நம்பிக்கை என்ற அசைக்க முடியாத அஸ்திவாரத்தினால் மட்டுமே விற்பனையும் வியாபாரங்களும் நடக்கிறது என்பதை 'த பிசினஸ் ஆஃப் பிலிஃப்’ என்கிற புத்தகத்தின் மூலம் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் டாம் அசக்கெர்.

நம்பிக்கையின் முக்கியத் துவத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் ஆசிரியர், ஷெர்லக் ஹோம்ஸ் கேரக்டரை உருவாக்கிய டோயல் பற்றிச் சொல்லி ஆரம்பிக் கிறார். 'உலகிலேயே மிகவும் கிரிட்டிக்கலாகவும் அளவுக்கு அதிகமான லாஜிக்குடனும் யோசித்து துப்பறியக்கூடிய ஒரு கேரக்டரான ஷெர்லக் ஹோம்ஸை உருவாக்கிய டோயல், கடைசி காலத்தில் லாஜிக் ஏதுமில்லாத மூடநம்பிக்கைக்குள் விழுந்து திளைத்ததைச் சொல்கிறார். டோயலுடைய மனைவி காச நோயினாலும், மச்சினன், இரண்டு தம்பி மகன்கள், பல நண்பர்கள் போரில் இறந்துவிட, கடுமையான மனஅழுத்தத்தினால் பாதிப் படைந்தார். இறந்தவர்கள் ஆவியாக நம்முடன் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் அவருக்குள் வலுவாகப் பதியவே, ஆவிகள் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இறங்கி னார். ஆவிகள் குறித்த ஈடுபாடு அவருக்கு அதிகரிக்க அதிகரிக்க, அவருடைய நல்ல பல நண்பர்கள் அவரைவிட்டு விலக ஆரம்பித்தனர். லாஜிக்கிற்கு பெயர்போன கதாபாத்திரத்தை உருவாக்கிய ஆசிரியரே கடைசியில் லாஜிக் இல்லாத விஷயத்தில் சிக்கினார் பார்த்தீர்களா? அதுதான் நம்பிக்கையின் எஃபெக்ட்’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

உங்கள் டூத் பேஸ்ட்டின் பிராண்ட் என்ன?, நீங்கள் காபி குடிப்பீர்களா? அல்லது டீ குடிப்பீர்களா?, எந்த கம்பெனியின் காபி பொடி வாங்குகிறீர்கள்?, வைட்டமின் டேப்லெட் எதுவும் சாப்பிடுகிறீர்களா?, நியூஸ் பார்ப்பீர்களா? ஆமெனில் எந்த சேனல் நியூஸ்?, வாக்கிங் போகிறீர்களா?, என்ன பிராண்ட் ஷூ உங்களுடையது?, எந்த எஃப்.எம். ரேடியோ கேட்பீர்கள்? - இவற்றில் ஒவ்வொன்றையும் நீங்கள் முதலில் எப்படித் தேர்வு செய்தீர்கள்? யாரோ சொன்னதையோ, ஒருவிதமான தைரியத்தில் (கட்ஃபீலிங் -gut feeling) தேர்வு செய்திருப்பீர்கள். யாரோ சொல்லி இவற்றைத் தேர்வு செய்திருந்தால் அது அவர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக உங்கள் தேர்வு அமைந்திருக்கும். தைரியத்தில் செய்திருந்தால் அது உங்களுடைய தேர்வு செய்யும் திறனின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையின் காரணமாக அமைந்திருக்கும். வெளிப்பார்வைக்கு இது ரொம்பவுமே சுலபமாகத் தெரிந்தாலும், இந்த நம்பிக்கையின் எஃபெக்ட்டை புரிந்துகொள்வது சிரமம்’ என்கிறார் ஆசிரியர்.

இந்த நம்பிக்கை எப்படி உருவாகிறது? ஓர் அந்திப்பொழுதில் ஒரு காட்டுக்குள் இருக்கிறீர்கள். ஒரு பிரௌன் கலரில் நீண்ட வழவழப்பான ஒரு ஜந்து உங்கள் காலை நோக்கி வருகிறது. அது என்ன என்று குனிந்து கூர்ந்து பார்ப்பீர்களா? மாட்டீர்கள். அய்யோ பாம்பு என பின்னங்கால் பிடரியில்பட ஓடுவீர்கள்தானே!

இதுதான் மூளையின் சூட்சுமம். பேட்டர்ன் களை வைத்துக்கொண்டே முடிவுகளை எடுக்கும் திறமை மூளையிடம் அதிகம். அந்தக் காலத்தில் எதிராளியின் முகத்தை வைத்து அவருடைய மனநிலையைக் கண்டுபிடித்துக்கொண்டிருந்த மூளை இன்றைக்கு இ-மெயிலில் வரும் பதிலில் உள்ள வார்த்தைகளை வைத்தும் அந்தப் பதிலை அனுப்புவதற்கு எதிராளி எடுத்துக்கொண்ட நேரத்தை வைத்தும் எதிராளி எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை நம்முடைய மூளை கணிக்க முயன்று பலதடவை வெற்றியும் பெறுகிறது.

நம்பிக்கை என்பது ஒருவிதமான உணர்வு என்று அடித்துச் சொல்லும் ஆசிரியர், அதற்கு பல உதாரணங்களையும் ஆய்வு முடிவுகளையும் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார். மிகவும் சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை கேட்டு அசத்துகிறார் ஆசிரியர். உலகம் உருண்டையா? பூமி (தரை/மண்/கல் சேர்ந்த) உருண்டையா? என்பதுதான் அது. சிறுவயதில் இருந்தே உலகம் உருண்டை என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட நாம் வெளிப்புறத்தில் தரையும், நீரும் (கடல்) சேர்ந்ததாகிய இந்த உலகம் உருண்டை என்று மனதில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளோம். பூமிதான் உருண்டை. பூமியின் மீதுதான் தண்ணீர் (கடல்) இருக்கிறது. இதுபோன்ற பல நம்பிக்கைகள் மறுபடி மறுபடி நாம் ஒரு விஷயம் குறித்து கேட்பதினாலேயே வருகிறது என்று சொல்கிறார் ஆசிரியர்.

ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்குகிறீர்கள். டாய்லெட்டுக்குள் நுழைகிறீர்கள். ஒரு பேப்பர் ரோல் ஆரம்பம் முக்கோண வடிவத்தில் மடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறீர்கள். இது டாய்லெட் பேப்பர் என்று மூளை முடிவு செய்கிறது இல்லையா? இதுவும் ஒரு பேட்டர்னை ஃபாலோ செய்து எடுக்கப்படும் முடிவுதான் என்கிறார் ஆசிரியர்.

கண்முன்னே தெரியும் புள்ளிகளை வைத்துக் கோலம் போடும் மூளை நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதும் இப்படித்தான் என்கிறார் ஆசிரியர். புள்ளிக்கோலம் எல்லாம் எங்களுக்குப் புரிகிறது. புதிதுபுதிதாக மனிதர்களையும் சூழல்களையும் சந்திக்கும் எங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமாச்சே என்பீர்கள். ஆசிரியரோ, புதிய மனிதர்களும், புதிய சவால்களும் புதியதாகத் தோன்றும் புள்ளிகள், ஏற்கெனவே புள்ளிகளை இணைத்து பழக்கப் படுத்தப்பட்ட மூளை புதிய புள்ளி களை எப்படி இணைப்பது என்பதைத் தானாகவே புரிந்துகொள்ளும் என்று அடித்துச் சொல்கிறார்.

நீங்கள் மனதளவில் நம்பாத விஷயத்தை மூளையால் லாஜிக்கலாக சரியாகச் செய்ய முடியும் என்கிறபோதிலும், அதைச் செய்ய முடியாது என்றே நினைக்கும் என்று வாதிடும் ஆசிரியர், அதற்கான உதாரணங்கள் பலவற்றையும் தந்துள்ளார். உள்ளூரில் செய்த சாக்லேட்டை சுவிட்சர்லாந்து சாக்லேட் பெட்டியில் போட்டுத் தந்தால் சூப்பராயிருக்கிறது என்றும், நிஜமான சுவிட்சர்லாந்து சாக்லேட்டை சீனா சாக்லேட் பெட்டியில் போட்டுத் தந்தால் சுவை ஒன்றும் பிரமாதமில்லை என்றும் நீங்கள் சொல்வது இந்த நம்பிக்கை பிசினஸால்தான் என்கிறார் ஆசிரியர்.

ஆசைதான் நம்பிக்கையை வளர்க்கிறது என்று சொல்லும் ஆசிரியர், பெரிய கிரிக்கெட் வீரனாக, மியூசிக் டைரக்டராக, கதாசிரியராக வரவேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர்களுக்கு அந்த நிலையை அடைய எத்தனை போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற டேட்டா முழுமையாக மறந்துபோய் அந்த இலக்கினை எளிதில் அடைந்துவிடுவோம் என்ற எண்ணம் வருவதும் இதனால்தான் என்கிறார்.

இறுதியாக, உங்கள் நம்பிக்கையான எண்ணங்கள் மூலம் நீங்கள் அடுத்தவர்களை பாதிப்படையச் செய்கிறீர்களா? அல்லது நீங்கள் பாதிப்படையப் போகிறீர்களா என்பதில்தான் வாழ்வின் வெற்றியே இருக்கிறது என்று சொல்கிறார் ஆசிரியர். 'வேலையோ தொழிலோ நீங்கள் முடியும் என்று நம்பினீர்கள் என்றால் மற்றவர் களை நம்பவைப்பீர்கள். அதாவது, உங்களுடைய நம்பிக்கையினால் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் உங்களுக்கு பாசிட்டிவ்வான சப்போர்ட்டைத் தருவார்கள். நீங்கள் முடியாது என்று நம்பினீர்கள் எனில் நீங்கள் மட்டுமே அதை நம்புவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு மேட்டரே இல்லை. இப்படி உங்களுடைய நெகட்டிவ் நம்பிக்கைகள் உங்கள் மனதிற் குள்ளேயே இருப்பதால் உங்கள் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது’ என்று சொல்கிறார் ஆசிரியர்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது!

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)