Published:Updated:

ஒன்றே செய்; நன்றே செய்!

ஒன்றே செய்; நன்றே செய்!

ஒன்றே செய்; நன்றே செய்!

ஒன்றே செய்; நன்றே செய்!

Published:Updated:
##~##

மிகப் பெரிய வெற்றிகளுக்குப் பின்னால், மிகச் சாதாரணமான ஓர் உண்மை இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறது 'தி ஒன் திங்க்’ என்கிற இந்தப் புத்தகம்.

ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், இக்கட்டான ஒரு பிசினஸ் சூழ்நிலையில், எதுவுமே ஒரு இன்ச்கூட நகராமல் இருக்கும் சூழலில் ஒருநாள் ஓர் ஆலோசகரிடம் தனது நிறுவனத்தின் நிலைபற்றிப் பேசிக்கொண்டிருந்தாராம். தற்போது தான் இருக்கும் நிலையிலிருந்து தாங்கள் முற்றிலுமாகவே மாறவேண்டும் என்று ஆசிரியர் சொல்ல, ஆலோசகரோ எக்கச்சக்கமான கேள்விகளைக் கேட்டாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னொருநாள் ஆசிரியரிடம், நீங்கள் இன்றிருக்கும் நிலையை மாற்றிக்கொள்ள, 14 புதிய சரியான நபர்களைக் கண்டுபிடித்து உங்கள் நிறுவனத்துக்குக் கொண்டுவரவேண்டும்  என்றாராம் அந்த ஆலோசகர்.

அட, அவ்வளவுதானா என்று நினைத்த ஆசிரியர், அந்த நிமிடமே தன்னுடைய சிஇஓ பதவியைத் துறந்து, அந்த 14 பேரைத் தேடும் பணியில் இறங்கினாராம். கொஞ்சம் கொஞ்சமாகச் சரியானவர்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்த, நிலைமை சரியாகி ஆண்டுக்கு 40 சதவிகித வளர்ச்சி என்ற நிலை உருவானதாம். ஒரு பிராந்திய கம்பெனி என்ற நிலையிலிருந்து சர்வதேச கம்பெனியாக உருமாறியதாம். வெற்றிகள் பல வெற்றிகளை ஈன்றெடுக்க ஆரம்பிக்கும்போதுதான் ஆசிரியருக்கு வெற்றிக்குத் தேவை ஒரேவிஷயம்தான் என்ற பேருண்மை புரிய ஆரம்பித்ததாம்.

ஒன்றே செய்; நன்றே செய்!

ஆரம்பத்தில் புதிதாக 14 பேரை வேலைக்குச் சேர்த்துப் பயிற்சி தந்தபோது, வாரத்துக்கு மூன்று முக்கிய வேலைகளை அவர்களுக்குத் தந்தாராம் ஆசிரியர். சிலர் அவற்றை முடிக்க முடியாமல் தடுமாற, இரண்டு வேலைகளைக் கொடுத்தாராம். அதையும் சிலர் முடிக்க முடியாமல் தடுமாறினார்களாம்.

இறுதியில், நீங்கள் இந்த வாரத்தில் செய்யப்போகும் ஒரேயரு உருப்படியான வேலை எது என்று ஆசிரியர் கேட்டு, அந்த ஒருவேலையை மட்டும் நீங்கள் செய்தால், அதைச் செய்வதன் மூலம் மற்ற வேலைகள் எல்லாம் தேவையற்றதாகிவிட வேண்டும் என்று சொன்னாராம்.

ஒரேயரு உருப்படியான காரியம் செய்யுங்கள் என்று சொன்னவுடன் அதை அனைவருமே சரியாக செய்து முடித்திருந்தார்களாம். மூன்று வேலை கொடுத்தால் சிலரால் ஒன்றையும் முடிக்க முடிவதில்லை. ஆனால், ஒன்றைக் கொடுத்தால் முடித்துவிடுகிறார்களே என்று நினைத்த ஆசிரியர், அவருடைய வாழ்க்கையைச் சற்றுத் திரும்பிப்பார்க்க, அவருமே எப்போதெல்லாம் முடிக்கவேண்டிய

ஒன்றே செய்; நன்றே செய்!

வேலை ஒன்றாக இருந்ததோ, அப்போதெல்லாம் விஸ்வரூப வெற்றியைப் பெற்றும், முடிக்கவேண்டிய வேலைகள் பல இருந்தபோது வெற்றியின் அளவு குறைவாக இருந்ததையும் உணர்ந்தாராம். மனிதனின் இந்தச் செயல்பாட்டு ரகசியம் பளிச்சென ஒரு லைட் எரிந்ததைப்போல் எனக்கு அப்போதுதான் புரிந்தது என்று சொல்கிறார் ஆசிரியர்.

எல்லோருக்கும் 24 மணிநேரம் சமமாக இருக்க, சிலரால் மட்டுமே நிறைய வேலையும், நிறையச் சாதனையும், நிறையச் சம்பாத்தியமும், நிறையச் சேமிப்பும் செய்ய முடிகிறது என்ற கேள்வியை நம்முன்னே வைக்கிறார் ஆசிரியர்.

நேரம் ஒரு கரன்சி என்றால் ஒரு சிலரால் மட்டும் எப்படி ஒரே அளவு கரன்சியைக் கொடுத்து நிறையப் பலன்களைப் பெறமுடிகிறது? அவர்களுடைய ஃபோகஸ் மிகவும் குறுகியதாகி ஒரே விஷயத்தையே முற்றிலுமாகக் கவனத்தில் கொள்கிறது என்கிறார் ஆசிரியர். அதிரடி வெற்றிகள் வரவேண்டுமென்றால் உங்களுடைய ஃபோகஸை மிகவும் குறுக்கி ஒரே விஷயத்தில் வைக்கவேண்டும். அப்போதுதான் விஸ்வரூப வெற்றி வரும் என்கிறார் ஆசிரியர்.

பல விஷயங்களை இழுத்துப்போட்டு செய்வதன்மூலம் பெரிய வெற்றி கிடைக்காது. இப்படிச் செயல்படுபவர்கள் வெற்றியின் அளவுகள் குறைந்து கிடைக்கும்போது நாள்பட நாள்பட இதுதான் நம்மால் சாத்தியம் / நமக்கு சாசுவதம் என்று நினைத்துத் தங்கள் எதிர்பார்ப்புகளைச் சுருக்கிக்கொள்வார்கள் என்கிறார் ஆசிரியர்.

ஒரே விஷயமே அதிக முன்னேற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா? உங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தைப் பாருங்கள். பெரும் வெற்றி பெற்ற நிறுவனங்கள் எப்போது அதிவேகத்தில் வளர்ந்தது என்று பாருங்கள் என்கிறார் ஆசிரியர்.

கேஎஃப்சி ஆரம்பித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றபோது ஒரேயரு மெனுவைத்தான் அந்த நிறுவனம் தந்தது. இன்டெலுக்கு மைக்ரோ பிராஸசர்களே பெரிய லாபத்தைக் கொடுத்தது. ஸ்டார்பக்ஸுக்கு எது பெரிய வருமானத்தையும் வெற்றியையும் தருகிறது? இந்த லிஸ்டை எழுதினால் அது நீண்டுகொண்டேதான்போகும் என்று சொல்லும் ஆசிரியர், ஒரே விஷயத்தை உடும்புப்பிடியாய்ப் பிடித்துச் செயல்படுவது என்பது ஒன்றும் சாதாரணக் காரியமில்லை. ஏனென்றால், நாம் நிறைய விஷயங்களைச் சேர்த்து செய்தே பழகியவர்கள். பெரும்பாலான சமயங்களில் இந்த மற்ற விஷயங்கள் நம்மை முடக்கிப்போட்டும், தவறான பாதைகளில் வழிநடத்தியும், வெற்றியை ஓரங்கட்டியும்விடும் என்கிறார்.

உங்களுடைய வெற்றியை நீங்கள் அடையவிடாமல் தடுக்கும் ஆறு பொய்கள் எனப் பின்வருபனவற்றை ஆசிரியர் சொல்கின்றார்.

1) எல்லா வேலையுமே ஒரே அளவு முக்கியத்துவம் தர நினைப்பது

2) மல்டி டாஸ்கிங்க்

3) கட்டுப்பாட்டுடனான ஒழுங்கான வாழ்க்கை

4) மனதிடம் (வில்பவர்) என்பது முயற்சித்தால் கிடைப்பது

5) சரிசமநிலையுடைய வாழ்க்கை

6) பெரியது என்பது கேடு.

ஒன்றே செய்; நன்றே செய்!

இந்த ஆறு விஷயங்களும் நம்முடைய மூளைக்குள் எப்படியோ புகுந்துகொண்டு எப்போதும் நம்மைத் தவறான பாதையிலேயே எடுத்துச் செல்கின்றது என்கிறார்.

மிக முக்கியமான விஷயத்தை முதலில் செய்வதே மிக முக்கியம் என்கிறார் ஆசிரியர். மல்டி டாஸ்கிங்க் பற்றி நாம் அளவில்லாமல் பேசுகிறோம். அதேசமயம், மிக முக்கியமான வேலையைச் செய்யும்போது, வேறெந்த வேலையையாவது நாம் செய்கிறோமா? ஒரு போனைக்கூட எடுக்க மாட்டேன் என்கிறோமே! மல்டி டாஸ்கிங்க் செய்தால் கவனச் சிதறல் உறுதி. அதனால் தவறுகள் நிகழும். மல்டி டாஸ்கிங்க் செய்யும்போது வரும் வெற்றிக் குறைபாடுகள் பழகிப்போனால் இதுதான் நம்மால் முடிந்த விஷயம் என்ற மனநிலைக்கும் நாம் தள்ளப்பட்டுவிடுவோம் என்கிறார்.

இறுதியாய் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் சொன்ன ஒரு விஷயத்தைச் சொல்கிறார் ஆசிரியர். 'கையில் இருக்கும் வேலையில் முழுக்கவனம் செலுத்துங்கள். சூரியனின் கதிர்கள்கூட ஓர் இடத்தில் குவிக்கப்படும்போதுதான் நெருப்பை உருவாக்குகிறது. ஒரு செயலில் இருந்து அளவுக்கதிகமான பலன் கிடைக்கிறது என்றால் அந்தச் செயலுக்கு அளவுக்கதிகமான நேரத்தை ஒதுக்குவதுதானே சிறந்தது?’ என்று முடிக்கிறார் ஆசிரியர்.

ஜாய் பாப்பஷன் என்பவருடன் இணைந்து கேரி கெல்லர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், எதைச் செய்தால் வெற்றிபெறுவோம் என்று தெரியாமல், பல விஷயங்களைச் செய்துதிரிகிற நம்மைப் போன்றவர்களுக்கு  வெற்றியின் ரகசியத்தைச் சொல்லும். இந்தப் புத்தகத்தை உடனடியாக நேரத்தை ஒதுக்கிப் படித்துப் பயன் பெறலாம்.

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism