெல் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட நான் பாத்ரூமில் சென்று கைகழுவப் போனேன். பாத்ரூமில் என் உயரதிகாரியைச் சந்தித்தேன். அவர், 'உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். ரொம்ப சீக்கிரமாவே உனக்கும் ஃபேர்வெல் வரப்போகுது’ என்றாராம். ''ஏன்? நான் திறமையாத்தானே வேலை செய்றேன்'' என்றாராம் அவர். 'அதான் பிரச்னை! நீ ரொம்பத் திறமைசாலி. உன்னை யூஸ் பண்ற அளவுக்கு கம்பெனிக்குத் திறமையில்லை’  என்றாராம். அன்று முதல் எந்த வேலைக்குப் போனாலும் தனது திறமையை முழுமையாக கம்பெனி உபயோகிக்கின்றதா என்று பார்ப்பேன்'' என்றவர், ஒவ்வொரு இன்டர்வியூவிலும் தனது பாத்ரூம் திருப்புமுனையை இன்டர்வியூ செய்பவரிடம் ஓப்பனாகச் சொல்லிவிடுவாராம்.

ஐந்தாவதாக, ஒரு பிரச்னையில் சிக்கிக் கொண்டீர்கள் என்றால், உங்களைக் காப்பாற்ற எக்கச்சக்கமான ஆட்கள் தேவையில்லை. உதாரணத்திற்கு, நீங்கள் தவறி ஒரு பள்ளத்தில் விழுந்துவிடுகின்றீர்கள். உங்களைக் காப்பாற்ற பத்துபேர் மேலேயிருந்து கைகொடுத்து தூக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக ஏற்கெனவே பள்ளத்தில் விழுந்து தப்பித்த ஒருவர் உங்கள் அருகே வந்து (பள்ளத்தில் குதித்து) 'ஒண்ணும் பயப்படாதீங்க. நானும் இப்படிச் சிக்கிக்கொண்டுதான் இந்திந்த வழிமுறைகளை உபயோகித்துதான் தப்பித்தேன்’ என்று சொன்னாலே போதுமானது என்கின்றார்கள்.

இறுதியாக, தோல்வியைத்தான் மிகவும் பலமும் எனர்ஜியும் பொருந்திய பெரும் திருப்புமுனை என ஹோவர்ட் கருதுவதாகச் சொல்லும் ஆசிரியர்கள், அதற்கான காரண காரியங்களையும் விளக்கியுள்ளனர். இந்தவகை திருப்புமுனைகளை ஹோவர்ட் எதிரி திருப்புமுனை என்கின்றார்கள். எதிரியை வெல்லவேண்டும் என்ற இயற்கையான மனஉந்துதல் மனிதனிடத்தில் இருப்பதால் இந்தவகை திருப்புமுனைகள் நிறைய எனர்ஜியைத் தரும் என்கின்றார்கள்.

வாழ்க்கை என்ற சமுத்திரத்தில் கரையில் நின்று காலை நனைத்துக்கொண்டும், தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு வாழ நினைக்காமல், அலையோடு மோதி விளையாடி வாழ நினைப்பவர்களுக்கு நிறைய நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் தரப்பட்டிருக்கும் இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism