Published:Updated:

உங்கள் உயர்வு உங்கள் கையில் !

உங்கள் உயர்வு உங்கள் கையில் !

உங்கள் உயர்வு உங்கள் கையில் !

உங்கள் உயர்வு உங்கள் கையில் !

Published:Updated:
##~##

டேன் ஷாபெல் எழுதிய இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இது உங்களைப் பதவி உயர்வுக்கான பரீட்சைக்கும் இன்டர்வியூவிற்கும் தயார்ப் படுத்துவது என்று எண்ணிவிடாதீர்கள். இது அடுத்தத் தலைமுறையினர் (ஜெனரேஷன்-ஒய்) பற்றிய புத்தகம்.

உலகத்தை நம்மால் மாற்ற முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையை அபரிமிதமாக மனதில்கொண்டதாக இருக்கிறது ஜென்-ஒய். ஜென்-ஒய்  சிறுபிள்ளையாக இருக்கும்போதிலிருந்தே உடனடி பின்னூட்டத்தைப் (ஃபீட்பேக்) பெற்று தன்னைத் திருத்திக்கொண்டு வந்துள்ளது. இவர்களுக்கெல்லாம் வருடாந்திர ரிவியூவுக்கு பொறுமை இருப்பதில்லை. வாராந்திர அல்லது அன்றாட ரிவியூ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஜென்-ஒய் பற்றிய எதிர்பார்ப்பு அபரிமிதமாக வளர்கிறது என்கிறது ஆய்வுகள். 2012-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ஜென்-ஒய் மக்களில் 40 சதவிகிதம் பேர் இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை புரமோஷன் வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். இதைவிட ஆச்சர்யமான விஷயம், இந்த 40 சதவிகிதத்தில் 9 சதவிகிதத்தினர் மட்டுமே புரமோஷன் என்பது தன்னுடைய வேலை பார்க்கும் திறமையினால் கிடைக்கவேண்டும் என்று சொல்லியுள்ளனர்.

முப்பது வருடம் வேலை பார்க்கிற மாதிரி ஒருவேலை வேண்டும் என்று நினைத்ததெல்லாம் ஒரு காலம். இந்த முப்பது வருடத்தில் ஏழு வேலைகள் மாறிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுதான் வேலைக்கு வருகிறார்களாம் ஜென்-ஒய் மக்கள்.

ஆனால், உங்களுடைய தனித்திறமை என்னவென்று அறிந்துகொண்டு அந்தத் திறமையை வளர்த்தால் மட்டுமே வேலையில் முன்னேற்றம் சாத்தியம் என்பதைத்தான் பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. இந்த சிம்பிளான உண்மையை ஜென்-ஒய் புரிந்துகொள்ள மறுக்கிறது என்பதுதான் வருத்தமான உண்மை என்கிறது ஆய்வுகள்.

அதிவேகத்தில் மாறிவரும் டெக்னாலஜி நிறைந்த மேஜிக் உலகில் இன்றையத் திறமை நாளைக்கு உதவாததாகி விடும். எனவே, எந்தத் திறமை உங்களை இந்த டெக்னாலஜி சுனாமியைத் தாண்டி நிலைத்து நிற்கச் செய்யும் என்பதைக் கண்டறிய வேண்டும்.  

உங்கள் உயர்வு உங்கள் கையில் !

உங்கள் பலம் எது?, எது எந்த டெக்னாலஜி மாறுதல்களையும் தாண்டி நிற்கும்?, மெஷின்களால் ஈடுகட்ட முடியாத திறமைகள் என்னென்ன?, தந்திர (ஸ்ராடஜிக்) யோசனைகளா?, அஞ்சாது போட்டியில் இறங்கி போட்டியிடும் மனப்பாங்கா?, அடுத்தவர் மனப்பாங்கை இலகுவாகப் புரிந்துகொள்ளும் (எம்பதி) இயல்பா?, மனிதர்களை சுலபமாக வசப்படுத்தி ஒன்றுபடுத்திச் செயலாற்றவைக்கும் குணமா? இவை எல்லாவற்றையும் எடை போட்டு அறிந்து அவற்றை நிர்வாகத்திற்குப் புரியவைத்து பலன் பெறுவது எப்படி என்பதைத்தான் இந்தப் புத்தகம் சொல்கிறது.

வேலை என்று ஒன்று கிடைத்துவிட்டால் போதுமானது என்றிருந்ததெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு வேலை கிடைப்பதற்கு படும்பாட்டைக்காட்டிலும் அந்த வேலையில் நிலைத்திருக்க அதிகப் பாடுபடவேண்டியுள்ளது என்கிறார் ஆசிரியர். நீங்கள் தொடர்ந்து செய்ததையே செய்துகொண்டு வேலையில் நிலைத்திருக்கவேண்டும் என்று கனவு கண்டு அது நனவாகவும் மாறினால் நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனி உங்கள் அப்பாவின் கம்பெனியாக மட்டுமே இருக்கமுடியும் என்று நெத்தியடியாக அடிக்கிறார் ஆசிரியர்.

இன்றையச் சூழ்நிலையில் புதிது புதிதாக உருவாகும் வேலை வாய்ப்புகள் நீங்கள் ஏற்கெனவே கொண்டிருக்கும் திறமையைவிட கிட்டத்தட்ட 25 சதவிகிதம் வரை அதிக திறமை தேவைப்படுபவனவாக இருக்கிறது என்கிறார் ஆசிரியர். இந்தச் சூழலில் மனிதர்கள் நடுவே செயலாற்றுவதில் இருக்கும் சிறப்பான பல திறமைகளே வெகுவாக மதிக்கப்படுகிறது என்று சொல்லும் ஆசிரியர், ஏனென்றால் இந்த திறமையைக் கற்றுக்கொள்வது மிக மிகச் சிரமமான விஷயம் என்றும் எச்சரிக்கிறார். நிறுவனங்கள் எப்போதும் தேடுவதெல்லாம் லீடர்களையும், டீம் வொர்க்கிற்கு சிறந்தவர்களையும், சொல்லித்தரும் கலையைக் கற்றவர்களையும்தான் என்கிறார்.

என்ன பதவி என்பது முக்கியமில்லை. பதவியெல்லாம் தனிமனித ஈகோவை மட்டுமே பூர்த்தி செய்யும். உங்களுக்கு என்ன தெரியும், எந்தெந்த புராஜெக்ட்டில் எப்படி சிறப்பாகச் செயல்பட்டீர்கள், எவ்வளவு தூரம் உங்களை மற்றவர்கள் வேலை ரீதியாக நம்புவார்கள், உங்களுக்கு யாரையெல்லாம் தெரியும், யாருக்கு உங்களைப் பற்றித் தெரியும் என்பதுதான் உங்களுடைய வேலை ரீதியான முன்னேற்றத்தை நிர்ணயம் செய்கிறது என்று ஜென்-ஒய் மக்களுக்கு தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர்.

நான்குவிதமான ஜெனரேஷன்கள் இன்றைய பணியிடத்தில் வேலை செய்கிறது என்று சொல்லும் ஆசிரியர், அவற்றை ஜென்-இசட் (இன்டர்ன்ஸ்), ஜென்-ஒய் (சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள்) ஜென்-எக்ஸ் (மேனேஜர்கள்) மற்றும் எக்ஸிக்யூட்டிவ்ஸ் என்று தரம் பிரிக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிறந்து வெவ்வேறு கலாசார சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே வெவ்வேறுவிதமான தொடர்பு எல்லைகளைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அனைவரின் மத்தியிலும் வெற்றிகரமாகச் செயல்படக் கற்றுக்கொள்வது மிகவும் சிரமம் என்று சொல்கிறார் ஆசிரியர்.

உங்களுடைய பாஸ் தோல்விகரமான ஆளாக இருந்தால் இன்னும் அது விசேஷத்தைத் தரும் என்று எச்சரிக்கிறார். ஏனென்றால் தோல்வியைத் தழுவிய பாஸ் உங்களை வடிகாலாக உபயோகித்துவிடுவார். அதையும் தாண்டி நீங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்கிறார்.

உங்கள் உயர்வு உங்கள் கையில் !

இன்ஃபர்மேஷன் பொருளாதாரத்தில் இருந்து சோஷியல் பொருளாதாரத்திற்கு நாம் மாறிவிட்டோம். முன்பெல்லாம் விஷயம் தெரிந்தவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்று அப்படியில்லை. கூகுளில் அடுத்த ஐந்து செகண்டில் எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படியிருக்கும்பட்சத்தில் தகவல்கள் மதிக்கப்படுவதில்லை. மற்றவர்களோடு எப்படி சுமுகமாகச் சேர்ந்து வேலைகளை முடிக்கிறீர்கள் என்ற திறமையே மதிக்கப்படுகிறது. மாறும் டெக்னாலஜி, கஸ்டமர் விருப்பங்கள், தகவல்கள், மாறிக்கொண்டேயிருக்கும் நிர்வாக அமைப்புகள் எல்லாம் கம்பெனிக்குள் நீங்கள் யாரென்று தெரியாதுபோனால் உங்களை கம்பெனி மறந்தே போய்விட வாய்ப்புள்ளது என்கிறார்.

2025-ல் உலக தொழிலாளர்களில் 75 சதவிகிதம் பேர் ஜென்-ஒய் ஆசாமிகளாக இருப்பார்கள். எனவே, நீங்கள் இப்போதுதான் கேரியரை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றாலும் கூட நீங்கள் பெரிய உயர்பதவிக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார் ஆசிரியர்.

வேலைக்குப் போக நினைப்பவர்களுக்கு தொழிலதிபர்களின் குணம் தேவையில்லை என்பதெல்லாம் பழங்கதை. உங்களுடைய கம்பெனியை உங்களுடைய வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்ட் போல் நினைத்துக்கொண்டு நீங்கள் செயலாற்ற வேண்டும். நீங்கள் வெற்றி பெறவேண்டுமென்றால் உங்கள் ஐடியாக்களை கம்பெனிக்கு விற்கவேண்டும்; கம்பெனியின் பிரச்னைக்கு புத்திசாலித்தனமான வழிமுறைகளை நீங்கள் சொல்லித் தரவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

எத்தனை மணி நேரம் வேலை பார்த்தீர்கள் என்பதைவிட என்னென்ன காரியங்களைச் சாதித்தீர்கள் என்பதுதான் முக்கியம் என்று சொல்லும் ஆசிரியர், உங்களுடைய கேரியர் உங்கள் கையில் இருக்கின்றதே தவிர, உங்களுடைய கம்பெனியின் கையில் இல்லை என்று அடித்துச் சொல்கிறார். பல்வேறு கேரியர் கனவுகளோடு முதல் வேலைக்குச் செல்லக் காத்திருப்பவர்களும், சென்றிருப்பவர்களும் முதல் புரமோஷனுக்கு காத்திருப்பவர்களும் நிச்சயமாய்ப் படிக்கவேண்டிய புத்தகம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)                

பெருகும் மொபைல் இன்டர்நெட்!

இந்தியாவில் மொத்தம் 55.48 கோடி மொபைல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 14.32 கோடி மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.  மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகிறவர்களில் 29.8 கோடி பேர் அதாவது, 54 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசித்து வருகிறார்கள். 25.6 சதவிகிதத்தினர் நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்களாம். இனி மொபைல் போன் எல்லாருக்கும் அடிப்படை ஆதாரம்!

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism