Published:Updated:

நாணயம் லைப்ரரி : கவலையால் கஷ்டப்படுகிறீர்களா?

நாணயம் லைப்ரரி : கவலையால் கஷ்டப்படுகிறீர்களா?

நாணயம் லைப்ரரி :  கவலையால் கஷ்டப்படுகிறீர்களா?

சுயமுன்னேற்றம் குறித்து பல்வேறு புத்தகங்கள் இருக்கிறது. இருந்தாலும், சுயமுன்னேற்றம் குறித்து மிகவும் பிராக்டிக்கலாகச் சொல்லும் புத்தகமான 'வாட் யூ கேன் சேஞ்ச் அண்ட் வாட் யூ கேன் நாட்’ எனும் மார்ட்டின் இ பி செலிக்மேன் எழுதிய புத்தகத்தை இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறோம்.

எதை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும், எதை உங்களால் மாற்றிக்கொள்ளவே முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, நீங்கள் யார் என்பதை ஒப்புக்கொள்ள பயின்று கொள்ளுங்கள் என்று சொல்லும் புத்தகம் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவாக சைக்கோதெரபி என்னும் மற்றொருவர் தரும் பயிற்சிகள், கவுன்சிலிங் மற்றும் சுயமுன்னேற்ற முயற்சிகள் மூலமாகவும் நாம் வளமாக மாற முயற்சிக்கிறோம். மனச்சோர்வில் இருந்து வெளிவர என்னென்னவோ செய்து பார்க்கிறோம். சிலசமயம் சில உத்திகள் வேலை செய்கிறது. தனிமனித முயற்சியோ அல்லது மற்றொருவர் தரும் சைக்கோதெரபி ஆலோசனைகளோ நிறைய சமயங்களில் பலனளிக்காமல் போய்விடுகிறது. ஆனால், செலவுகளோ எக்கச்சக்கமாகிறது. இறுதியில் நாம் ஓர் உதவாக்கரை என்ற குற்ற உணர்ச்சி நமக்குள்ளே வந்துவிடுகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் முன்னேற்றத் துக்கான முயற்சிகள் எடுப்பத்தையே தவிர்த்துவிடுகிறோம்.

நாணயம் லைப்ரரி :  கவலையால் கஷ்டப்படுகிறீர்களா?

சிறு வயதிலிருந்தே நமக்கு அனைவரும் சொல்வதே, நம்முடைய எந்த குணத்தையும் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும் என்பதுதான். எதிலும் நம்மால் முன்னேற முடியும் என்பதை நாம் படித்த பள்ளி நமக்குச் சொல்லித் தருகிறது. அப்படி எல்லாவற்றிலும் நம்மை மாற்றிக்கொள்ளவும் முன்னேற்றிக் கொள்ளவும் முடிந்தால் அனைவருமே சிறந்த சீரிய பண்பாளராக அல்லவா இருந்திருக்க வேண்டும்.

ஆனால், நிஜத்தில் அப்படி இல்லையே! விற்கும் கலை, ஞாபகசக்தி, டைம் மேனேஜ்மென்ட், கோபத்தை அடக்குதல், போன் பேசுதல், எழுத்துப் பயிற்சி, பயத்திலிருந்து மீளுதல் எனப் பல்வேறுவிதமான பிரச்னைகளுக்கும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் புரளும் பயிற்சி வகுப்புகள் உலகமெங்கும் இருக்கின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் எல்லாம் மனிதனால் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்ற தத்துவத்தை நம்பியே பிழைப்பை நடத்துகின்றன. கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே இந்த நம்பிக்கை இருக்கிறதோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இது புரையோடிப் போயிருக்கிறது என்று சொல்லும் ஆசிரியர், ஆனால் ஆரம்பத்தில் மனிதன் தனது குணாதிசயங்களை மாற்றிக்கொள்ள முடியாது என்றே நம்பிவந்திருந்தான் என்று கூறுகிறார்.

உயிரியல் மருத்துவம் சொல்லும் கோட்பாடுகள் மூன்று. மனநோய் என்பது உடல்நோயால் வருவது. கோபதாபங்கள் மற்றும் மனநிலை மூளையில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால் வருவது. ஒருவரின் சுபாவம் (பர்சனாலிட்டி) அவருடைய மரபணுவிலிருந்து வருவது என்பதாகும் அந்த முன்றும். இந்த மூன்று கோட்பாடுகளுமே நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு எதிரானவை இல்லையா? என்று கேட்கும் ஆசிரியர், அதேசமயம்  இந்தக் கருத்துக்கு எதிர்மறையாக உள்ள உளவியலாளர்களின் கோட்பாட்டை கொஞ்சம் பாருங்கள் என்கிறார்.  

உடல் நோயை குணப்படுத்தினால் மனநோயும் குணமாகும். மருந்துகள் மனச்சோர்வைப் போக்கி உற்சாகத்தைத் தந்து மனநிலையை சீரமைக்கும். நமது சுபாவம் என்பது மாற்ற முடியாதது என்ற மூன்றும் உயிரியல் மருத்துவத்துக்கு நேரடியான எதிர்கருத்துக்கள் இல்லையா? என்று கேட்கிறார்.

நான்கு பாகங்களாக எழுதப்பட் டிருக்கும் இந்தப் புத்தகத்தில் இரண்டாவது பாகத்தில் கவலை, சோர்வு மற்றும் கோபத்தில் இருந்து மாறுவது எப்படி என்று விவரமாக எழுதியுள்ளார்.  நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஒவ்வொருநாளும் நாம் கவலை, சோர்வு, கோபம் என்ற மூன்றையுமே எதிர்கொள்கிறோம்.  இதில் கவலையைக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம். கவலையை குறைப்பது எப்படி என்பதைவிட கவலையை எப்போது குறைக்க முயற்சிக்கலாம் என்பதுதான் முக்கியம் என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி :  கவலையால் கஷ்டப்படுகிறீர்களா?

கவலைகள் நம்முடைய மனத்தில் நிலவும் சூழ்நிலை மற்றும் வெளியில் நிலவும் சூழ்நிலையால் வருகின்றன. வெளியில் நிலவும் சூழ்நிலைதான் நம் மனத்தினுள் பயத்தினை உண்டுபண்ணுகிறது. ஏனென்றால், கவலை பயத்தை உருவாக்கி பல மாற்றுத் திட்டங்களைப் போட வைக்கிறது.  வெளிச்சூழலால் படவேண்டிய நிஜக் கவலையைக் காட்டிலும் பலமடங்கு கவலைகளை நாம் மனத்தில் கொண்டிருக்கும்போது நாம் தீட்டும் திட்டங்கள் நிச்சயமாக தோல்வி அடையும். அதனாலேயே பயம் இன்னமும் கூடும். எனவே, கவலையைப் பொறுத்தவரை, வெளிச் சூழல் மனச்சூழல் என்ற இரண்டும் ஒரேயளவில் இருக்கும்போது மட்டுமே சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஆசிரியர் சொல்லும் குணம் வேட்கை (அப்சஷன்). எல்லாருக்கும் ஏதாவது ஒன்றின் மீது தீவிர ஈடுபாடு இருக்கவே செய்கிறது. இன்றைய டெக்னாலஜி உலகில் நம்முடைய நேரத்தை வீணே செலவிடுவதற்கான / கவனத்தை சிதைக்கிற விஷயங்கள் எக்கச்சக்கமாகிவிட்டன. இதை முழுவதுமாக மாற்றுவது கடினம். கொஞ்சம் குறைக்கலாம். முக்கிய வேலை இருக்கும்போது தவிர்க்கலாமே தவிர, ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியாது என்கிறார் ஆசிரியர்.

அடுத்தபடியாக, ஆசிரியர் சொல்வது வாட்டத்தை (டிப்ரஷன்). நமது முன்னோர்களைக் காட்டிலும் நம்முடைய வாட்டம் அதிகமாகவே இருக்கிறது. இன்றைய சூழலில் பத்து வயது குழந்தைக்கே டிப்ரஷன் வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒரு மனிதர் டிப்ரஷனில் இருக்கும்போது சிந்திப்பதற்கும், டிப்ரஷனில் இல்லாதபோது சிந்திப்பதற்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது. டிப்ரஷனில் இருக்கும் போது சோகமும், உற்சாகமின்மையும், செயல்பாடற்ற நிலையும் நம்மிடையே வந்து குடிகொண்டுவிடுகிறது. டிப்ரஷனில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால், அதற்கு நாம் நம்முடன் எதிர்வாதம் செய்து பழகவேண்டும். என்னவாயிடும், குடியா முழுகிவிடும் என நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டு சரிசெய்து கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி :  கவலையால் கஷ்டப்படுகிறீர்களா?

இறுதியாக, குழந்தைப் பருவ குணாதிசயங்களிலிருந்து வெளிவரச் சொல்கிறார் ஆசிரியர். குழந்தையாக இருக்கும் போது வெளி உலகமே நம்முடைய நடவடிக்கையை முடிவு செய்கிறது. நாம் வளர்ந்து முழுமனிதனான பின்பு நமது நடவடிக்கைகள் பலவும் நம்முடைய சூழ்நிலைகளை உருவாக்கவல்லதாக இருக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் வயதானபிறகும் குழந்தைப் பருவத்து குணங்கள் பலவற்றை கைவிடாததால், பல இன்னல்களுக்கு நாம் ஆளாகிறோம். இதை மாற்றிக்கொள்வது ஒன்றும் சுலபம் இல்லை என்றாலும், இந்த குணாதிசயங்களை கண்டறிந்து மாற்றினாலே முன்னேற்றம்தானே வரும் என்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் கொஞ்சம் கடினமான நடையில் இருந்தாலும், மனித சுயமுன்னேற்றம் குறித்த

விஞ்ஞானத்தைத் தெரிந்துகொண்டு முன்னேற விரும்புபவர்களுக்கு சரியானதொரு புத்தகம்! முன்னேற விருப்பமில்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன!

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில்
விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.)