வல்லவனுக்கு 'கவணும்’ கைகொடுக்கும் என்பதை நிரூபித்துக் காட்டிய நிகழ்ச்சி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் புராதன பாலஸ்தீனத்தில் பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும், ஆடு மேய்க்கும் சிறுவன் டேவிட்டுக்கும் நடந்த சண்டையாகும். அரசன் தடுத்தும் கேளாமல் தன் கவணை மட்டுமே துணையாகக்கொண்டு, நெற்றி தவிர்த்து உடல் முழுவதும் கவசம் அணிந்திருந்த கோலியாத்தை நெற்றிப் பொட்டில் அடித்து வீழ்த்தியவன் சிறுவன் டேவிட்.

சாதாரணமாக நாம் அனைவரும் நினைப்பது என்னவெனில், உருவத்தில் பெரிதாக இருப்பவர்களுடன் மோதி ஜெயிக்க முடியாது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களினால் மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு வெல்ல முடியாது என்பதுதான். இதையேதான் நாம் நமது குழந்தை களுக்கும் காலங்காலமாகச் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஆனால், தி டிப்பிங் பாயின்ட் (The Tipping Point),, அவுட்லயர்ஸ் (Outliers),, பிளிங்க் (Blink) வரிசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள டேவிட் அண்டு கோலியாத் என்கிற புத்தகத்தில் மால்கம் கிளாட்வெல் வழக்கம்போல ஆதாரப்பூர்வமாக இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் முன்வைத் திருக்கிறார்.

மூளை சம்பந்தப்பட்ட நோய்களில் ஒன்று டிஸ்லெக்ஸியா (dyslexia) ஆகும். இந்தக் குறைகொண்டவர் களால் புரிந்து படிக்க இயலாது. ஆனால், அப்படிப்பட்ட குறையுடன் பிறந்தவர்தான் பிரபல வழக்கறிஞரான டேவிட் போயிஸ். இவர் அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்து ஐபிஎம்-முக்காகவும், மைக்ரோ சாஃப்ட்டை எதிர்த்து அமெரிக்க அரசாங்கத்துக்காகவும், அல்கோருக்கு ஆதரவாக, ஜார்ஜ் புஷ்ஸை எதிர்த்தும், ஓரினச் சேர்க்கை யினரின் திருமணத்துக்கு ஆதரவாகக் கலிஃபோர்னிய நிர்வாகத்தை எதிர்த்தும் வாதாடி வெற்றி பெற்றவர். இவருடைய நிறுவனத்தில் கிட்டத்தட்ட 200 வழக்கறிஞர்கள் பணிபுரிகிறார்கள்.

டேவிட்டுக்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாயிற்று? இவர் மிகவும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு இந்தத் திறமை பயிற்சியினாலோ அல்லது அதிர்ஷ்டத்தினாலோ வரவில்லை. படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதினால் அவர் கூர்ந்து அவதானிப்பது (observation), நினைவில் வைத்துக்கொள்வது (memory) போன்ற திறமைகளில் கவனம் செலுத்தி தனக்கு எது குறைபாடாக அமைந்ததோ, அதையே இந்தத் திறமைகளின் மூலம் அனுகூலமாக்கிக்கொண்டு வெற்றி மேல் வெற்றி பெற்றார்.

கிளாட்வெல்லின் சிறப்பு என்னவெனில், சமூக விஞ்ஞான விஷயங்களை, பயன்படக்கூடிய உள்ளுணர்வாக (actionable insights)மாற்றுவதுதான். 'விரும்பத்தக்க சிரமங்கள் (desirable difficulties)’ ’ என்று இதைக் குறிப்பிடுகிறார். டிஸ்லெக்ஸியாவினால் பாதிக்கப் பட்ட 102 தொழில்முனைவோர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வை அடிப்படையாகக்கொண்டு இந்தக் கோட்பாட்டை அவர் நிறுவ முயல்வது சரிதானா என்பது சர்ச்சைக்குரிய ஒரு விஷயம். இந்த ஆய்வைப் பெரிய அளவில் செய்யும்பட்சத்தில் ஒருவேளை 'சிரமங்கள் விரும்பக்கூடியதாக’ இல்லாமல் போனாலும் போகலாம்.

குறைந்த அளவில் மாணவர்கள் இருந்தால் ஒரு பள்ளி ஆசிரியர் அனைத்து மாணவர்களின் மீதும் நன்கு கவனம் செலுத்துவார் என நாம் அனைவரும் நினைப்பது வழக்கம். ஆனால், பல ஆய்வுகள் இதற்கு எதிர்மறையாக இருக்கிறது என்பதை மால்கம் புள்ளிவிவரங்களுடன் விரிவாக விளக்குகிறார்.

குறைந்த மாணவர்கள்கொண்ட வகுப்பறையில் யோசனைகளும், புதிய சிந்தனைகளும் ஒரு வரையறைக்குள் நின்றுவிடுகின்றன என்கிறார். அதாவது, 15 மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் நடக்கும் கலந்துரையாடலில் வெளிப்படும் யோசனைகளும், புதிய சிந்தனை களும் அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் நடக்கும் கலந்துரையாடலில் வெளிப்படும் புதிய யோசனைகளைவிட மிகவும் குறைவாகவும், தரமற்றதாகவும் இருக்கின்றன என்கிறார். அதிகப் பேர்கள் பங்கெடுக்கும் கலந்துரையாடலில் புதிய யோசனை களுக்கும், கருத்துகளுக்கும்

பஞ்சமிருக்காது என்றும், தரமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார். ஆக, ஓர் ஆசிரியருக்கு 10 அல்லது

15 மாணவர் என்கிற விகிதாசாரம் உள்ள பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் என நாம் நம்பினால் அது ஒரு மாயை.

இந்தப் புத்தகம் பம்பாயில் பிறந்து கிரிக்கெட், கால்பந்தாட்டம் என்கிற விளையாட்டுகளின் இடையே வளர்ந்து வந்த விவேக் ரணதிவே என்கிற புலம் பெயர்ந்த இந்திய அமெரிக்கரின் கூடைப்பந்தாட்டக் குழு பற்றிய கதையிலிருந்து ஆரம்பிக்கிறது. எப்படி இந்த விளையாட்டில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவர், ஒரு கூடைப்பந்தாட்டக் குழுவை

நேஷனல் பேஸ்கட்பால் லீக்’ வரை கொண்டுசென்றார் என்பதைச் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார் இந்த நூலாசிரியரான மால்கம்.

'பெரிய குட்டையில் சிறிய மீன்’ ஆக இருப்பதைவிட 'சிறிய குட்டையில் பெரிய மீன்’ ஆக இருப்பது நல்லது என்று கூறுகிறார் மால்கம். இதுதவிர, 'பேட்டில் ஆஃப் பிரிட்டன்’, 'புற்றுநோய்க்கான மருந்து’, 'சமூக நீதிக்கான போராட்டம்’ போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

மிகப் பெரிய நிறுவனங்களின் பிராண்டுகளுக்குப் போட்டியாக மிகச் சிறிய நிறுவனங்கள் தங்களின் பிராண்டுகளை அறிமுகப்படுத்தி நெருக்கடி கொடுத்து வெற்றி பெற்ற கதைகள் பல இங்கும் உள்ளன. உதாரணத்துக்கு ஒன்று, நிர்மா வாஷிங்பவுடர் அறிமுகமான கட்டத்திலும் அதற்குப் பிறகும் ஹிந்துஸ்தான் லீவர் தனது மார்க்கெட் ஷேரை படிப்படியாக இழக்க நேர்ந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

எதிரியின் பலவீனம் என்னவென்று தெரிந்துகொண்டு அதைக் குறிவைத்து செயல்பட்டால் பராக்கிரமசாலியான எதிரியை எளிதில் வெல்லமுடியும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கருத்து.

இது சாத்தியமே என்பதற்குப் பல உதாரணங்கள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)