உண்மைக்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். மூன்றாவது பக்கமும் இருக்கிறது என்கிறார் 'த ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத்’ என்கிற புத்தகத்தை எழுதிய லிசா எர்லி மெக்லியாட். அதென்ன, ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத், அதாவது உண்மையின் மூன்றாவது கோணம்? ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.

ஆபீஸில் ஒரு விடுமுறை நாளில் நீங்களும் உங்கள் நண்பரும் வேலை செய்துவிட்டு களைத்துபோய் டீ குடிக்க அருகில் இருக்கும் கடைக்குப் போகிறீர்கள். ஒரே ஒரு பஜ்ஜி மட்டுமே ட்ரேயில் இருக்கிறது. டீ ஆர்டர் செய்துவிட்டு பஜ்ஜியைச் சாப்பிடலாமா என்று பார்க்கிறீர்கள். இருவருக்குமே நல்ல பசி. நண்பர் எனக்கு என்கிறார். நீங்கள் எனக்கு என்கிறீர்கள். இறுதியில் ஆளுக்குப் பாதியாக சாப்பிடுகிறீர்கள் இல்லையா?

இதுவல்ல ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத். இதற்குப் பெயர் சமரசம் (விட்டுத் தருதல்). அதாவது, பஜ்ஜியில் பாதியை விட்டுத் தருதல். லாபத்தில், சம்பளத்தில், வியாபாரத்தில் விட்டுத் தரும்போது யாராவது ஒருவர் அதிகமாக விட்டுத் தர வாய்ப்புள்ளது. அதிகமாக விட்டுத் தருதல் என்பது நஷ்டம்தானே! இரண்டு பேரும் பசியில் இருக்கும்போது நீங்கள் மதியம் சாப்பிட்டீர்கள். உங்கள் நண்பர் மதியம்கூட வேலை பளுவால் சாப்பிடவில்லை. இதை அறிந்துகொண்டு முழு பஜ்ஜியையும் அவருக்கே தந்துவிட்டால் அதுதான் ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத் என்கிறார் ஆசிரியர்.

இரண்டு பேருக்கு நடுவே இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் இரண்டு பகுதியிலும் நியாயம் (உண்மை) இருக்கும். அந்த நியாயத்தைக் கண்டுணர்ந்து அதற்கேற்ப முடிவை மாற்றி அமைத்தால் அதுதானே சிறப்பான தீர்வாக இருக்கும். அதற்கு உதவுவதுதான் ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத். இதனை சிம்பிளாகப் புரிந்துகொள்ள அடுத்தப் பக்கத்தில் உள்ள படத்தைப் பாருங்கள். எனக்கும் உங்களுக்கும் நடுவே ஒரு பிரச்னை. இதில் எப்படி ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத் எது என்று படத்தின் மூலம் லிசா விளக்குகிறார்.

ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத்தை புரிந்துகொள்வது சுலபம். ஆனால், நடைமுறைப்படுத்தவது கடினம். ஆனால், இதை ஒருவர் முழுமையாகவோ அல்லது பாதி அளவே கற்றுக்கொண்டாலும் அவருடைய வாழ்க்கையின் நடப்பே முழுமையாக மாறிவிடும். ஏனென்றால், ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத்தை கடைப்பிடிக்கும்போது, நீங்கள் உங்களுடைய நியாயங்களை எடை போடவேண்டியிருக்கும். அந்த நிலையில், நீங்கள் ஒரு சுயநலமற்றவராக உங்களில் இருந்து வெளியே வந்து உங்கள் பக்க நியாயங்களை எடை போடுவீர்கள். இப்படி சுயநலமற்றவராக நீங்கள் திகழ முயலும்போது கிடைக்கும் அனுபவம் உங்களை முன்னேற்றப்பாதையில் வேகமாகப் போகவைக்கும் என்கிறார் ஆசிரியர்.

எப்படி இது சாத்தியம் என்கின்றீர்களா? ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத் உங்களுடைய சக்தியை சண்டை போடுவதற்காக செல விடுவதைவிட ஒரு பிரச்னை குறித்த சிறப்பான தீர்வைக் கண்டுபிடிக்க செலவிட உதவும். அப்படி சிறப்பான தீர்வுகளைக் கண்டுபிடிக்க முயலும்போது, உங்கள் முன்னேற்றப் பாதைக்கான வழிகளைக் கண்டுபிடிக்கும் ஞானமும் கிடைக்கும் என்கிறார் லிசா.

இரண்டு நல்லவர்கள் அல்லது ஒரு நல்லவர், ஒரு நல்லவர் அல்லாதவர் என இருவருக்கு இடையே நடக்கும் சண்டையிலும் ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத் என்பதை நடைமுறைப்படுத்தவேண்டும். சண்டை மட்டுமே போடும் மனைவி, தில்லாலங்கடி வேலை செய்யும் பாஸ், மல்லுக்கு நிற்கும் மைத்துனர்கள் என ஏற்கெனவே நாம் அவர்களுடைய குணாதிசயத்தை வைத்து ஒரு ஃபில்டரைப் போட்டுவிட்டு, அவர்கள் சொல்லும் விஷயங்களை எடை போடக்கூடாது என்கிறார் ஆசிரியர்.

அவர்களுடைய குணம் எப்போதுமே நம் கண்முன்னே வந்து நிற்கும் என்பது நிஜம்தான். ஆனாலும், நாம் கண்டறிய முயற்சிப்பது ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத் அல்லவா? அதனால் அவர் களுடைய அடிப்படை குணத்தை மறந்து அவர்கள் பக்கத்தில் இருக்கும் நியாயத்தைக் கண்டறிய முயலவேண்டும் என்கிறார் லிசா.

இரண்டிலொன்று (எய்தர்/ஆர்) என்கிற சிந்தனை முறையே நம்முடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் என்று அடித்துச் சொல்லும் ஆசிரியர், அதற்கான காரணகாரியங் களையும் சொல்கிறார். இரண்டிலொன்று என்ற நிலைப்பாட்டை எடுத்தவுடனேயே எதிராளி இருக்கவே கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துவிடுகிறோம். அப்புறம் நியாயம் என்ற ஒன்று எங்கே இருக்கும்? நம் நியாயம் மட்டுமே நியாயமாகவும் எதிராளி சொல்வது எல்லாமே அநியாயமாகவும் மட்டுமே தெரியும்.

இந்த இரண்டிலொன்று மனப்பான்மை யினால் நமக்கு கிடைக்கும் பரிதாபநிலை என்ன தெரியுமா? நம் பக்கத்தில் இருக்கும் நியாயம் நிஜமானதுதானா என்பதை சரிபார்க்க நாம் மறந்தே போய்விடுவோம். நம் எண்ணம் சரியானதா என்று சரிபார்க்கத் தவறிவிடுகிறோம். அப்படி சரிபார்க்காமல் நம் ஐடியாவைச் செயலாக்க முயலும்போது தோல்விகள் பலவற்றை நாம் சந்திக்க நேரிடும் என்று சொல்கிறார் லிசா. எனவே, இரண்டி லொன்று என்னும் சிந்தனையைக் குறைத்து இரண்டும் சேர்ந்து என்ற சிந்தனையை வளர்க்கப் பழகி அத்துடன் ட்ரையாங்கிள் ஆஃப் ட்ருத் வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் வெற்றி பெறுவது சுலபம் என்கிறார்.

'ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத்’ என்பதே நடைமுறைக்கு சிறந்தது என்று சொல்லும் ஆசிரியர், ஏனென்றால் அதன்மூலம் கிடைக்கும் தீர்வு என்பதை முழுமனதுடன் அருமையாகச் செயல்படுத்த முடியும் என்கிறார். சமரசம் என்பது இருவரையும் சந்தோஷமாக இருக்கவைக்க முயற்சிக்கும். ட்ரூத் ஆஃப் ட்ரையாங்கிள் என்பது சரியான முடிவைத் தரும் வழி. நீங்கள் சரியான (நியாயமான) முடிவில்லாமல் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது சரியான (நியாயமான) முடிவுடன் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதுதான் மேட்டரே என்கிறார் ஆசிரியர்.

அதெல்லாம் சரி, நான் மட்டும் நியாயஸ் தனாக இருந்து என்ன பிரயோஜனம்? என்னைச் சுற்றி இருக்கிறவர்கள் இரண்டிலொன்று முடிவுகளையும், நான் ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத்தின் மூலம் வரும் முடிவுகளையும் எடுத்தால் மாட்டிக்கொள்வேனே! என்றுதானே கேட்கிறீர்கள். ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத்தின் மகிமையைப் புரிந்துகொண்டு இரண்டிலொன்று முடிவுகளை விட்டு அவர்களும் வெளிவர வேண்டுமென்றால், நீங்கள் கடைப்பிடிக்கும் வழியைச் சொல்லிப் பாருங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருமே இந்த முறையில் இருக்கும் நன்மைகளை உணர்ந்து ட்ரையாங்கிள் ஆஃப் ட்ரூத் முறைக்கு படிப்படியாக மாறிவிடுவார்கள் என்று உறுதி கூறி முடிக்கிறார் லிசா.

சரியான முடிவுகளைச் சொல்லி சபாஷ் பெற நினைப்பவர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

- நாணயம் டீம்.