Published:Updated:

நாம் ஏன் தவறு செய்கிறோம்?

நாணயம் லைப்ரரி

நாம் எல்லோரும் தசாவதானிகள் இல்லை. ஒருநேரத்தில் ஒருவேலையை ஒழுங்காய்ச் செய்வதே பெரிய விஷயம்தான்!

புத்தகத்தின் பெயர்: வொய் வி மேக் மிஸ்டேக்ஸ்! (Why We Make Mistakes)

ஆசிரியர்: ஜோசப் டி ஹாலினன் (Joseph T. Hallinan)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பதிப்பாளர்: Crown Publishing Group

##~##

ன்னதான் கவனமாக இருந்தாலும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவறுகள் நடப்பது என்பது சகஜமாக இருக்கின்றது. கொஞ்சம் குறைவு கூடுதல்தானே தவிர அனைவருமே தவறுகள் செய்பவர்கள்தான். தவறு என்றவுடன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடாதீர்கள். நீங்கள் வாங்காமல் விட்ட வீட்டுமனை, நீங்கள் வாங்கி யவுடன் இறங்கிய பங்கு, நல்ல சம்பளம் கிடைக்கின்றதே என நினைத்து நீங்கள் தாவிய உதவாக்கரை வேலை என நாம் செய்யும் தவறுகளைப் பட்டியலிடுகிறார் 'நாம் ஏன் தவறு செய்கின்றோம்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஜோசப் டி ஹாலினன். தவறு செய்யாத மனிதனே இல்லை எனும் ஆசிரியர் 'டு எர் இஸ் ஹியூமன் இல்லையா?’ என்று கேட்கின்றார். ரோடுகளில் நடக்கும் விபத்துகளில் 90 சதவிகிதமும், விமான விபத்துகளில் 70 சதவிகிதமும், தொழிற்சாலை விபத்துகளில் 90 சதவிகிதமும் மனிதத் தவறுகளினாலேயே நடக்கின்றது.

இதில் பல இடங்களில் தவறு நம்முடையதில்லை என்று சொல்லும் ஆசிரியர், தவறு நடப்பதற்கான விஷயங்களை நாம் சரியென்று மனதில் உள்வாங்கிக்கொள்வதானாலேயே தவறுகள் நடக்கின்றது என்கின்றார். ஒரு விஷயத்தைப் பற்றி முதலில் நமக்கு வரும் ஒப்பீனியனை வைத்தே பெரும்பாலான நேரங்களில் நாம் அந்த விஷயத்தைப் பற்றி கணிக்கின்றோம். பிற்காலத்தில் நம்முடைய ஒப்பீனியனை மாற்றிக்கொள்வதேயில்லை.  

ஒரே மனிதனை இரண்டு குழுவினரிடம் தனித்தனியே அறிமுகப்படுத்தினார்கள். முதல் குழுவிடம் இவர் ஒரு ட்ரக் டிரைவர் என்றார்களாம். குழுவினரோ ரொம்ப குண்டாக இருக்கிறாரே என்றனராம். மற்றொரு குழுவினரிடம் இவர் ஒரு டான்ஸர் என்றார்களாம். டான்ஸருக்குத் தேவையான எடையைவிட கொஞ்சம் வெயிட் குறைவா இருக்கிறதைப் போல் இருக்கிறதே என்றார்களாம் இரண்டாவது குழுவினர். டிரைவர் என்றால் ஒல்லிப்பிச்சானாகவும், டான்ஸர் என்றால் திடகாத்திரமாகவும் இருக்கவேண்டும் என்ற நினைப்புதான் இப்படி சொல்ல வைக்கின்றது என்கின்றார் ஆசிரியர்.

நாம் ஏன் தவறு செய்கிறோம்?
நாம் ஏன் தவறு செய்கிறோம்?

நம் மூளை ஏற்கெனவே இதுபோன்ற தவறான தகவல்களால் நிரப்பப்பட்டிருப்பதுதான் நம்முடைய ஜட்ஜ்மென்ட் இப்படி குத்துமதிப்பாய் இருப்பதற்கு காரணம் என்கின்றார் ஆசிரியர்.

ஏன் இப்படி நம்முடைய ஜட்ஜ்மென்ட்கள் தப்பாகப் போகின்றது என்பதற்கு உலகத்தின் சிஸ்டம் அப்படி இருக்கின்றது என்கின்றார். உதாரணத்துக்கு பாஸ்வேர்டு மற்றும் பின் நம்பர்களைக் காண்பிக்கின்றார். பாஸ்வேர்டு குறித்த ஒரு டெஸ்டில் இன்றைக்கு கொடுத்த பாஸ்வேர்டை ஒரே வாரத்தில் முப்பது சதவிகிதம் பேர் மறந்துபோனார்களாம். மூன்று மாதம் கழித்து அறுபத்தி ஐந்து சதவிகிதம் பேர் மறந்துபோனார்களாம். இப்படி பல குளறுபடிகள் ஆவதற்கு காரணம் நாம் நம்மால் முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் மல்டி டாஸ்கிங் எபிலிட்டி என்கின்றார் ஆசிரியர்.

நாம் எல்லோரும் தசாவதானிகள் இல்லை. ஒருநேரத்தில் ஒருவேலையை ஒழுங்காய்ச் செய்வதே பெரியதாய் இருக்கும் நம்மில் பலருக்கும். ஆனால், நம்முடைய வாழ்க்கை மற்றும் வேலைச் சூழல்களோ நம்மை கட்டாய மல்டி டாஸ்கராக்கத் துடிக்கும்.  இதற்கு உதாரணமாக கார்களைக் காட்டுகின்றார் ஆசிரியர். இன்றைக்கு வரும் புதிய கார்களில் எல்லாவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் விபத்துகள் நடக்கின்றது. ஏனென்றால், அத்தனை அம்சங்களையும் ஓட்டுநர் அவருடைய இயல்பைத்தாண்டி கவனத்தில் கொள்ளவேண்டியிருப்பதால் சர்வசாதாரணமாக ஜட்ஜ்மென்ட் தப்பாகி விபத்துகள் நடக்கின்றது என்கின்றார் ஆசிரியர்.

இதற்கெல்லாம் காரணமாக ஆசிரியர் சொல்லும் மற்றொரு விஷயம் நாம் நம்முடைய பழைய தவறுகளில் இருந்து ஒருநாளும் பாடங்களைக் கற்றுக்கொள்வதேயில்லை.  

ஆண் பெண் இருபாலருக்கும் உள்ள வேற்றுமையைச் சொல்லும் ஆசிரியர், கூட்டத்தில் பர்ஸை பறிகொடுத்த ஒரு பெண்ணைப் பார்க்கும்போது பெண்கள் அவர் எந்த மாதிரி பர்ஸ் வைத்திருந்தாள் என்பதையும், ஆண்கள் திருடனின் அடையாளத்தையுமே உற்று நோக்குவார்கள் என்கின்றார். ஒரு வங்கியில் நுழைந்தால் வலதுபுறத்தில் இருக்கும் கவுன்டர்களில்தான் கூட்டம் அதிகமாய் இருக்கும். பழக்கம் அப்படி.  அடுத்தமுறை இப்படிப்பட்ட இடங்களினுள் நுழையும்போது முதலில் இடதுபுறமுள்ள கவுன்டரில் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்று பார்த்துபழகுங்கள் என்கின்றார் ஆசிரியர்.

இன்னுமொரு ஆய்வில் ஒரு இன்ட்ரெஸ்டிங் ஆன சினிமாவை ஒரு மாணவர் குழுவுக்கு போட்டுக் காண்பித்தார்களாம். அந்த சினிமாவில் முக்கிய வேடத்தில் இருந்தவர் ஒரு கட்டத்தில் வேறு நபராம். இதை மூன்றில் ஒருபங்கு மாணவர்களே உடனடியாக கண்டுபிடித்தார்களாம். மனசு ஒன்றைவிட்டு ஒன்றுக்குத் தாவும் குணமுள்ளது. அதாவது, ஒன்றைத் தொடர்ந்து செய்யும் வலிமை இல்லாதது. மனசு மாறுவதற்குள் எதையாவது சாதித்துக்கொண்டால்தான் உண்டு. வியாபாரியானாலும் சரி, சினிமாக்காரர் களானாலும் சரி என்று சொல்லும் ஆசிரியர் அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

குடிப்பழக்கம் இருக்கும் நபர் களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், விலை உயர்ந்த ஓயின் ப்ராண்டின் பாட்டிலில் தரப்பட்ட சாதாரண ஒயின் நல்ல போதை தந்ததா கவும், விலை குறைந்த ப்ராண்டின் பாட்டிலில் தரப்பட்ட விலை உயர்ந்த ஒயின் நல்ல போதை தரவில்லை என்றும் சொன்னதாகச் சொல்லும் ஆசிரியர், மூளையின் இயல்பை உணர்த்துகின்றார். மனித மூளை ஒருதலைப்பட்சமாய் முடிவெடுக்கும் இயல்புடையது. இதனை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், எத்தனைமுறை ஸ்டாட்டிஸ்டிக்கலாக நிரூபித்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். நாங்களெல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பதில் சிறந்தவர்கள் என்று பீற்றிக்கொண்டே திரிவோம் என்கின்றார் ஆசிரியர்.

கவனத்தில் குறைவு ஏற்பட்டால் அதை சரிசெய்ய கொஞ்ச நேரமாகும். ஆபீஸில் சீரியஸாய் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது வரும் ஒரு வெட்டி போன் காலில் இருந்து மீள எவ்வளவு நேரமாகின்றது என்று பாருங்கள், குறைந்தபட்சம் பதினைந்து நிமிடமாவது ஆகும் என்கின்றார் ஆசிரியர். இதையும் தவிர நமக்கு ரொம்பவுமே பரிச்சயமான விஷயங்களைத்தான் நாம் அடிக்கடி கவனிக்கத் தவறுவோம்.

இதனாலேயே தவறுகள் நடக்கும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லும் ஆசிரியர், தவறுகள் நிகழ்வதற்கான  பல காரண காரியங்களை விளக்கமாக இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார்.

தவறு செய்யாமல் இருக்கும்  நபர்கள் யாராவது உண்டா என்ன? எக்கச்சக்கமான உதாரணங்களுடன் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவருமே படிக்கலாம்!

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு

கிடைக்கக்கூடும்)

2013 டிசம்பரில் அந்நிய முதலீடு: புது சாதனை!

அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள்) இந்திய பங்குச் சந்தையில் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் அதிக அளவில் முதலீடு செய்யாது. கடந்த 10 வருடத்தில் இரண்டாவது ஆண்டாக 2013 டிசம்பரில் அதிக முதலீட்டை எஃப்.ஐ.ஐ-க்கள் மேற்கொண்டிருக்கின்றன. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு எஃப்.ஐ.ஐ-க்கள் 2012-ம் ஆண்டு டிசம்பரில் 24,309.9 கோடி ரூபாயை நிகர முதலீடாக செய்திருந்தன. இரண்டாவது ஆண்டாக  2013 டிசம்பரில் சுமார் ரூ.16,085 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.